செர்நோபில் அணுமின் உலை விபத்தால் உடனே நேரிட்ட விளைவுகள் -7

This entry is part [part not set] of 39 in the series 20060609_Issue

சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா

என்ன நேர்ந்ததெனக் காணச் சென்றோர்
பின்னால் சொல்ல மீளவில்லை!
தீயணைக்கப் போன பணியாளர்
தீயணைத்து
சேயணைக்க வாசலுக்கு மீளவில்லை!
நள்ளிரவில் மருத்துவ மனை சென்றோர்
பள்ளியெழும் சூரியனைக் காணவில்லை!
மாந்தர் மனதில்
புண்ணாறிப் போக வில்லை!
கதிர்கள் வீசும்
மண்ணாறிப் போக வில்லை!

செர்நோபில் நினைவுகள்

நேற்று நிகழ்ந்ததாய்த் தெரியுது!
இன்று அத்தெருவில் நடக்கிறேன்.
என்றோ ஒருநாள் தெருவா யிருந்தது!
என்றோ ஒருநாள் வீடா யிருந்தது!
வெறுமையாய் நிற்கிறது மேஜை,
விருந்துண்பார் அமர்ந்துண்ண!
ஒருவர் கூட காணப் படவில்லை!
காற்றின் திசைகாட்டி
காலநிலை அம்புக்கு எதிர்த்திசையில்,
அனைவரையும் ஓரிரவே ஏற்றி
எங்கோ
கடத்தி விட்டார்,
நகர் மீது
படையெடுத்தோர்!

செர்நோபில் சோகப் பாடல்கள்

மேம்பட்ட படைப்பு ஒன்றை உருவாக்க ஒரு திட்டம் இருக்குமானால், அதனால் விளையப் போகும் பாதிப்புகளின் முழுத் தோற்றத்தை முதலில் ஆழ்ந்து அறிந்த பிறகுதான் அதை ஆரம்பிக்க வேண்டும்.

தாமஸ் ஹார்டி [Thomas Hardy 1840–1928]

“மனித இனத்துக்கு அணுமின்சக்தி மிகவும் தேவைப் படுகிறது என்பது என் தனிப்பட்ட கருத்து. அவை விருத்தி செய்யப்பட்டு மக்களுக்கு முழுமையான பாதுகாப்பு அளிப்பவை என்று உறுதிப்பாடாக வேண்டும். அதாவது அணு உலைகள் யாவும் பூமிக்கடியில் நிறுவப்பட வேண்டும். அகில நாடுகளின் பேரவை தாமதமின்றி அணு உலைகள் எல்லாம் அடித்தளங்களில் நிறுவப்பட சட்டமியற்ற வேண்டும்.”

“செர்நோபிலில் மெய்யாக நடந்தவை” என்னும் கிரிகொரி மெத்வெதேவ் [The Truth About Chernobyl By: Grigori Medvedev] எழுதிய நூலில் தீயணைப்பாளிகள், எஞ்சினியர்கள், இயக்குநர்கள் எப்படித் தீவிரமாக முன்வந்து உழைத்து விபத்தின் கோரத்தைத் தம்மால் முடிந்த அளவு குறைத்து உயிர் நீத்தார்கள் என்பது தெளிவாகக் கூறப்பட்டிருக்கிறது.”

ஆன்டிரே ஸெக்காரோவ் [Andrei Sakharov, Russian Nobel Laureate (May 1989)]

முன்னுரை: உலக நாடுகளின் பாதுகாப்பான அணு உலைகள் போலின்றிச் செர்நோபில் மாடல் RBMK-1000 அணுமின் உலைகள் மிகவும் பிற்போக்கான முறையில், சிக்கனச் செலவில் டிசைன் செய்யப்பட்ட பூத நிலையங்கள். வியன்னாவிலிருக்கும் அகில நாட்டு அணுசக்திப் பேரவையின் [IAEA] கட்டுமான நெறிப்பாடுகளைப் புறக்கணித்து நிறுவகமானவை, RBMK அணு உலை மாடல்கள்! செர்நோபில் விபத்து நேர்ந்த பின் IAEA அணுசக்தி நிபுணர்கள், செர்நோபில் டிசைன் கோளாறுகளை முதலில் அழுத்தமாகக் குறிப்பிடாது, விபத்து இயக்குநர் செய்த மாபெரும் மனிதத் தவறுகளால் விளைந்தது என்று முடிவு செய்தனர். ஆனால் பின்னால் வெளியிட்ட உளவுத் தகவலில், டிசைன் கோளாறுகளே விபத்தின் முதன்மைக் காரணமாகக் கருதப் பட்டு, இயக்குநர் தவறுகள் இரண்டாம் நிலையைப் பெற்றன! ரஷ்ய அணு உலைகளைத் தவிர, உலக நாடுகளில் மற்ற அணு உலைகள் யாவும் உறுதியாக்கப் பட்ட காங்கிரீட் அரணுக்குள் [Reinforced Concrete] கட்டப் பட்டவை. RBMK அணு உலைகள் கதிரியக்கம் கசியாத ஒரு கோட்டை அரணுக்குள் அமைக்கப்பட வில்லை!

அடுத்து வெப்பசக்தியைக் கடத்திச் செல்லும் தணிப்பு நீரில் நீராவி மிகுந்தாலோ அல்லது வெற்றிடம் நேர்ந்தாலோ, நியூட்ரான் எண்ணிக்கை குறைவதற்குப் பதிலாகக் கூடுதலாகி, “நேர்முக வெற்றிட நியூட்ரான் மிகைவு” [Positive Void Coefficient], எனப்படும் தவறால் அணுசக்தி உற்பத்தி பன்மடங்கு மிகையாகிறது! 1986 ஏப்ரல் 26 ஆம் தேதி செர்நோபில் நான்காம் பகுதி அணு உலையில், அடுத்தடுத்து இரண்டு வெடிப்புகள் நேர்ந்தன! முதல் வெடிப்பு நேர்முக வெற்றிட நியூட்ரான் பெருக்கத்தால், வெப்பசக்தி 100 மடங்கு வெகு விரைவில் மிகையாகி, நீராவியின் அழுத்தம் மீறியதால் நிகழ்ந்தது! அடுத்த வெடிப்பைத் தூண்டியது, நீராவியும், சூடேறிய ஸிர்கோனியமும் இணைந்து, அணு உலைக்குள் ஹைடிரஜன் வாயு சேமிப்பாகி, காற்றிலுள்ள ஆக்ஸிஜன் வாயுவுடன் தீவிரமாய்ச் சேர்ந்ததால் உண்டானது! செர்நோபில் விபத்து சிறு பூகம்பம் போல் தென்பட்டது! விளைவுகளைப் பார்த்தால் சிறு பிரளயத்தின் ஒத்திகை போல் தெரிந்தது!

செர்நோபில் விபத்தின் கோர வெடிப்பில் நேர்ந்த ஆரம்ப விளைவுகள்

மனிதர் செய்த மாபெரும் தவறுகளாலும், யந்திரக் கோளாறுகளாலும், டிசைன் பழுதுகளாலும் சோதனை நிகழ்ச்சியால் தூண்டப்பட்டு அடுத்தடுத்து இரண்டு வெடிப்புகள் ஏற்படக் காரணமாயின. சுமார் 3000 மெகாவாட் வெப்பசக்தியில் ஓடும் அணுமின் உலைச் சாதனங்கள், அப்போது வெப்பசக்தி 100 மடங்கு மிகையாகி 300,000 மெகாவாட் நீராவியின் அழுத்தம் விரைவில் பேரளவில் ஏறிப் போய் அணு உலைச் சாதனங்கள் அதிரத் தொடங்கின! எரிக்கோல்கள் அடங்கிய அழுத்தக் குழல்களின் மூடிகள் ஏறி யிறங்கி நர்த்தனம் புரிந்தன! அணு உலைக்குள் கொந்தளிப்புச் சத்தங்கள் கேட்டன! பூகம்பம் போல் வெடி முழக்கங்கள் கேட்டன! காங்கிரீட் அறைகள் அசையத் துவங்கி அடி பெயர்ந்தன! நிலையத்தின் விளக்குகள் அனைத்தும் சட்டென அணைந்தன! அறைகளின் மேல்தளங்கள் பிளக்கப் பட்டு விழத் தொடங்கின! உலைக்கரு வெடித்து நிலையத்தின் மேல்தளத்தில் பெருந்துளை ஒன்று காணப்பட்டது! அணு உலையின் 1700 யுரேனிய எரிக்கோல்கள் கதிரியக்கத்தை வெளியாக்குவதுடன் உருக ஆரம்பித்துத் தணிப்பு நீருடன் இரசாயன முறையில் இணைந்தன. அதனால் நீராவி அழுத்தம் பெருகி, குழல்களில் வெடிப்புகளை [Steam Explosion in Pressure Tubes] உண்டாக்கின! முடிவில் 1000 டன் கனமுள்ள கவச உருக்குத் தட்டு [Upper Biological Shield] ஆட்டி அசைக்கப் பட்டுத் தூக்கி எறியப்பட்டு, அணு உலை வயிற்றுக்கள் பாதுகாப்பாய்க் கிடந்த கதிரியக்க எரிக்கோல்கள் மேல்தளம் திறந்ததால் வாய்திறந்து வானம் பார்த்தன!

டர்பைன் கட்டடம் தகர்ந்தது! பல்லாயிரம் ராஞ்சன் கதிர்வீசும் யுரேனிய எரிக்கோல் துணுக்குகள் நியூட்ரான், காமாக் கதிர்களை வீசிக் காணுமிடம் எல்லாம் கண்ணில் பட்டன! மிதவாக்கியான கரித்திரட்டுக் கட்டிகள் உடைந்து பல இடங்களில் சிதறி எரியத் தொடங்கின! நெளிந்த உலோகங்களும் துண்டு துண்டான காங்கிரீட் சுவர்களும் நிரம்பின! குழாய்களிலும், உடைந்த பெரும் பைப்புகளிலும் அதி வேகத்தில் கசியும் நீராவி, நிலையப் பணியாளரையும், தீயணைப்புப் படையினரையும் சுட்டுக் காயப்படுத்தின! மின்சார வடக் கம்பிகள் அறுந்து, கண்ட இடமெல்லாம் தீப்பொறிகள் பளிச்பளிசென மின்னல் அடித்தன! எரியும் கரித்திரட்டுக் கட்டிகளின் கனலும், தீயும் நிலையத்தின் மேல்தள ஆஷ்·பால்ட்டைப் [Ashphalt Floor Roof] பற்றி மூச்சை அடைக்கும் கரும்புகை மண்டலம் கிளம்பியது. நீராவி, புகை மூட்டம், கதிரியக்க முகில் ஆகிய மூன்றும் காற்றுத் தள்ளும் திக்கில் சென்று அண்டை நாடுகளில் புகுந்தன! அத்தனை ஆரம்ப வெடிப்பு நிகழ்ச்சிகளும் பொழுது விடிவதற்குள் முடிந்து விட்டன!

பொழுது விடிந்ததும் நான்காவது யூனிட்டில் அணுமின் உலை காணப்பட வில்லை! உலை யிருந்த தளத்தில் பெருந் தீக்குழி ஒன்றுதான் கனலுடன் காணப்பட்டது! அழைக்கப்பட்ட தீயணைப்புப் படையினர் அதிகாலையில் [1:45 AM] ஆஷ்·பால்ட் எரியும் டர்பைன் கட்டட மேல்தளத்துக்கு ஏறி முதலில் புகைத்தீயை அணைக்க முற்பட்டார்! அரை மணி நேரத்திற்குள் 512 தீயணைப்பாளரும், நிலையப் பணியாளரும் தீவிரக் கதிரியக்கச் சூழ்நிலையில் வேலை செய்து புகை மூட்டம் கண்ணையும், மூக்கையும் பாதிக்க, கோரமான பீட்டாக் கதிரடியும் [Severe Beta Dose] வாங்கி மருத்துவ மனைக்குச் செல்ல நேர்ந்தது! 780 ரெம் [780 Rems] கதிரடி பெற்ற பியோட்டர் [Piotr Palamarchuk] என்பவர் நல்ல வேளை பிழைத்துக் கொண்டார்! வாலரி [Valeri Khodemchuk] என்பவர் வெடிப்பில் சீக்கி அக்கணமே மாண்டார்! விலாடிமிர் [Vladimir Shasenok] என்பவர் காலை 5 மணிக்கு வெடிக் காயத்தாலும், கதிரடியாலும் காலமானார்! ஆனால் முதல் நாள் தீமூட்டத்தில் பாதுகாப்புப் பணிபுரிந்த 29 பணியாளரும், தீயணைப்புப் படையினரும் மருத்துவ மனைக்குப் போனவர் திரும்பி வீட்டுக்கு வந்து மனைவி, மக்களைக் காணவில்லை!

விஞ்ஞானப் பொறியியல் நிபுணர்களும், ராணுவப் படையினரும், முதல் நாள் பிரளயக் காட்சிக்குப் பிறகு விபத்தின் கோரத்தைத் தணிக்க அழைக்கப் பட்டார்கள். என்ன செய்வது, எங்கே துவங்குவது, எப்படிக் கையாள்வது என்பது அறிவாளிகளுக்கும் தெரியவில்லை! முதலில் தீயை அணைக்க முடிவு செய்யப் பட்டது. 1700 டன் கரித்திரட்டு [Graphite] எரிந்து புகை எழுந்து கதிர்வீச்சுகள் வெளியே சூழ்மண்டலத்தில் பரவுவதைக் குறைக்க வேண்டும். அங்கிங்கெனாதபடி எங்கும் கதிரியக்கத் துணுக்குகள் சிதறிக் கிடப்பதால், கரிக்கட்டிகளின் தீயை அணைக்க இரண்டு மாதம் எடுக்கலாம்! ஒரு பயனுள்ள திட்டம் உருவானது. ஹெலிகாப்டர் மூலமாக முதலில் நியூட்ரான்களை விழுங்கி காமாக் கதிர்களுக்குக் கவசம் அளிக்கவும், தீயை விரைவில் அணைக்கவும் பேரளவு மணலுடன் போரான், ஈயம், டாலமைட் [Sand with Boron, Lead, Dolomite] ஆகியவற்றைக் கொட்டும் திட்டமே அது!

அத்திட்டம் கடைப்பிடிக்கப் பட்டு இரண்டாம் நாள் முதல் ஆறாம் நாள்வரை நீடித்தது. ஆனால் அத்திட்டம் முறையானதாகத் தோன்றவில்லை. காரணம், உள்ளெரியும் நெருப்பை மணல் மூடி யுரேனிய எரிக்கோல்கள் கனல் பெருகி உருகித் தளத்தில் துளையிட்டுக் கீழே உள்ள “தணிப்பு நீர்த் தடாகத்தின்” [Suppression or Bubbler Pool] நீரோடு சேர்ந்து பேராபத்தை உண்டாக்கும் என்று அஞ்சப்பட்டது! மகா தீவிரமான யுரேனியம்-நீர் ரசாயன இயக்கம் [Violent Uranium Water Reaction] வெடிப்பானால் மூன்றாவது வெடிப்பு எல்லாவற்றையும் விடப் பெரிதாகி அணு உலைச் சிதைவுகள் அதிகமாகும். அணு உலைக் கதிரியக்கக் கழிவுகள் நீருடன் கலந்து, வெளியேறித் தெருவில் ஆறாய் ஓடும்! அதைத் தவிர்க்க வேண்டுமானால் யாராவதொருவர் அணு உலைக் கடியில் புகுந்து, தடாகத்தில் நீந்தி கழிவு நீக்கும் குழாயைத் திறந்துவிட வேண்டும்!

முன்வந்த மூன்று தீரர்கள் சீர்குலைந்து கதிர்வீசும் அணு உலையின் அடிப்பகுதிக்கு நுழைந்து, தணிப்புத் தடாகத்தில் பாய்ந்து குழாயைத் திறந்துவிட்டு நீரை வெளியேற்றினார். ஐயமின்றி மகா தீரச் செயலது! ஒருபெரும் அபாயம் முற்றிலும் நீக்கப்பட்டது. அடுத்து மிக்க சூடேறிய 1700 யுரேனிய எரிக்கோல்களின் வெப்பத்தைக் கடத்த அபாய நீரோட்டம் திறந்து விடப்பட்டு, அதுவேறு தனியாக தடாகத்திற்கு மேலுள்ள கீழ்த்தளத்தில் [Basement Floor] நிரம்பியுள்ளது! அந்த அபாயநீர் தேக்கமும், யுரேனிய உலோகம் படாமல் நீக்கமடைய வேண்டும். விபத்து நேர்ந்த ஆறாவது நாள் ஐந்து தீயணைப்பாளர் 2 கிலோ மீடர் தீக்குழல் வடத்தை [Fire Hose] அமைத்து, அந்த அபாய நீர்த் தேக்கத்தையும் பம்ப்புகளால் அகற்றினார்.

[தொடரும்]

தகவல்:

1. Chernobyl 20 Years On: UN Finds Impact of Reactor Disaster Much Less Than Feared, But Few are Reassured. By: Mara D. Bellaby Associated Press [Sep 5, 2005 & Apr 23, 2006]

2. A Trip to Chernobyl By Awake Writer in Ukraine “Awake” [April 2006]

3. Remember Chernobyl Day (April 26, 1986) – 20 Years After

4. Chernobyl Day Action: Wednes day (26 April 1986) By: Fang Bot [April 24, 2006] From: [http://www.chernobyl-children.com/, http://perth.indymedia.org]

5. Chernobyl Accident, Nuclear Issues Briefing Paper 22 [March 2006]

6. Children of Chernobyl Belarus “Two Decades After the Disaster, Chernobyl’s Children Struggle to Live By: Anatol Klascuk [http://indexline.org/en/news/articles/2006/belarus-childern-of-chernoby.shtml]

7. Chernobyl Radiation Still Lingering, Experts Say By: Associated Press [Nov 15, 2004]

8. Officials Worry About Chernobyl Reactor Cracking Seal By: Associated Press [April 23, 2006]

9. Chernobyl Debate Still Rages On 20th Anniversary By: Alec Gazdic CTV.ca News [Apr 24, 2006]

10 Chernobyl Death Toll Will Top 90,000: Greenpeace Report By: Associated Press [Apr 18, 2006]

11 The Truth About Chernobyl By: Grigori Medvedev [1991]

12 The Aftermath of Chernobyl By Grigori Medvedev [1993]

13 How Safe? Three Mile Island, Chernobyl & Beyond By: James Megaw [1987]

14 Nuclear Energy Agency (NEA), France: Chernobyl Assessment of Radiological & Health Impact [2002 Update]

15 Nuclear Safety & The G7 Summit Reports (1991-2000) -A Contradiction in Terms? [http://archive.greenpeace.org/~comms/nukes/chernob/rep01.html (Nov 5, 2003)]

16. Safety Benefits of Risk Assessment at the U.S. Nuclear Power Plants [http://www.nei.org/ (March 2002)]

17. Nuclear Power, From Physics to Politics By: Laurence Pringle [1979]

18. Chernobyl: The True Scale of Accident, Joint News Release By: WHO/IAEA/UNDP -20 Years Later a UN Report Provides Definite Answers & Ways to Repair Lives [2005] [www.who.int/mediacentre/news/releases/2005/pr38/en/print.html]

19. Energy Bill Speeds up Nuclear Proliferation, Stifles Competition from Renewable Energy
[www.world-wire.com/news]

20. Chernobyl’s Legacy: Health, Environmental & Socio-Economic Impacts By: Chernobyl Forum [WHO, IAEA, UNDP, FAO, NNEP, UN-OCHA, UNSCEAR, World Bank, Govts of Belarus, Russia, Ukraine (2003-2005)] Second Revised Edition. – Later Enlarged 600 Page Report (Sep 5, 2005).

21. Chernobyl’s Legacy: Health Impacts By K.S. Parthasarathy, Former AREB Secretary [www.thehindu.com/] Sep 15, 2005.

22. BBC News, Chernobyl’s Legacy Still Undecided By Mark Kinver BBC Science Reporter [Apr 24, 2006]

23. Chernobyl Reactor Accident 1986 By: Robert Johnson [May 11, 2005]

24. The Nuclear History Site/Historical Safety Record Vi Lenin – Chernobyl

25. Nuclear Energy Agency (NEA), France: Chernobyl Accident Sequence, The RBMK Reactor, Events Leading to the Accident, The Graphite Fire [2002 Update]

26 RBMK Reactors – Nuclear Issues Briefing Paper # 64A [Feb 2002]

******************

jayabarat@tnt21.com [June 8, 2006]

Series Navigation

சி. ஜெயபாரதன், கனடா

சி. ஜெயபாரதன், கனடா

செர்நோபில் அணுமின் உலை விபத்து எவ்விதம் தூண்டப்பட்டது? -6

This entry is part [part not set] of 43 in the series 20060602_Issue

சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா

“மனிதக் கைகள் மூளைக்குத் தெரியாமல் செய்த தவறை அறிந்தவுடனே அவசரமாய்த் திருத்த தாவிச் செல்கையில் அடுத்தும் ஒரு தவறைப் புரிகின்றன! பிறகு இரண்டு தவறுகள் நான்கு பழுதுக் கோளாறுகளை உண்டாக்கும்! அப்படியே தவறுச் சங்கிலித் தொடரியக்கம் விரிந்து பரவிக் கண்ணிமைப் பொழுதில், மீள முடியாத விபத்தின் கோர தாண்டவம் அரங்கேறுகிறது!”

கட்டுரையாளர்

தேடலை நாமென்றும் மூட லாகாது!
தேடலின் முடிவில் வந்து சேர்வது,
பயணம் துவக்கிய பழைய பூதளம்!
முதல்முறை புரிந்து கொள்ளும் ஆய்வகம்!

டி.எஸ். எலியட் நோபெல் பரிசுக் கவிஞர் [T.S. Elliot (1888-1965)]

ஆழ்ந்த அறிவு மென்மேலும் வளரட்டும்!
அதனால் நம்மீது நம்பிக்கை பெருகட்டும்!
அறிவும், ஆன்மாவும் முன்போல் ஒன்றி
உறவுடன் இன்னிசை ஆக்கட்டும்!

ஆல்·பிரெட் லார்டு டென்னிஸன் [Alfred Lord Tennyson (1809-1892)]

மேம்பட்ட படைப்பு ஒன்றை உருவாக்க ஒரு பாதை இருக்குமானால், அதனால் விளையப் போகும் பாதிப்புகளின் முழுத் தோற்றத்தை முதலில் ஆழ்ந்து அறிந்த பிறகுதான் அதை ஆரம்பிக்க வேண்டும்.

தாமஸ் ஹார்டி [Thomas Hardy 1840–1928]

நமக்கு வேண்டிய கோட்டைக் கொத்தளங்களை நாம் முதலில் உருவாக்குகிறோம். பிறகு நமது கோட்டைக் கொத்தளங்கள் பின்னால் நம்மை உருவாக்குகின்றன!

வின்ஸ்டன் சர்ச்சில் [1874-1965]

“சில ஆண்டுகளில் கேள்விகள் மட்டும் எழுகின்றன! மற்ற சில ஆண்டுகளில் அவற்றுக்குப் பதில்கள் கிடைக்கின்றன!”

ஸோரா நீல் ஹர்ஸ்டன் [Zora Neale Hurston (1891-1960)]

“மனித இனத்துக்கு அணுமின்சக்தி மிகவும் தேவைப் படுகிறது என்பது என் தனிப்பட்ட கருத்து. அவை விருத்தி செய்யப்பட்டு மக்களுக்கு முழுமையான பாதுகாப்பு அளிப்பவை என்று உறுதிப்பாடாக வேண்டும். அதாவது அணு உலைகள் யாவும் பூமிக்கடியில் நிறுவப்பட வேண்டும். அகில நாடுகளின் பேரவை தாமதமின்றி அணு உலைகள் எல்லாம் அடித்தளங்களில் நிறுவப்பட சட்டமியற்ற வேண்டும்.”

“செர்நோபிலில் மெய்யாக நடந்தவை” என்னும் கிரிகொரி மெத்வெதேவ் [The Truth About Chernobyl By: Grigori Medvedev] எழுதிய நூலில் தீயணைப்பாளிகள், எஞ்சினியர்கள், இயக்குநர்கள் எப்படித் தீவிரமாக முன்வந்து உழைத்து விபத்தின் கோரத்தைத் தம்மால் முடிந்த அளவு குறைத்து உயிர் நீத்தார்கள் என்பது தெளிவாகக் கூறப்பட்டிருக்கிறது.”

ஆன்டிரே ஸெக்காரோவ் [Andrei Sakharov, Russian Nobel Laureate (May 1989)]

முன்னுரை: செர்நோபில் விபத்து நேர்ந்த 1986 ஆண்டுக் காலங்களில் பழைய சோவியத் ரஷ்யா இரண்டு மாடல் அணுமின் நிலையங்களை டிசைன் செய்து நிறுவி வந்தது. கொதிநீர் அணுமின்னுலை [RBMK Model Boiling Water Reactor Type (BWR)], அழுத்தநீர் அணுமின்னுலை [VVER Model Pressurised Water Reactor Type (PWR)] என்று பெயருள்ள இருவித நிலையங்கள். செர்நோபில் மாடலான RBMK அணுமின் உலைகள் சோவியத் கூட்டரசு நாடுகளில் மட்டுமே கட்டப் பட்டன! VVER மாடல்கள் வெளிநாடுகளுக்காக டிசைன் செய்யப் பட்டவை. தமிழ் நாட்டின் கூடங்குளத்தில் இரட்டை அணுமின் உலைகள் ரஷ்யாவின் VVER-1000 மாடலில் கட்டுமானமாகி வருகின்றன. RBMK-1000 மாடல்கள் மேற்கு ரஷ்யப் பகுதிகளில் குர்ஸ்க், இக்நாலினா, லிதுவானியா, யுக்ரேயின், செர்நோபில் [Kursk, Ignalina, Lithuania, Ukraine, Chernobyl] ஆகிய இடங்களில் நிறுவகமாகி யுள்ளன. முந்தய சோவியத் கூட்டரசு நாடுகளில் ரஷ்யா கட்டிய மொத்தம் 18 RBMK அணுமின் உலைகளில் பின்னால் 14 நிலையங்கள் மட்டுமே செர்நோபில் விபத்துக்குப் பிறகு அபாய வெப்பத் தணிப்பு ஏற்பாடுகள் மேம்படுத்தப்பட்டு மின்சாரம் பரிமாறி வந்தன! தற்போது அவையும் ஏறக்குறைய நிரந்தரமாக நிறுத்தப் பட்டுள்ளன என்று தெரிகிறது!

RBMK-1000 அணுமின் உலைகளின் பண்புகள்

உலக நாடுகளின் பாதுகாப்பான அணு உலைகள் போலின்றிச் செர்நோபில் மாடல் RBMK-1000 அணுமின் உலைகள் மிகவும் பிற்போக்கான முறையில், சிக்கனச் செலவில் டிசைன் செய்யப்பட்ட பூத நிலையங்கள். வியன்னாவிலிருக்கும் அகில நாட்டு அணுசக்திப் பேரவையின் [IAEA] கட்டுமான நெறிப்பாடுகளைப் புறக்கணித்து நிறுவகமானவை, RBMK அணு உலை மாடல்கள்! செர்நோபில் விபத்து நேர்ந்த பின் IAEA அணுசக்தி நிபுணர்கள், செர்நோபில் டிசைன் கோளாறுகளை முதலில் அழுத்தமாகக் குறிப்பிடாது, விபத்து இயக்குநர் செய்த மாபெரும் மனிதத் தவறுகளால் விளைந்தது என்று முடிவு செய்தனர். ஆனால் பின்னால் வெளியிட்ட உளவுத் தகவலில், டிசைன் கோளாறுகளே விபத்தின் முதன்மைக் காரணமாகக் கருதப்பட்டு, இயக்குநர் தவறுகள் இரண்டாம் நிலையைப் பெற்றன!

ரஷ்ய அணு உலைகளைத் தவிர, உலக நாடுகளில் மற்ற அணு உலைகள் யாவும் உறுதியாக்கப் பட்ட காங்கிரீட் அரணுக்குள் [Reinforced Concrete] கட்டப் பட்டவை. RBMK அணு உலைகள் கதிரியக்கம் கசியாத ஒரு கோட்டை அரணுக்குள் அமைக்கப்பட வில்லை! அடுத்து வெப்ப சக்தியைக் கடத்திச் செல்லும் தணிப்பு நீரில் நீராவி மிகுந்தாலோ அல்லது வெற்றிடம் நேர்ந்தாலோ, நியூட்ரான் எண்ணிக்கை குறைவதற்குப் பதிலாகக் கூடுதலாகி, “நேர்முக வெற்றிட நியூட்ரான் மிகைவு” [Positive Void Coefficient], எனப்படும் தவறால் அணுசக்தி உற்பத்தி பன்மடங்கு மிகையாகிறது! ஆனால் உலகின் பெரும்பான்மையான அணு உலைகளில் அப்பண்பு சீராக்கப்பட்டு “எதிர்முக வெற்றிட நியூட்ரான் குறைவு” [Negative Void Coefficient] முறையில், தணிப்புநீர் வெற்றிடத்தால் வெப்பசக்தி ஆக்கம் குன்றுகிறது. நேர்முக வெற்றிட மிகையால் நியூட்ரான் எண்ணிக்கை பெருகும் போது, போரான் கார்பைடு தடுப்பக் கோல்கள் [Neutron Absorbing Control or Shutdown Rods] சுயமாக அணு உலைக்குள் கீழிறங்கி, வெப்பசக்தி ஏறாமல் நியூட்ரான்களை விழுங்க வேண்டும். RBMK யில் அடுத்த டிசைன் கோளாறு நியூட்ரான்களின் வேகத்தைக் குறைக்க “மிதவாக்கியாக” கிரா·பைட் எனப்படும் கரித்திரட்டு [1700 Ton Graphite Moderator] பயன்படுத்தப் பட்டது. அத்தனை பேரளவுக் கரித்திரட்டுக் கட்டிகள் அணு உலைப் பரிமாணத்தை மிகவும் பெரிதாக்கிக் கோட்டை அரணைக் கட்ட முடியாதவாறு பெரும்நிதிச் செலவைக் குறைக்க நேரிட்டது!

1986 ஏப்ரல் 26 ஆம் தேதி செர்நோபில் நான்காம் பகுதி அணு உலையில், அடுத்தடுத்து இரண்டு வெடிப்புகள் நேர்ந்தன! முதல் வெடிப்பு நேர்முக வெற்றிட நியூட்ரான் பெருக்கத்தால், வெப்பசக்தி 100 மடங்கு வெகு விரைவில் மிகையாகி, நீராவியின் அழுத்தம் மீறியதால் நிகழ்ந்தது! அடுத்த வெடிப்பைத் தூண்டியது, நீராவியும், சூடேறிய ஸிர்கோனியமும் இணைந்து, அணு உலைக்குள் ஹைடிரஜன் வாயு சேமிப்பாகி, காற்றிலுள்ள ஆக்ஸிஜன் வாயுவுடன் தீவிரமாய்ச் சேர்ந்ததால் உண்டானது! முதல் வெடிப்பும், இரண்டாம் வெடிப்பும் எவ்விதம் அணு உலையில் ஏற்பட்டன என்பதைக் காண்போம்.

செர்நோபில் விபத்து எவ்விதம் தூண்டப் பட்டது?

1986 ஏப்ரல் 25 ஆம் தேதி திட்டப்படி நான்காம் பகுதி அணு உலை ஆண்டு தோறும் செய்யப்படும் பராமரிப்புப் பணிகளுக்காக நிறுத்தமடையத் தயாராகிக் கொண்டிருந்தது. நிறுத்தப்படும் முன்பாக எஞ்னியர்கள் ஒரு முக்கிய சோதனையை செய்யத் திட்டமிட்டிருந்தனர். அணு உலை ஓடிக் கொண்டிருந்தாலும் அல்லது ஓய்விலிருந்தாலும், உண்டாகும் வெப்ப சக்தியைத் தணிப்பு நீர் எப்போதும் கடத்திச் செல்ல வேண்டும். அதற்கு மூன்று விதமான வெப்பத் தணிப்பு ஏற்படுகள் அமைக்கப் பட்டுள்ளன. 1. பிரதம வெப்பத் தணிப்பு ஏற்பாடு [Main Heat Transport Water System] அணு உலையின் 3200 MWt வெப்பத்தைக் கடத்தி, நேரடியாக நீராவி உண்டாக்குவது. அணு உலை யியங்கும் போது எட்டுப் பம்ப்புகள் அப்பணியைச் செய்யும். 2. அணு உலை நிறுத்தமாகிப் பராமரிப்பு வேளைகளில் தேவைப்படும் வெப்பத் தணிப்பு ஏற்பாடு [Shutdown Cooling System]. 3. நிலையத்தின் மின்சார ஆற்றல் தவறும் சமயத்தில் டீசல் ஜெனனி யியங்கி மின்சாரம் பரிமாறும் வரை, வெப்பத் தணிப்பு செய்ய தேவைப்படும், அபாய உலைத் தணிப்பு ஏற்பாடு [Emergency Core Cooling System].

திட்டமிட்ட சோதனை இதுதான்: நிலையத்தின் மின்சாரப் பரிமாற்றம் தவறி யிழக்கப்பட்டால், சுயமாக டீசல் எஞ்சின் ஜெனனி யியங்கி முக்கியமான சாதனங்களுக்கு மின்சாரம் அனுப்பப்படும். மெயின் டர்பைன் ஓட்டம் தடைப்பட்டு வேகம் தணியும் போது உண்டாகும் மின்சார ஆற்றல், டீசல் ஜெனனித் தானாக இயங்கி மின்சாரம் தரும் வரையில், அபாயத் தணிப்புநீர் பம்ப்புகளை ஓட்ட முடியுமா என்பதைக் கண்டறிவதுதான் சோதனையின் நோக்கம். மின்சார உற்பத்திக் குழுவினர் செய்ய வேண்டிய அந்த சோதனையின் விபரங்கள், அணு உலை யியக்குநர் குழுவினருடன் முதலில் சரிவரப் பகிர்ந்து கொள்ளப்பட வில்லை. சோதனைக் குழுவின் அதிபதி, இயக்குநர் அதிபதி, அணு உலைப் பாதுகாப்பு அதிபதி ஆகியோருடன் சோதனை விபரங்கள் விவாதிக்கப்பட வில்லை. அதனால் திட்டத்தில் பாதுகாப்பு முறைகளோ, அபாய எதிர்பார்ப்புகளோ அல்லது இயக்குநர் பின்பற்றும் பாதைகளோ முழுமையாகக் குறிப்பிடப்பட வில்லை.

சோதனைத் திட்டத்தின்படி செய்த முதல் மனிதத் தவறு, அணு உலை இயக்க நெறி மீறல் : அபாய அணு உலை வெப்பத் தணிப்பு ஏற்பாடு நிறுத்தம் செய்யப்பட்டு முடக்கப் பட்டது. அணு உலைப் பாதுகாப்புக் கண்காணிப்பாளர் [Reactor Safety Officer] அனுமதி யின்றி அப்படிச் செய்வது மாபெரும் “நெறி மீறல்” [Regulatory Violation]. மற்ற உலக நாடுகளின் அணு உலைகளில் நிகழ முடியாத, ஒரு சீர்கெட்ட ரஷ்யப் பண்பாடிது! சோதனை ஆரம்பிக்கும் முன்பு அணுமின் உலை பாதி ஆற்றலில் (500 MWe) இயங்கியது. சோதனைத் திட்டத்தை ஆரம்பிக்க ஆற்றலின்னும் குறைக்கப் பட்டது. ஆனால் நியூட்ரான் எண்ணிக்கை குறைக்கப் பட்டவுடன், உலையில் ஸெனான் விஷம் [Xenon Poison] பெருகியதால் ஆற்றல் எதிர்பாரதவாறு 10 MWe அளவுக்குக் குன்றியது. ஆரம்பத்தில் 300 MWe ஆற்றலிலிருந்து குறைத்திருந்தால் அவ்விதம் நிகழ்ந்திருக்காது. மேலும் RBMK-1000 அணு உலைகள் மிகக் குன்றிய ஆற்றலில் [10 MWe] ஓடும் போது கட்டுப்படுத்த முயன்றால், பாதுகாக்க முடியாதபடி வெப்பசக்தி நிலைபெறாமல் தாறுமாறாக ஏறி யிறங்கும்!

அணு உலை இயக்குநர் நியூட்ரான் விழுங்கும் கட்டுப்பாடுக் கோல்களைக் கையாட்சிக்கு மாற்றி [Control Rod Operation By Manual Control] ஆற்றலைச் சுயக் கட்டுப்பாட்டு முறையில் 250-330 MWe ஆக ஏற்ற முயன்றனர். ஸெனான் விஷத்தை ஈடு செய்ய, நியூட்ரான் விழுங்கிகள் கையாட்சி முறையில் மேலே தூக்கப் பட்டன! அப்போது அணு உலை ஆற்றல் 65 MWe அளவில் நிலையானது. அணு உலை இயக்க நெறிப்படி, நியூட்ரான் பெருக்கத்தை மீற விடாமல் தடுக்கக் குறைந்தது 30 விழுங்கிகள் எப்போதும் அணு உலையுள் கீழிறக்கப்பட வேண்டும். ஆனால் அன்று அந்த நெறியும் மீறப்பட்டு அப்போது 6-8 கோல்கள் மட்டும் பயன்படுத்தப் பட்டு மற்றவை தூக்கப்பட்டன. மேலும் திடீரென அணுசக்தி குன்றிய நிலையில் தாறுமாறாகப் போனால், நியூட்ரான் விழுங்கிகளைக் கீழிறக்கி அணு உலை நிறுத்தமாக 20 வினாடிகள் எடுக்கும். அவ்வித மெதுவான தடுப்பு முறையும் ஒருவித டிசைன் கோளாறே!

அப்போது எதிர்பாராமல் வெப்பம் கடத்தும் தணிப்பு நீரோட்டம் அதிகமாகி, அணு உலை நீராவியின் அழுத்தம் குன்றியது. பொதுவாக அவ்விதம் நீராவி அழுத்தம் குன்றினால், வெற்றிட நியூட்ரான் மிகைவைத் தடுக்கச் சுயமாக நியூட்ரான் விழுங்கிகள் கீழிறங்கி அணு உலை நிறுத்தம் அடையும். ஆனால் நியூட்ரான் விழுங்கிகள் அன்றைய தினம் கையாட்சி முறைக்கு [Manual Control] மாற்றப் பட்டதால், அணு உலை நிறுத்தமாக வில்லை! நீராவியைப் பெருக்க வெப்பசக்தி ஆற்றலைத் தற்போது அதிமாக்க, ஏறக்குறைய கடைசி 6-8 கட்டுப்பாடுக் கோல்களும், கையாட்சியில் மேலே தூக்கப் பட்டன! ஆனால் வெப்பம் மிகுந்து நீராவி பெருகவில்லை! அணு உலை ஆற்றல் குன்றிய அளவில் நிலை பெற முடியாமல் திக்குமுக்காடிப் போனது! நீராவி அழுத்தம் குறைந்து போய், நியூட்ரான் எண்ணிக்கை பெருக ஆரம்பித்தது! அத்தருணமே அபாய பூதத்தின் எழுச்சிக்குத் தூண்டலானது!

மனிதக் கைகள் அடுத்தோர் தவறைச் செய்தன. அணு உலை இயக்குநர் நீராவியின் அழுத்தத்தை அதிக மாக்க, வெப்பசக்தி தணிக்கும் நீரோட்டத்தை குறைத்தார். அதே சமயத்தில் நிற்கப் போகும் டர்பைன்-ஜனனியின் ஆற்றலில் ஓடும் தணிப்புநீர்ப் பம்ப்புகளின் ஓட்டமும் குன்றி நீரோட்டம் அணு உலைக்குள் குறைந்து கொண்டே வந்தது! நீரோட்டம் குன்றிப் போய் அணு உலையில் நீராவியின் அழுத்தம் குறைந்து வெற்றிடங்கள் பெருகத் தொடங்கின! அப்போது “வெற்றிட நியூட்ரான் மிகைவு” [Positive Void Coefficient] என்னும் அடுத்த டிசைன் பழுது, பூத வடிவில் தலைதூக்கியது! அணு உலைக்குள் நீரோட்டம் தணிந்து கிரா·பைட் கட்டிகள் மிதவாக்கிய நியூட்ரான்களின் எண்ணிக்கை பன்மடங்கு பெருகியது! மேலே தூக்கில் தொங்கும் போரான் கார்பைடு நியூட்ரான் விழுங்கிகளை வேகமாகக் கையாட்சியில் கீழிறக்க முடியவில்லை! அதிர்ச்சியுற்ற இயக்குநர் மீறிச் செல்லும் 100 மடங்கு வெப்பசக்தி ஏற்றத்தைக் குறைக்க வழியின்றித் தடுமாற்றமும் பதட்டமும் அடைந்தனர்! சுமார் 3000 மெகாவாட் வெப்பசக்தியில் ஓடும் அணு உலைச் சாதனங்கள் அப்போது 300,000 மெகாவாட் வெப்பசக்தி அழுத்தம் விரைவில் ஏறிப்போய் விரிந்து, விண்டு, வெடித்து, இடிமுழக்கித் துண்டு துண்டாகி சிதறிப் போயின!

செர்நோபில் விபத்தின் கோர வெடிப்பு விளைவுகள்

[தொடரும்]

தகவல்:

1. Chernobyl 20 Years On: UN Finds Impact of Reactor Disaster Much Less Than Feared, But Few are Reassured. By: Mara D. Bellaby Associated Press [Sep 5, 2005 & Apr 23, 2006]

2. A Trip to Chernobyl By Awake Writer in Ukraine “Awake” [April 2006]

3. Remember Chernobyl Day (April 26, 1986) – 20 Years After

4. Chernobyl Day Action: Wednes day (26 April 1986) By: Fang Bot [April 24, 2006] From: [http://www.chernobyl-children.com/, http://perth.indymedia.org]

5. Chernobyl Accident, Nuclear Issues Briefing Paper 22 [March 2006]

6. Children of Chernobyl Belarus “Two Decades After the Disaster, Chernobyl’s Children Struggle to Live By: Anatol Klascuk [http://indexline.org/en/news/articles/2006/belarus-childern-of-chernoby.shtml]

7. Chernobyl Radiation Still Lingering, Experts Say By: Associated Press [Nov 15, 2004]

8. Officials Worry About Chernobyl Reactor Cracking Seal By: Associated Press [April 23, 2006]

9. Chernobyl Debate Still Rages On 20th Anniversary By: Alec Gazdic CTV.ca News [Apr 24, 2006]

10 Chernobyl Death Toll Will Top 90,000: Greenpeace Report By: Associated Press [Apr 18, 2006]

11 The Truth About Chernobyl By: Grigori Medvedev [1991]

12 The Aftermath of Chernobyl By Grigori Medvedev [1993]

13 How Safe? Three Mile Island, Chernobyl & Beyond By: James Megaw [1987]

14 Nuclear Energy Agency (NEA), France: Chernobyl Assessment of Radiological & Health Impact [2002 Update]

15 Nuclear Safety & The G7 Summit Reports (1991-2000) -A Contradiction in Terms? [http://archive.greenpeace.org/~comms/nukes/chernob/rep01.html (Nov 5, 2003)]

16. Safety Benefits of Risk Assessment at the U.S. Nuclear Power Plants [http://www.nei.org/ (March 2002)]

17. Nuclear Power, From Physics to Politics By: Laurence Pringle [1979]

18. Chernobyl: The True Scale of Accident, Joint News Release By: WHO/IAEA/UNDP -20 Years Later a UN Report Provides Definite Answers & Ways to Repair Lives [2005] [www.who.int/mediacentre/news/releases/2005/pr38/en/print.html]

19. Energy Bill Speeds up Nuclear Proliferation, Stifles Competition from Renewable Energy
[www.world-wire.com/news]

20. Chernobyl’s Legacy: Health, Environmental & Socio-Economic Impacts By: Chernobyl Forum [WHO, IAEA, UNDP, FAO, NNEP, UN-OCHA, UNSCEAR, World Bank, Govts of Belarus, Russia, Ukraine (2003-2005)] Second Revised Edition. – Later Enlarged 600 Page Report (Sep 5, 2005).

21. Chernobyl’s Legacy: Health Impacts By K.S. Parthasarathy, Former AREB Secretary [www.thehindu.com/] Sep 15, 2005.

22. BBC News, Chernobyl’s Legacy Still Undecided By Mark Kinver BBC Science Reporter [Apr 24, 2006]

23. Chernobyl Reactor Accident 1986 By: Robert Johnson [May 11, 2005]

24. The Nuclear History Site/Historical Safety Record Vi Lenin – Chernobyl

25. Nuclear Energy Agency (NEA), France: Chernobyl Accident Sequence, The RBMK Reactor, Events Leading to the Accident, The Graphite Fire [2002 Update]

26 RBMK Reactors – Nuclear Issues Briefing Paper # 64A [Feb 2002]

******************

jayabarat@tnt21.com [June 1, 2006]

Series Navigation

சி. ஜெயபாரதன், கனடா

சி. ஜெயபாரதன், கனடா

செர்நோபில் அணுமின் உலை விபத்தின் காரணங்கள் -5

This entry is part [part not set] of 39 in the series 20060526_Issue

சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா

கதிர்வீச்சு சிந்தும் கருமுகில் அடியில்,
அதிர்ந்து போய்
அவநம்பிக்கை பெருகி
உதிர்ந்து கருகும்
மாந்தர்க்கு
ஊக்கமும், உதவியும் அளிப்பீர்!
மேலிருந்து பொழியும் கதிர் மழையை
நீக்கி யார்தான் எங்கள்
நிரந்தரத் துன்பத்தைத் தணிப்பார்?

செர்நோபில் பாடல்கள் [மரண நரகங்கள்]

“ஆகாயத்தில் விமானம் பறந்து செல்லும் போது, விமானிகள் எஞ்சின்களைப் பரிசோதனை செய்வது போன்றது செர்நோபில் விபத்தை உண்டாக்கிய அணு உலை ஆய்வு! … வியன்னா அணுசக்திப் பேரவையில் விபத்தைப் பற்றி உரையாற்றிய போது, செர்நோபிலைப் பற்றி நான் பொய் எதுவும் சொல்ல வில்லை. ஆனால் உண்மை முழுவதையும் நான் அங்கு கூறவில்லை.”

வாலரி லெகசாவ், சோவியத் அணுவியல் விஞ்ஞானி, செர்நோபில் விபத்து உளவாளி [Valeri Legasov (1988)]

“மனித இனத்துக்கு அணுமின்சக்தி மிகவும் தேவைப் படுகிறது என்பது என் தனிப்பட்ட கருத்து. அவை விருத்தி செய்யப்பட்டு மக்களுக்கு முழுமையான பாதுகாப்பு அளிப்பவை என்று உறுதிப்பாடாக வேண்டும். அதாவது அணு உலைகள் யாவும் பூமிக்கடியில் நிறுவப்பட வேண்டும். அகில நாடுகளின் பேரவை தாமதமின்றி அணு உலைகள் எல்லாம் அடித்தளங்களில் நிறுவப்பட சட்டமியற்ற வேண்டும்.”

“செர்நோபிலில் மெய்யாக நடந்தவை” என்னும் கிரிகொரி மெத்வெதேவ் [The Truth About Chernobyl By: Grigori Medvedev] எழுதிய நூலில் தீயணைப்பாளிகள், எஞ்சினியர்கள், இயக்குநர்கள் எப்படித் தீவிரமாக முன்வந்து உழைத்து விபத்தின் கோரத்தைத் தம்மால் முடிந்த அளவு குறைத்து உயிர் நீத்தார்கள் என்பது தெளிவாகக் கூறப்பட்டிருக்கிறது.”

ஆன்டிரே ஸெக்காரோவ் [Andrei Sakharov, Russian Nobel Laureate (May 1989)]

முன்னுரை: செர்நோபில் விபத்து நேர்ந்த 1986 ஆண்டுக் காலங்களில் பழைய சோவியத் ரஷ்யா இரண்டு மாடல் அணுமின் நிலையங்களை டிசைன் செய்து நிறுவி வந்தது. கொதிநீர் அணுமின்னுலை [RBMK Model Boiling Water Reactor (BWR)], அழுத்தநீர் அணுமின்னுலை [VVER Model Pressurised Water Reactor (PWR)] என்று பெயருள்ள இருவித நிலையங்கள். செர்நோபில் மாடலான RBMK அணுமின் உலைகள் சோவியத் கூட்டரசு நாடுகளில் மட்டுமே கட்டப் பட்டன! VVER மாடல்கள் வெளிநாடுகளுக்காக டிசைன் செய்யப் பட்டவை. RBMK-1000 மாடல்கள் மேற்கு ரஷ்யப் பகுதிகளில் குர்ஸ்க், இக்நாலினா, லிதுவானியா, யுக்ரேயின், செர்நோபில் [Kursk, Ignalina, Lithuania, Ukraine, Chernobyl] ஆகிய இடங்களில் நிறுவகமாகி யுள்ளன. செர்நோபில் மாடல் அணுமின் உலைகள் மிகவும் பிற்போக்கான முறையில், சிக்கனச் செலவில் டிசைன் செய்யப் பட்டவை. வியன்னாவிலிருக்கும் அகில நாட்டு அணுசக்திப் பேரவையின் [IAEA] கட்டுமான நெறிப்பாடுகளைப் புறக்கணித்து நிறுவகமானவை, RBMK அணு உலை மாடல்கள்!

செர்நோபில் அணுமின் உலை விபத்தின் காரணங்களை உளவியவர்களில் ஒருவர் வாலரி லெகசாவ். அவர் ஓர் அணுவியல் விஞ்ஞானி. அவர் விபத்தின் காரணங்களை ஆழ்ந்து உளவி ஒளிவு மறைவின்றி உள்ளதை உள்ளபடி அறிக்கையை வெளியிட்டார். குர்சடாவ் அணுசக்தி ஆய்வுக் கூடத்தின் உதவி ஆளுநர் [Dy Director, Kurchatov Institute of Atomic Energy & Member of the Soviet Academy of Sciences] அவர். ஆனால் அவர் மீது ரஷ்யப் பொதுடைமை வாதிகள் விபத்தின் உண்மைகளை மறைக்காமல் வெளியிட்டதற்காகச் சினங் கொண்டு நடவடிக்கை எடுத்தனர். 1988 ஏப்ரல் 26 ஆம் தேதி செர்நோபில் விபத்தின் ஈராண்டுப் பூர்த்தி நாளில் தன்னிலத்தில் தூக்கில் தொங்கித் தனது உயிரை மாய்த்துக் கொண்டார். அந்நாள் சோவியத் அதிபர் மிக்கேல் கார்பச்சாவும், மற்றும் சோவியத் விஞ்ஞானிகளும், அரசியல் பொதுவுடமை வாதிகளும் அவருக்கு இரங்கல் தெரிவித்து “டாஸ்” [TASS] பத்திரிகையின் மரணக் கையேட்டில் கையெழுத்திட்டனர்!

செர்நோபில் அணுமின் உலையின் முப்பெரும் கோளாறுகள்

செர்நோபில் மாடல் RBMK அணுமின் உலைகளில் தவிர்க்கப் கூடிய முப்பெரும் அபாயக் கோளாறுகளை ரஷ்ய நிபுணர்கள் தவறுகள் என்று அறிந்தும் டிசைன்களில் சிக்கனத்தை மேற்கொண்டு பயன்படுத்தி வந்தனர்! வியன்னாவில் உள்ள அகில நாட்டு அணுசக்திப் பேரவை [IAEA] எடுத்துக் காட்டியும் ரஷ்ய நிபுணர்கள் தம் காதில் கேட்டுக் கொள்ள வில்லை! மாபெரும் கேடிழைக்கும் அப்பெரும் கோளாறுகள் என்ன? முக்கியமாக அணு உலை ஓர் உறுதியான காங்கிரீட் கவசக் கோட்டை அரணுக்குள் [Containment] அமைக்கப் படவில்லை! இரண்டாவது, அணு உலைத் துவக்கத்தில் மிகக் குன்றிய ஆற்றலில் இயங்கும் போது, ஆற்றல் கட்டுப்பாடு [Instability at Low Power Control] நிலையற்ற முறையில் தாறுமாறாக ஏறி யிறங்கி, அணு உலை நிறுத்தத்தில் சிரமம் தரும். மூன்றாவது வெப்பம் தணிக்கும் கொதிநீரில் ஆவி மிகையாகி வெற்றிடங்கள் நேர்ந்தால், நியூட்ரான் பெருக்கம் குன்றுவதற்குப் பதிலாகக் கூடுதல் அடைந்து [Positive Void Coefficient (நேர்முக வெற்றிட மிகைவு)] விரைவில் வெப்பசக்தி பன்மடங்கு பெருகி நீராவி வெடிப்பை [Steam Explosion] உண்டாக்கி விடலாம். மெய்யாகச் செர்நோபில் விபத்திலும் முதல் வெடிப்பு அப்படித்தான் நேர்ந்தது!

மேலும் நியூட்ரான்களின் வேகத்தைத் தணிக்க கிரா·பைட் மிதவாக்கிப் பயன்பட்டது. நியூட்ரான்கள் கிரா·பைட்டைத் தாக்கும் போது அந்தக் கதிர்ச்சக்தி சேமிப்பாகி, கிரா·பைட்டின் உஷ்ணம் நிரந்தரமாக ஏறுகிறது! அதுவே “விக்னர் சக்தி” [Wigner Energy] என்று அழைக்கப் படுகிறது. செர்நோபில் பயங்கர விபத்தே முப்பெரும் கோளாறுகளால்தான் நேர்ந்தது! அணு உலை ஆய்வின் போது குன்றிய ஆற்றலில் அணு உலைக் கட்டுப்பாடு தாறுமாறாகப் போனதால் அபாயம் முதலில் தூண்டப்பட்டது! நேர்முக வெற்றிட நியூட்ரான் மிகையால் [Positive Void Coefficient] அணு உலை ஆற்றல் 100 மடங்கு விரைவில் ஏறி நீராவிப் பேரளவில் பெருகி, நீராவி அழுத்தம் மிகையாகி முதல் வெடிப்பு ஏற்பட்டது! அடுத்துப் தீப்பற்றிக் கொண்ட மிதவாக்கிக் கரித்திரட்டுகள் [Graphite Moderator] எரிய ஆரம்பித்து, ஹைடிரஜன் வாயு பெருகி ஆக்ஸிஜன் வாயுவுடன் தீவிரமாய்ச் சேர்ந்து இரண்டாம் வெடிப்பை உண்டாக்கியது! அணு உலைக்கலன் கோட்டை அரணுள் அமைக்கப் படாததால், கதிரியக்கம் மிகுந்துள்ள அணுப்பிளவுத் துணுக்குகளும், யுரேனிய எரிக்கோல் சிதைவுகளும் சூழ்வெளி மண்டலத்தில் வீசி எறியப்பட்டன!

செர்நோபில் அணு உலை விபத்துக்குக் காரணமான உறுப்புகள்

1. செர்நோபிலில் கட்டப்பட்ட RBMK-1000 ஒரு கொதிநீர் அணுமின் நிலையம் [Boiling Water Reactor (BWR)]. அணு உலை 1000 MWe மெகாவாட் மின்சார ஆற்றல் பரிமாறும் திறனுள்ள பேரளவு வெப்பசக்தி 3200 MWt ஆவி உண்டாக்க வல்லது! அதாவது வெப்பசக்தி-மின்சக்தி மாற்றத் திறன் [Thermal Efficiency] சுமார் 31%. அணு உலை உற்பத்தி செய்யும் 3200 MWt வெப்பசக்தி நீராவி இரண்டு 500 MWe டர்பைன்களை இயக்குகிறது. அணு உலையில் உள்ள 1661 எரிக்கோல்களில் 2% செறிவு யுரேனியம்-235 பயன்படுத்தப் பட்டது. அணு உலையில் நியூட்ரான்கள் பெருகி யுரேனிய-235 தாக்கப்பட்டு உண்டாகும் வெப்பசக்தியைத் தணிப்பு நீர் [Coolant Water] உறிஞ்சிக் கொண்டு நேரிடையாக கொதிக்கலனில் [Pressure Vessel] நீராவி எழுகிறது. மற்ற அழுத்தநீர் அணு உலைகளில் உள்ளது போல் தனியாக வெப்பக் கடத்திகள் அல்லது நீராவி ஜனனிகள் [Heat Exchangers or Steam Generators] RBMK மாடல்களில் கிடையா. கூறப் போனால் அதுவும் RBMK-1000 அணுமின் நிலையங்களின் டிசைன் கோளாறுகளில் ஒன்றுதான்!

2. எரிக்கோல்களில் உள்ளவை ஸிர்கோனியம் கலவைக் கவசம் பூண்ட [Zircaloy Clad] 2% செறிவு கொண்ட யுரேனியம் டையாக்ஸைடு துண்டுகள் [Uranium Dioxide Pellets (2% U-235 Enrichment)]. வேக நியூட்ரான்களை மிதமாக்கும் சாதனம் கிரா·பைட் [Graphite] என்னும் 1700 டன் எடையுள்ள கரித்திரட்டுக் கட்டிகள்! நியூட்ரான்களை விழுங்கி அணுப்பிளவுகளைக் குறைத்து வெப்பசக்தியைக் கட்டுப்படுத்துபவை 211 எண்ணிக்கை யுள்ள போரான் கார்பைடு கட்டுப்பாடுக் கோல்கள் [Boron Carbide Control Rods]. துருப்பிடிக்கா தேனிரும்பில் செய்யப் பட்ட அணு உலைக்கலன் [Reactor Preesure Vessel] 7 மீடர் உயரம், 12 மீடர் [23 அடி உயரம், 40 அடி விட்டம்] விட்டமுள்ளது. அணு உலைக்குள் கட்டுப்பாடுக் கோல்களை ஏறி யிறக்கினால், நியூட்ரான் எண்ணிக்கையைக் கூடிக் குறைக்க முடியும். நியூட்ரான் எண்ணிக்கைக் கூட்டிக் குறைத்தால், யுரேனியத்துடன் நிகழும் அணுப்பிளவுகளைக் கூட்டிக் குறைக்க முடியும். அணுப்பிளவுகளைக் கூட்டிக் குறைத்தால், வெளியேறும் வெப்பசக்தியின் அளவையும் கூட்டிக் குறைக்க முடியும்.

3. அணு உலையின் பாதுகாப்பு நெறிகளின்படி குறைந்தது 30 போரான் கார்பைடு கட்டுப்பாடுக் கோல்கள் எப்போதும் அணு உலைக்குள் கீழிறக்கப் பட்டிருக்க வேண்டும். எல்லாக் கட்டுப்பாடுக் கோல்களும் தவறுதலாக பணியாளரால் மேலே தூக்கப் பட்டால், நியூட்ரான்களின் எண்ணிக்கை பேரளவில் பெருகி, “மீறும் விரைவியக்கம்” [Prompt Critical Reaction] உண்டாகி அணு உலை வெடித்துவிடும்! ஆகவே குறைந்த பட்சம் 30 கட்டுப்பாடுக் கோல்கள் நியூட்ரான்களின் விரைவுப் பெருக்கத்தை எழவிடாமல் தடுக்க வேண்டும். விபத்து நடந்த தினத்தில் பணியாளர் தவறுதலாக குறைந்த பட்சம் 30 கட்டுப்பாடுக் கோல்களை அணு உலைக்குள் கீழிறக்க வில்லை!

4. ஒவ்வொன்றும் 10 மீடர் நீளமுள்ள [33 அடி] 1661 யுரேனிய எரிக்கோல்கள் [Uranium Fuel Rods] அணு உலைக் கலனின் [Reactor Vessel] மேலுள்ள 1661 துளைகளில் செங்குத்து நிலையில் நுழைக்கப் பட்டுள்ளன. எரிக்கோல்கள் உள்ள உலைக் கலனில் எப்போதும் நீர் நிரம்பிப் பூத நீர்ப் பம்ப்புகளாலோ அல்லது சிறிய பம்ப்புகளாலோ நீரோட்டச் சுற்றை உலை வழியாகச் சீரான நிலையில் கண்காணிக்க வேண்டும். குன்றிய வெப்ப ஆற்றலுக்குச் சிறிய பம்ப்புகள் அல்லது வென்ச்சூரிகள் [Venturis] மூலமாக நீரோட்டச் சுற்றை நிலைநாட்ட வேண்டும். ஏதாவது தவறுகளால் ஓடும் பம்ப்புகள் நிறுத்தமாகி, அணு உலையில் நீரோட்டச் சுற்று நின்று விட்டால், உடனே வெப்பத் தணிப்பு செய்ய அபாயத் தணிப்புப் பம்ப்புகள் தானாக [Emergency Cooling Water Suppy] இயங்கி நீரோட்டத்தை மீண்டும் நிலைநாட்டும். அவ்விதம் உடனே சுய வியக்கம் நேரா விட்டால், சூடான எரிக்கோல்கள் வெப்பத்தால் உருகிச் சிதைந்து விடும்! சோதனையின் போது, பணியாளர் அபாய நீரோட்டத்தைத் தவறாக நிறுத்தியதால், எரிக்கோல்கள் உருகிச் சிதைந்தன!

5. 1000 டன் எடையுள்ள இரும்புக் கவச அணு உலைத் மேல்தட்டு பணியாளர் மீது கதிர்வீச்சு மிகக் குறைவாகப்பட்டுப் பாதுகாப்பாக நின்று வேலை செய்ய ஏதுவாக [Biological Steel Shielding] வைக்கப் பட்டுள்ளது. அணு உலை விபத்தின் போது மிதவாக்கி கரித்திரட்டு எரிந்து ஹைடிரஜன், ஆக்ஸிஜன் தீவிரமாகச் சேர்ந்து நேர்ந்த இரண்டாவது வெடிப்பில் 1000 டன் உயிரியல் பாதுகாப்புத் தட்டு தூக்கி எறியப்பட்டுச் சிதைந்த கதிரியக்க யுரேனியத் துணுக்குகள் தடையின்றி சூழ்மண்டலத்தில் பரவின! அணு உலையின் மேற்புறத்தில் மட்டும் கதிர்வீச்சுத் தடுப்பாக அமைக்கப்பட்ட 1000 டன் ஒரே கவசமும் வெடிப்பால் கவிழ்க்கப்பட்டுக் கதிரியக்கத் துணுக்குகள் உலகெங்கும் வெளியேறியது செர்நோபிலின் துரதிருஷ்டமே!

செர்நோபில் அணு உலை விபத்து எவ்விதம் தூண்டப் பட்டது?

[தொடரும்]

தகவல்:

1. Chernobyl 20 Years On: UN Finds Impact of Reactor Disaster Much Less Than Feared, But Few are Reassured. By: Mara D. Bellaby Associated Press [Sep 5, 2005 & Apr 23, 2006]

2. A Trip to Chernobyl By Awake Writer in Ukraine “Awake” [April 2006]

3. Remember Chernobyl Day (April 26, 1986) – 20 Years After

4. Chernobyl Day Action: Wednes day (26 April 1986) By: Fang Bot [April 24, 2006] From: [http://www.chernobyl-children.com/, http://perth.indymedia.org]

5. Chernobyl Accident, Nuclear Issues Briefing Paper 22 [March 2006]

6. Children of Chernobyl Belarus “Two Decades After the Disaster, Chernobyl’s Children Struggle to Live By: Anatol Klascuk [http://indexline.org/en/news/articles/2006/belarus-childern-of-chernoby.shtml]

7. Chernobyl Radiation Still Lingering, Experts Say By: Associated Press [Nov 15, 2004]

8. Officials Worry About Chernobyl Reactor Cracking Seal By: Associated Press [April 23, 2006]

9. Chernobyl Debate Still Rages On 20th Anniversary By: Alec Gazdic CTV.ca News [Apr 24, 2006]

10 Chernobyl Death Toll Will Top 90,000: Greenpeace Report By: Associated Press [Apr 18, 2006]

11 The Truth About Chernobyl By: Grigori Medvedev [1991]

12 The Aftermath of Chernobyl By Grigori Medvedev [1993]

13 How Safe? Three Mile Island, Chernobyl & Beyond By: James Megaw [1987]

14 Nuclear Energy Agency (NEA), France: Chernobyl Assessment of Radiological & Health Impact [2002 Update]

15 Nuclear Safety & The G7 Summit Reports (1991-2000) -A Contradiction in Terms? [http://archive.greenpeace.org/~comms/nukes/chernob/rep01.html (Nov 5, 2003)]

16. Safety Benefits of Risk Assessment at the U.S. Nuclear Power Plants [http://www.nei.org/ (March 2002)]

17. Nuclear Power, From Physics to Politics By: Laurence Pringle [1979]

18. Chernobyl: The True Scale of Accident, Joint News Release By: WHO/IAEA/UNDP -20 Years Later a UN Report Provides Definite Answers & Ways to Repair Lives [2005] [www.who.int/mediacentre/news/releases/2005/pr38/en/print.html]

19. Energy Bill Speeds up Nuclear Proliferation, Stifles Competition from Renewable Energy
[www.world-wire.com/news]

20. Chernobyl’s Legacy: Health, Environmental & Socio-Economic Impacts By: Chernobyl Forum [WHO, IAEA, UNDP, FAO, NNEP, UN-OCHA, UNSCEAR, World Bank, Govts of Belarus, Russia, Ukraine (2003-2005)] Second Revised Edition. – Later Enlarged 600 Page Report (Sep 5, 2005).

21. Chernobyl’s Legacy: Health Impacts By K.S. Parthasarathy, Former AREB Secretary [www.thehindu.com/] Sep 15, 2005.

22. BBC News, Chernobyl’s Legacy Still Undecided By Mark Kinver BBC Science Reporter [Apr 24, 2006]

23. Chernobyl Reactor Accident 1986 By: Robert Johnson [May 11, 2005]

24. The Nuclear History Site/Historical Safety Record Vi Lenin – Chernobyl

******************

jayabarat@tnt21.com [May 25, 2006]

Series Navigation

சி. ஜெயபாரதன், கனடா

சி. ஜெயபாரதன், கனடா

செர்நோபில் அணுமின் உலை விபத்தால் உலகெங்கும் கதிரியக்கப் பொழிவுகள் -4

This entry is part [part not set] of 48 in the series 20060519_Issue

சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா

குபாலின்கா! குபாலின்கா!
இருட்டி விட்டதே,
எங்கே போனாள் உன் மகள்?
என் மகள் தோட்டத்தில் நின்று,
பறிக்கிறாள் ரோஜா மலர்களை,
விரல்களைக் காயப் படுத்தி!
பூக்களைத் தொடுத்து
பூ வளையம் பின்னுகிறாள்,
பூ வளையம் பின்னுகிறாள்,
பொங்கிடும்
கண்ணீரைச் சிந்திக் கொண்டே!

பெலாரஸ் சிறுவர் பாடல்

“20 ஆண்டுகளுக்கு முன் நேர்ந்த செர்நோபில் அணுமின் நிலைய விபத்தால் கூடிய எண்ணிக்கை 9000 பேர் வரை கதிர்வீச்சால் தாக்கப்பட்டோர் மரணம் அடைவார் என்று 100 மேற்பட்ட விஞ்ஞானிகளின் கூட்டறிக்கை ஒன்று முடிவு செய்திருக்கிறது!

2005 ஆண்டு மத்திம காலம்வரை விபத்தால் நேரடியாகக் கதிரடி பட்டு மாண்டோர் எண்ணிக்கை 50 கீழ் என்பது அறியப் படுகின்றது”.

உலக உடல்நலப் பேரவை, உலக நாடுகளின் அணுசக்திப் பேரவை, ஐக்கிய் நாடுகளின் அபிவிருத்தித் திட்டக் குழுக் கூட்டறிக்கை [WHO/IAEA/UNDP Joint Report 2005]

“சமீபத்தில் ஆய்வு செய்து வெளிவந்த எங்கள் அறிக்கை, செர்நோபில் விபத்தால் விளைந்த மரணங்கள், நோய்கள், நிதி விரைவுகள் ஆகியவற்றில் தீராமல் தொங்கிக் கொண்டிருக்கும் பிரச்சனைகளுக்குத் தீர்வு காண்கிறது. பாதிக்கப்பட்ட மூன்று நாடுகளும் [பெலரஸ், யுக்ரேயின், ரஷ்யா] செர்நோபில் விளைவுகளின் உளவுகள் மெய்யாகவும், உலக நாடுகளின் ஒப்புதலைப் பெற்றதாகவும், மாந்தர் பின்பற்றக் கூடிய ஆலோசனைக் குறிப்பிட்டும் அறிக்கை தயாரிக்கப்பட வேண்டும் என்று வேண்டி உலக நாடுகளின் உதவியை எதிர்பார்க்கின்றன”.

“செர்நோபில் நிகழ்ச்சி, ஆரம்ப சமயத்தில் ஆயிரக் கணக்கான நபர் தீவிரக் கதிரடி பெற்று, தைராய்டு புற்று நோய் பீடிக்கப்பட்டு மரணம் அடைந்த ஒரு தீவிர விபத்து! நல்ல வேளை, சுற்றி யிருக்கும் மற்ற பொது மாந்தருக்கு அதனால் துன்பமுறும் பாதிப்புகள் நேரா என்பதையும், ஓரு சில பகுதிகளைத் தவிரத் தீவிரமாய்ப் பரவும் கதிர்வீச்சுகள் தீண்டா என்பதையும் ஆய்வில் கண்டறிந்தோம்”.

டாக்டர் பர்டன் பென்னெட், செர்நோபில் அரங்கத் தலைவர் [Dr. Burton Bennett, Chaiman, Chernobyl Forum (2005)]

“செர்நோபில் அணுமின் உலையைச் சுற்றி மிகுந்த அளவில் கதிர்த் தீட்டாகி வேலியிடப் பட்டுள்ள 20 மைல் ஆரப் பரப்புகளையும், சில ஏரிகளையும், காடுகளையும் தவிர, மற்ற தளங்கள் யாவும் கதிர்ப் பொழிவுகளின் உக்கிரம் குன்றி, ஏற்றுக் கொள்ளும் அளவுக்கு தணிந்துள்ளன என்பது விஞ்ஞான ரீதியாக உளவி உறுதி கூறப்பட்டது. சுற்றியுள்ள நகர்களில் தற்போதுள்ள பிரச்சனைகள் பொருளாதார, மனோ வியாதியைத் தவிர, கதிவீச்சால் ஏற்படும் உடல்நலச் சீர்கேடுகளோ அல்லது சூழ்வெளிப் பாதிப்புகளோ அல்ல”.

டாக்டர் மிக்கேயில் பலோனாவ் [Dr. Mikhail Balonov, Radiation Expert IAEA (2005)]

“மனித இனத்துக்கு அணுமின்சக்தி மிகவும் தேவைப் படுகிறது என்பது என் தனிப்பட்ட கருத்து. அவை விருத்தி செய்யப்பட்டு மக்களுக்கு முழுமையான பாதுகாப்பு அளிப்பவை என்று உறுதிப்பாடாக வேண்டும். அதாவது அணு உலைகள் யாவும் பூமிக்கடியில் நிறுவப்பட வேண்டும். அகில நாடுகளின் பேரவை தாமதமின்றி அணு உலைகள் எல்லாம் அடித்தளங்களில் நிறுவப்பட சட்டமியற்ற வேண்டும்.”

“செர்நோபிலில் மெய்யாக நடந்தவை” என்னும் கிரிகொரி மெத்வெதேவ் [The Truth About Chernobyl By: Grigori Medvedev] எழுதிய நூலில் தீயணைப்பாளிகள், எஞ்சினியர்கள், இயக்குநர்கள் எப்படித் தீவிரமாக முன்வந்து உழைத்து விபத்தின் கோரத்தைத் தம்மால் முடிந்த அளவு குறைத்து உயிர் நீத்தார்கள் என்பது தெளிவாகக் கூறப்பட்டிருக்கிறது.”

ஆன்டிரே ஸெக்காரோவ் [Andrei Sakharov, Russian Nobel Laureate (May 1989)]

முன்னுரை: செர்நோபில் அணு உலை விபத்தால் மரணம் அடைபவர் எண்ணிக்கை முதலில் 4000 என்று அறிவிக்கப் பட்டதை மாற்றிப் புதிதாக அந்த எண்ணிக்கை 9000 என்று 2005 ஆண்டு செப்டம்பரில் “செர்நோபில் அரங்கம்” என்று அழைக்கப்படும் உலக உடல்நலப் பேரவை, அகில நாட்டு அணுசக்திப் பேரவை, ஐக்கிய நாடுகளின் அபிவிருத்தித் திட்டக் குழு, பெலரஸ், ரஷ்யா, யுக்ரேயின் அரசுகள் [Chernobyl Forum: WHO, IAEA, UNDP, FAO, UNEP, UN-OCHA, UNSCEAR, World Bank, Govts of Belarus, Russia, Ukraine (23)] ஆகிவற்றின் 100 மேற்பட்ட விஞ்ஞானிகள் ஆழ்ந்து உளவி வெளியிட்ட கூட்டறிக்கை அழுத்தமாகக் கூறுகிறது! கிரீன்பீஸ் நிறுவகம் ஏற்கனவே அந்த எண்ணிக்கையை நிராகரித்து, அதை விடப் 10 மடங்கு பெரிய எண்ணை [90,000 பேர்] அறிவித்திருக்கிறது! செர்நோபில் விபத்தால் நேர்ந்த சீர்கேடுகளைச் செம்மைப் படுத்த, இராணுவப் படை, அபாய நிலைப் பணியாளர் ஆக 600,000 பேர் பங்கெடுத்ததாக அறிக்கை கூறுகிறது. 20 மைல் ஆரத்தில் உள்ள பிரிபயாட் நகரம், மற்றும் சுற்றுப்புறப் பகுதிகளிலிருந்து, முதலில் புலம்பெயர்த்தப் பட்டவர் 116,000 நபர்கள் என்பதும், கட்டுப்பாடுக் கண்காணிப்பில் உள்ளோர் எண்ணிக்கை 270,000 பேர்கள் என்பதும், கதிர்த் தீண்டல் பகுதிகளில் வாழ்வோர் 5 மில்லியன் மக்கள் என்பதும் அதில் காணப் படுகிறது! பின்னால் வேறு பலர் புலம் பெயர்ந்த எண்ணிக்கையும் சேர்த்தால் மொத்தம் 350,000 பேர் என்பது தெரிய வருகிறது.

செர்நோபில் அரங்க விஞ்ஞானிகள் உளவிக் கண்டுபிடித்த முடிவுகள்

நூற்றுக்கும் மேற்பட்ட விஞ்ஞானிகள் வெளியிட்ட அறிக்கையின் சாரம் பின்வருமாறு:

1. செர்நோபில் விபத்தின் முதல் நாள் சுமார் 1000 அணுமின் நிலையப் பணியாளிகள் தெரிந்தும், தெரியாமலும் சிதறிய யுரேனிய எரிக்கோல்கள் மீது நடந்து தீவிரக் கதிரடிகள் பெற்றனர். 1986-1987 ஆண்டுகளில் பாதுகாப்பு, மீட்சிப் பணியில் ஈடுப்பட்ட 200,000 நபர்களில் 2200 பேர் கதிர்வீச்சால் ஏற்படும் நோய்களில் பாதிக்கப்பட்டு தம் வாழ்நாளில் மரணம் அடைவார் என்று அறியப்படுகிறது!

2. பெலரஸ், ரஷ்யா, யுக்ரேயின் பகுதிகளில் வாழும் ஜனத் தொகையில் 5 மில்லியன் பேர் செர்நோபில் கதிர்ப் பொழிவுகள் படிந்த பரப்புகளில் வாழ்ந்து வருகிறார்கள். அவர்களில் 100,000 பேர் கட்டுப்பாடும், கண்காணிப்புகளும் உள்ள கதிர்வீச்சுப் படிவுப் பரப்புகளில் உள்ளார்கள். தற்போதைய புதிய கண்டுபிடிப்புகளால் அப்பகுதிகளில் கட்டுப்பாடுகள் தளர்ச்சி செய்யப்படும் என்று தெரிகிறது.

3. சுமார் 4000 பேர் பெரும்பான்மையாகக் சிறுவர்கள், மற்றும் வயது வந்தோர் விபத்தன்று ஐயோடின்-131 கதிரடி பெற்றுத் தைராய்டு புற்றுநோயால் தாக்கப் பட்டார். அவர்களில் 9 சிறுவர் மாண்டனர். பெலரஸ்ஸின் அனுபவத்தின்படி தைராய்டு புற்று நோயில் பிழைப்பவர் வாய்ப்புகள் மிகையாகி (99%) விட்டது!

4. பெரும்பான்மையான அபாயப் பணி உழைப்பாளர்கள் இயற்கையாக நிகழும் கதிரடியை ஒத்த அளவில் தணிந்த முழுஉடல் கதிரடி பெற்றதால் [Low Whole Body Doses], பாதிக்கப் பட்டவர் சந்ததி விருத்திகளில் சீர்கேடுகள் நேரா! அதனால் வம்சா வழியின்றி நேரடிக் கதிர்வீச்சுத் தாக்குதல்களால் ஏற்படும் பாதிப்புகள் [Congenital Malformations] முழுவதுமாகக் கிடையாது என்று அறிவிக்கப் பட்டுள்ளது!

5. பழைய சோவியத் ரஷ்யாவில் மக்கள் ஏழ்மையில் நொந்தது, மனநோய்களில் மாந்தர் துயர்ப்பட்டது மேலாகிச் செர்நோபில் கதிர்வீச்சுத் தாக்குதல்களை விட, அவற்றால் இன்னல் பெற்றனர்.

6. எல்லாவற்றியும் விடப் புலப்பெயர்ச்சி நீண்ட கால வேதனை அளித்து சுமார் 350,000 பேர் சொல்லொணாத் துயருற்றனர்! வீடு, வாசல், ஆடை, அணிகள், பாத்திரம், பண்டங்கள், ·பர்ணிசர்கள், நிலபுலங்கள், தோட்டம் ஆகியவற்றை இழந்து போனது பலருக்குத் தாங்க முடியாமல் போனது!

7. திடீர் திடீரென்று பெருத்த மாறுதல்கள் அடுத்தடுத்து ஏற்பட்டு, கதிர்வீச்சால் வந்தும், வராமல் வாய்ப்பிருக்கும் விளங்காத நோய் நொடிகளால், “பைத்திய மரணத் துன்பத்தில் ” [Paralyzing Fatalism] பாதிக்கப்பட்டனர் மக்கள்!

8. பெலரஸ், ரஷ்யா, யுக்ரேயின் பகுதிகளில் பாதிக்கப்பட்ட மாந்தருக்கு மீட்சி, மன ஊக்க முறைப்பாடுகள் நிதியின்மையாலும், அரசியல் கொந்தளிப்புகளாலும் முடமாகித் தடைப்பட்டுப் போயின!

9. செர்நோபிலில் விபத்தான அணுமின் உலையைக் காங்கிரீட் கட்டடத்தால் மூடிப் புதைத்தாலும், சுவர்களில் தேய்வுகளும், பிளவுகளும் உண்டாகிக் கதிரியக்கம் கசிந்து கட்டடமும் முடிவில் கவிழ்ந்து விடாலாம் என்பது கட்டட நிபுணர்களால் அஞ்சப் படுகிறது!

10. மூடப்பட்டுள்ள பேரளவு கதிர்வீசும் யுரேனியத் துணுக்குகளைச் சீரிய முறையில் அடித்தளக் கிடங்குகளில் நிரந்தரமாய்ப் புதைக்கப் புதியத் திட்டங்கள் வகுக்கப்பட வேண்டும்.

[தொடரும்]

தகவல்:

1. Chernobyl 20 Years On: UN Finds Impact of Reactor Disaster Much Less Than Feared, But Few are Reassured. By: Mara D. Bellaby Associated Press [Sep 5, 2005 & Apr 23, 2006]

2. A Trip to Chernobyl By Awake Writer in Ukraine “Awake” [April 2006]

3. Remember Chernobyl Day (April 26, 1986) – 20 Years After

4. Chernobyl Day Action: Wednes day (26 April 1986) By: Fang Bot [April 24, 2006] From: [http://www.chernobyl-children.com/, http://perth.indymedia.org]

5. Chernobyl Accident, Nuclear Issues Briefing Paper 22 [March 2006]

6. Children of Chernobyl Belarus “Two Decades After the Disaster, Chernobyl’s Children Struggle to Live By: Anatol Klascuk [http://indexline.org/en/news/articles/2006/belarus-childern-of-chernoby.shtml]

7. Chernobyl Radiation Still Lingering, Experts Say By: Associated Press [Nov 15, 2004]

8. Officials Worry About Chernobyl Reactor Cracking Seal By: Associated Press [April 23, 2006]

9. Chernobyl Debate Still Rages On 20th Anniversary By: Alec Gazdic CTV.ca News [Apr 24, 2006]

10 Chernobyl Death Toll Will Top 90,000: Greenpeace Report By: Associated Press [Apr 18, 2006]

11 The Truth About Chernobyl By: Grigori Medvedev [1991]

12 The Aftermath of Chernobyl By Grigori Medvedev [1993]

13 How Safe? Three Mile Island, Chernobyl & Beyond By: James Megaw [1987]

14 Nuclear Energy Agency (NEA), France: Chernobyl Assessment of Radiological & Health Impact [2002 Update]

15 Nuclear Safety & The G7 Summit Reports (1991-2000) -A Contradiction in Terms? [http://archive.greenpeace.org/~comms/nukes/chernob/rep01.html (Nov 5, 2003)]

16. Safety Benefits of Risk Assessment at the U.S. Nuclear Power Plants [http://www.nei.org/ (March 2002)]

17. Nuclear Power, From Physics to Politics By: Laurence Pringle [1979]

18. Chernobyl: The True Scale of Accident, Joint News Release By: WHO/IAEA/UNDP -20 Years Later a UN Report Provides Definite Answers & Ways to Repair Lives [2005] [www.who.int/mediacentre/news/releases/2005/pr38/en/print.html]

19. Energy Bill Speeds up Nuclear Proliferation, Stifles Competition from Renewable Energy
[www.world-wire.com/news]

20. Chernobyl’s Legacy: Health, Environmental & Socio-Economic Impacts By: Chernobyl Forum [WHO, IAEA, UNDP, FAO, NNEP, UN-OCHA, UNSCEAR, World Bank, Govts of Belarus, Russia, Ukraine (2003-2005)] Second Revised Edition. – Later Enlarged 600 Page Report (Sep 5, 2005).

21. Chernobyl’s Legacy: Helath Impacts By K.S. Parthasarathy, Former AREB Secretary [www.thehindu.com/] Sep 15, 2005.

22. BBC News, Chernobyl’s Legacy Still Undecided By Mark Kinver BBC Science Reporter [Apr 24, 2006]

******************

jayabarat@tnt21.com [May 18, 2006]

Series Navigation

சி. ஜெயபாரதன், கனடா

சி. ஜெயபாரதன், கனடா

செர்நோபில் அணுமின் உலை விபத்தில் உலகெங்கும் பரவிய கதிரியக்கம் -3

This entry is part [part not set] of 39 in the series 20060512_Issue

சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா

நினைக்கிறாயா பலியானவரை,
செர்நோபில் விபத்துக் கிரையானவரை?
எனதரும் தோழி எவினீயா, யூரி, ஈகோரின்
கவலை முகங்களை நினைக்கிறாயா?
அவரின் கூந்தல், அவரின் கண்கள்
உனது நெஞ்சில் என்றும் நிலை யாகட்டும்!

கெலன் வாக்கர் [Helen Walker, “In the Memory of Evgeniya (July 2, 1995)]

“நம் நாட்டின் எதிர்காலம் பூராவும் சீர்கேடாகி விட்டது! சமாதான காலத்தில் தாக்கிய அணு ஆயுதம் போல செர்நோபில் விபத்து நிகழ்ந்து விட்டது! அதன் துன்பமய விளைவுகளின் தீவிரத் துவக்கத்தை இப்போதுதான் காண்கிறோம்.”

பீடர் கிரவ்ஷங்கா [பெலாரஸ் நாட்டு முன்னாள் வெளித்துறை அமைச்சர்]

“நகரிலிருந்து 30 மைல் தூரத்தில் உள்ள சிறு அணுமின் நிலையம் ஒன்றில் பெரும் விபத்து நேர்ந்தால், சுமார் 3400 பேர் மரணம் அடையலாம்! கதிரியக்கத்தால் 43,000 நபருக்குத் தீவிரத் தீங்குகள் விளையலாம்! நகரப் புறத்திலும், நிலவளத்திலும் ஏற்படும் பொருட் சேதம் சுமார் 7 பில்லியன் டாலர் நிதி விரையத்தை உண்டாக்கும்.”

அமெரிக்க அணுசக்திப் பேரவை அறிவிப்பு [US Atomic Energy Commission Brookhaven Report (1957)]

“சோவியத் யூனியனிலிருந்து பிரிந்து விடுதலையான நாடுகளில் பழைய ரஷ்ய விஞ்ஞானப் பொறியியல் நிபுணர்கள் டிசைன் செய்து கட்டி இயங்கிக் கொண்டிருக்கும் பல அணு உலைகள், டிசைன் கோளாறுகளாலும், நிதியிருப்பு பற்றாமையாலும், நிர்மூலமாகும் பொருள்வளத்தாலும், அரசாங்கக் கொந்தளிப்பாலும், அணுசக்திக் கட்டுப்பாடு நெறியாளர் தளர்ச்சியாலும், காணாத கண்காணிப்பாலும், புறக்கணிப்பாலும் பாதுகாப்பு முறைகளில் சீர்கேடாகிச் செர்நோபில் போல் விபத்துகள் நேர்ந்து அபாயம் விளைவிக்க வாய்ப்புக்கள் உள்ளன!

அமெரிக்க அணுவியத் துறை ரகசிய அறிக்கை [US Dept of Energy Intelligence Report (1995)]

“மனித இனத்துக்கு அணுமின்சக்தி மிகவும் தேவைப் படுகிறது என்பது என் தனிப்பட்ட கருத்து. அவை விருத்தி செய்யப்பட்டு மக்களுக்கு முழுமையான பாதுகாப்பு அளிப்பவை என்று உறுதிப்பாடாக வேண்டும். அதாவது அணு உலைகள் யாவும் பூமிக்கடியில் நிறுவப்பட வேண்டும். அகில நாடுகளின் பேரவை தாமதமின்றி அணு உலைகள் எல்லாம் அடித்தளங்களில் நிறுவப்பட சட்டமியற்ற வேண்டும்.”

“செர்நோபிலில் மெய்யாக நடந்தவை” என்னும் கிரிகொரி மெத்வெதேவ் [The Truth About Chernobyl By: Grigori Medvedev] எழுதிய நூலில் தீயணைப்பாளிகள், எஞ்சினியர்கள், இயக்குநர்கள் எப்படித் தீவிரமாக முன்வந்து உழைத்து விபத்தின் கோரத்தைத் தம்மால் முடிந்த அளவு குறைத்து உயிர் நீத்தார்கள் என்பது தெளிவாகக் கூறப்பட்டிருக்கிறது.”

ஆன்டிரே ஸெக்காரோவ் [Andrei Sakharov, Russian Nobel Laureate (May 1989)]

முன்னுரை: 1993 ஆண்டு டோக்கியோவில் நடந்த G-7 உலகக் கூட்டு நாடுகளின் பேரவையில் “அணு உலை விபத்துகள் அதிகமாக நேரும் வாய்ப்புள்ள நாடுகளில் அபாயக் குறைப்புகளைப் பற்றி விவாதம் நிகழ்ந்தது. ரஷ்யாவில் இயங்கிக் கொண்டிருக்கும் விபத்து மிகையாக வாய்ப்புள்ள அணு உலைகள்: செர்நோபில் மாதிரி உள்ள RMBK மாடல்கள்: 15. அடுத்து VVER (440-230) மாடல்கள்: 11. ரஷ்ய டிசையினில் தயாராகி அணுமின் உலைகள் கட்டப் பட்டுள்ள நாடுகள்: ஆர்மீனியா, பல்கேரியா, லிதுவேனியா, யுக்ரேயின், ஸ்லோவேகியா, ரஷ்யா. அந்த அணு உலைகளில் நேர்ந்திடக் கூடிய அபாய எதிர்பார்ப்புகளின் தீவிரத்தைக் கணித்து, கீழ்நிலை, நடுநிலை, உயர்நிலை [Low, Medium, High Risk] என்று மூன்று தரங்களில் அபாய வாய்ப்பு உலைகள் பிரிக்கப்பட்டு விபத்துகளின் தடுப்பு, குறைப்பு, மீட்சி, மேன்மை முறைபாடுகள் ஆராயப்பட்டன. மேலும் விபத்துக்கள் நேர்ந்திடக் காத்துக் கொண்டிருக்கும் அணு உலைகளின் ஆயுட்காலம் சுருக்கப்பட்டு மூடும் காலங்களும் முத்திரை அடிக்கப்பட்டன. சோவியத் ரஷ்யாவின் கரங்கள் கட்டிய நான்கு அபாயகரமான அணுமின் நிலையங்கள்: 1. செர்நோபில் [Ukraine], 2. கொஸ்லோடுயி [Kozloduy, Bulgeria], 3. கோலா [ரஷ்யா] 4. இகனாலினா [Iganalina, Armenia].

1990 ஆண்டுகளின் மத்திமக் காலங்களில் அவற்றின் மின்சாரப் பரிமாறுமிழப்பை ஈடுசெய்ய பிறமுறை எரிசக்தி நிலையங்களும் நோக்கப்பட்டன. அடுத்து அணுமின்சக்தி நிலையங்களின் பாதுகாப்பு ஏற்பாடுகள் ஆழ்ந்து உளவப்பட்டுப் பேரளவு நிதிச் செலவில் செம்மைப் படுத்தப்பட்டன. அவ்விதப் பணிகள் செய்ய கீழ்நிலை அபாயப் பாதுகாப்பு உலைகளுக்கு 1993 ஆண்டு முதல் 2000 வரை ஆண்டுக்கு 2.3 பில்லியன் வீதம், மொத்தம் 18 பில்லியன் டாலர்கள் தேவைப் பட்டன! அதே சமயத்தில் நடுநிலை, உயர்நிலை அபாயம் எதிர்பார்க்கப்படும் அணு உலைகள் செம்மை யாக்கப்பட 24 பில்லியனும், புதிதாகக் கட்டப்படுபவை சீராக்கப்பட்டு முடிவு பெற 25 பில்லியனும் செலவாகும் என்று மதிப்பீடு செய்யப்பட்டது. பாதுகாப்புக் கோட்டை அரண்களற்ற செர்நோபில் நிலையத்தின் நான்கு யூனிட்களும் நிரந்தரமாய் 2000 ஆண்டுக்குள் மூடப்பட்டன! ஆர்மீனியாவில் மெட்ஸாமர் யூனிட் 1 & 2 அணுமின் நிலையங்கள் 1989 ஆண்டில் நிறுத்தமாகிச் செம்மைப் படுத்தப் பட்டு 1995-1997 ஆண்டுகளில் மீண்டும் இயங்க ஆரம்பித்தன!

செர்நோபில் விபத்தில் விளைந்த உடல்நலச் சீர்கேடுகள்:

பெலரஸ்ஸின் மருத்து நிபுணர்கள் செர்நோபில் விபத்தால் விளைந்த நோய்களைச் சோதித்து மக்களின் உடல்நலச் சீர்கேடுகளைக் குறிப்பிட்டுப் பின்வருமாறு பதிவு செய்திருக்கிறார்கள்:

1. பெலரஸ் நாட்டில் புற்று நோய், இரத்த நோய்த் தாக்குதல் 100% மிகையானது.

2. பரம்பரை வழியாக வராது, நேராகப் பிறவழித் தாக்கலில் உண்டான பிறப்புப் பிறழ்ச்சிகள் [Congenital Birth Deformities] 250% அதிகமாயின!

3. தைராய்டு புற்றுநோயின் தாக்கல் 2400% மிகையானது!

4. கதிர்த் தீண்டலான நகர்த் தளங்களில் வீடு, நிலம், பொருள், ஆடை இழந்து புலம்பெயர்ந்தோரில் தற்கொலை மரண எண்ணிக்கை 1000% ஆக ஏறியது!

5. செர்நோபில் விபத்தால் ஸ்டிரான்ட்சியம் (Sr90 Half Life: 30 Years) கதிர்வீச்சு தாக்கி உடலியல் நோய் எதிர்ப்பு ஏற்பாடு [Body’s Immune System] பாதிக்கப்பட்டது! அதனால் நேர்ந்த நோய்களைச் “செர்நோபில் எயிட்ஸ்” [Chernobyl AIDS] என்னும் தனிப் பெயரால் மருத்துவ நிபுணர் அழைத்தனர்! ஸ்டிரான்ட்சியம் கதிர் ஏகமூலமும் [Strontium Isotope] அந்த பாதிப்புகளைக் கொடுக்கப் பெரும் பங்கேற்றது.

1995 ஆம் ஆண்டில் IAEA உதவி மூலம் ஐக்கிய நாடுகளின் பேரவை [UNICEF] தனிப்பட்ட உளவு செய்து வெளியிட்ட அறிக்கையில் பின்வரும் குறிப்புகள் பதிவாகியுள்ளன!

1. பரம்பரை வழியின்றி நேரடித் தாக்கலால் உண்டான இருதயக் குருதியோட்ட நோய்கள் [Congenital Heart & Circulatory Diseases] 25% அதிகரித்துள்ளன.

2. வயிறு, குடல் சம்பந்தப்பட்ட உணவுச் செரிப்பு ஏற்பாடுகளில் சீர்கேடுகள் மிகையாயின.

3. சாவைத் தரும் சீர்கெட்ட கட்டிகள் [Malignant Tumours] 38% பெருகின.

4. பிறப்புறுக்கள், மூத்திரப் பாதை ஏற்பாடுகளில் பாதிப்புகள் 39% மிகையாயின.

5. நரம்பிணைப்பு அமைப்புகள், உணர்வு எழுப்பும் உறுப்புகளின் சீர்கேடுகள் 43% அதிகமாயின.

6. இரத்தக் குழாய்ச் சுற்று அமைப்புகளில் நோய் 43% மிகையானது.

7. எலும்பு, தசைகள், கால் கைகளில் உள்ள பிணைப்புச் சதைகளில் கோளாறுகள் 62% அதிகரித்தன. கால் கைகளில் உள்ள பிணைப்புச் சதைகளில் கோளாறுகள் 62% அதிகரித்தன.

செர்நோபில் விபத்தால் விளைந்த உலகச் சூழ்வெளிப் பாதிப்புகள்

செர்நோபில் விபத்தால் ஏற்பட்ட பேரளவுப் பெருஞ்சேதம் நஞ்சை, புஞ்சை வயல்களில் வருடாந்தர விளைச்சல் ஏதுவும் செய்ய முடியாமல் போய் தானியத் தட்டுப்படு உண்டானதுதான்! பெலரஸ்ஸில் மட்டும் 20% விளைச்சல் நிலங்கள், 15% காட்டு வனங்கள் கதிரியக்கத் தீட்டாகிக் குறைந்தது ஒரு நூற்றாண்டுக்குப் பயன்படுத்த முடியாமல் போகும்! சோவியத் ரஷ்யாவுடன் சேர்ந்த மற்ற கூட்டு நாடுகளில் தானியங்கள் கதிர்த் தீண்டலாகித் தின்ன முடியாமல் வீணாகின! ஆடு, மாடு ஆகியவற்றின் பாலாக்கப் பதார்த்தங்கள் [Dairy Products] அனைத்தும் உண்ணப் படாமல் தவிர்க்கப் பட்டன! ஜெர்மனிக்கும் செர்நோபில் விபத்தால் நிதியும், பொருளும் விரையமாயின. உண்ண முடியாது கதிர்த் தீண்டப்பட்ட தானியப் பண்டங்களை ஒதுக்க மேற்கு ஜெர்மனிக்கு 250,000 டாலர் வீணானது! கதிரியக்கத் தாக்குதல்களால் 20 மைல் ஆரத்திற்குள் செர்நோபில் அருகே வாழ்ந்த விலங்கினங்கள், தாவர வகைகள் நேரடியாக கதிரியக்கத் தாக்கம் பெற்று நாசம் அடைந்தன!

பாதிக்கப் பட்ட நேரடிப் பகுதிகளில் வேளாண்மை விலங்கினங்களுக்கு பிறப்புக் கோளாறுகள் ஏற்பட்டன என்று அறியப்படுகிறது! ஆயிரக் கணக்கான ஏக்கர் நிலங்களின் வளமுற்ற மேல்தளமண் கதிர்த் தீண்டப் பட்டதால் அவை அனைத்தும் நீக்கப் பட்டு, மில்லியன் டன்களாய்ச் சேர்ந்து எப்படி புதைப்பது என்பது பிரச்சனையாகி விட்டது! செர்நோபில் உலைக்கு 80 மைல் தூரத்தில், 2.5 மில்லியன் மக்களுக்குக் குடிநீராகப் பயன்படும் திணைப்பர் நதியில் கதிர்த்தீட்டு படாமல் தடுக்கும் பணிகள் மிகவும் சிரமாகப் போயின! செர்நோபில் விபத்து நேர்ந்த நிலப் பகுதிகளில் கதிர்த் தீண்டப்பட்ட ஏரிகளையும், நீர்த் தேக்கங்களையும் காங்கிரீட் மதில்கள் கட்டி ஒதுக்குவதில் சிரமங்கள் இடைபட்டன! பெலரஸ், யுக்ரேயின் பகுதிகளில் வாழும் மாந்தர் இன்னும் நீர் அருந்த முடியாது! பால், மாமிசம், கனிவகை, காய்கறிகளை உண்ண முடியாது! சமாதி கட்டப்பட்ட செர்நோபில் அணு உலைச் சிதைவுகளின் கதிர்வீச்சு அடித்தள நீர் ஓட்டத்தைச் சீர்கேடாக்கும் என்று அஞ்சப்படுகிறது! பிரிட்டனில் வட வேல்ஸ், கும்பிரியா, ஸ்காட்லாந்து ஆகிய பிரதேசங்களில் கதிர்வீசும் சீஸியம் [Cesium 139] படிந்து நிலங்களில் புல்மேய்ந்த ஆயிரக் கணக்கான மந்தை ஆடுகள் கதிர்த் தீட்டாகின. அவற்றில் பாலையோ, மாமிசத்தையோ யாரும் பயன்படுத்த முடியாது. ஆறாயிரம் மைல்களுக்கு அப்பால் உள்ள கனடாவின் ரெயின்டீயர் மான்களின் மாமிசத்தப் புசித்த மனிதரின் உடல்களில் கதிரியக்கம் காணப்பட்டது!

செர்நோபில் விபத்தின் மூலம் கற்றுக் கொண்ட பாடங்கள் என்ன?

1. நியூட்ரான் பெருக்கத்தைக் குறைக்கும் சுயப் பாதுகாப்புக் கருவி ஏற்பாடுகள் மனிதக் குறுக்கீடால் முடமாக்கப் பட்டால் அணு உலைகளில் விபத்துக்கள் நேரிடும்!

2. அணு உலை இயக்க அமைப்புகள், அபாய வெப்பத் தணிப்பு, கழிவு வாயுக் கட்டுப்பாடு ஏற்பாடுகள் விபத்தின் தீவிரத்தை உடனே குறைக்கத் தானாக முன்னியங்க வேண்டும்.

3. மனிதத் தவறாலோ, யந்திர ஏற்பாடுக் குறையாலோ, பிசகாலோ விபத்துக்கள் நேர்ந்தால், கதிரியக்க வாயுக்கள், கழிவுத் திரவம் வெளியே கசியாதபடி அணு உலைக் கோட்டை அரண் வாயில்களை அடைத்துத் தடுக்க வேண்டும்.

4. அணு உலை இயக்குநர் அனைவரும் எவ்வித விபத்துகளைக் கையாளும் திறமைப் பயிற்சிகள் கொடுக்கப்பட்டுக் கதிரியக்க வெளியேற்றத்தை தடுக்கும் அணு உலை ஆட்சி வல்லமையும் பெற்றிருக்க வேண்டும்.

5. குறைந்தது முப்பது மைல் ஆரத்தில் அணு உலையைச் சுற்றி வாழுகின்ற மக்கள் விபத்து நேர்ந்தால் என்ன விளைவுகள் தம்மைத் தாக்க வாய்ப்புள்ளன என்ற விளக்கமும், தடுக்கும் முறைகள் என்ன வென்றும் அறிந்திருக்க வேண்டும்.

6. அணு உலை விபத்துகளின் விளைவுகளைப் பொறுப்புடன் பலநாட்கள் கட்டுப்படுத்திச் சீர்ப்படுத்த ஊராட்சி, நகராட்சி, மாநில அரசு, காவல் துறையினர், தீயணைப்புப் படையினர், இராணுவம் அனைத்தும் ஒருங்கே ஒத்துழைக்கப் பயிற்சிகள் அளிக்க வேண்டும்.

[தொடரும்]

தகவல்:

1. Chernobyl 20 Years On: UN Finds Impact of Reactor Disaster Much Less Than Feared, But Few are Reassured. By: Mara D. Bellaby Associated Press [Sep 5, 2005 & Apr 23, 2006]

2. A Trip to Chernobyl By Awake Writer in Ukraine “Awake” [April 2006]

3. Remember Chernobyl Day (April 26, 1986) – 20 Years After

4. Chernobyl Day Action: Wednes day (26 April 1986) By: Fang Bot [April 24, 2006] From: [http://www.chernobyl-children.com/, http://perth.indymedia.org]

5. Chernobyl Accident, Nuclear Issues Briefing Paper 22 [March 2006]

6. Children of Chernobyl Belarus “Two Decades After the Disaster, Chernobyl’s Children Struggle to Live By: Anatol Klascuk [http://indexline.org/en/news/articles/2006/belarus-childern-of-chernoby.shtml]

7. Chernobyl Radiation Still Lingering, Experts Say By: Associated Press [Nov 15, 2004]

8. Officials Worry About Chernobyl Reactor Cracking Seal By: Associated Press [April 23, 2006]

9. Chernobyl Debate Still Rages On 20th Anniversary By: Alec Gazdic CTV.ca News [Apr 24, 2006]

10 Chernobyl Death Toll Will Top 90,000: Greenpeace Report By: Associated Press [Apr 18, 2006]

11 The Truth About Chernobyl By: Grigori Medvedev [1991]

12 The Aftermath of Chernobyl By Grigori Medvedev [1993]

13 How Safe? Three Mile Island, Chernobyl & Beyond By: James Megaw [1987]

14 Nuclear Energy Agency (NEA), France: Chernobyl Assessment of Radiological & Health Impact [2002 Update]

15 Nuclear Safety & The G7 Summit Reports (1991-2000) -A Contradiction in Terms? [http://archive.greenpeace.org/~comms/nukes/chernob/rep01.html (Nov 5, 2003)]

16. Safety Benefits of Risk Assessment at the U.S. Nuclear Power Plants [http://www.nei.org/ (March 2002)]

17. Nuclear Power, From Physics to Politics By: Laurence Pringle [1979]
******************

jayabarat@tnt21.com [May 11, 2006]

Series Navigation

சி. ஜெயபாரதன், கனடா

சி. ஜெயபாரதன், கனடா