திலகபாமா, சிவகாசி
இராஜகுமாரனுக்காக காத்திருந்து
தரவேண்டிய தட்சணைக்காக
தவித்திருந்து
கழுத்தில் தாலியேறியது முதல்
காத்திருப்பே காதலாய்
பசி தீர்க்க காத்திருந்து
பத்து மாதம் தீர்ந்தபின்
உந்தியில் உதித்த
மலரை உறங்க வைக்க
மறுபடியும் காத்திருப்பு
பசித்திருந்து,விழித்திருந்து
காத்திருந்து,கண்ணீர் வடித்திருக்கும்
உறவுக்காக காத்திருப்பு கடைசிவரை.
மல்லாந்து வானம்
பார்த்திருந்தது போதும்
மண்வாசத்திற்க்காக
மழை ஒரு நாள்
நகம் கடித்து துப்பியபடி
காத்திருக்கட்டும்
ஆதவனே
அணுதினமும் உனை நோக்கும்
சூாிய காந்திக்காக
சும்மாவேனும் ஒரு நாள்
காத்திருப்பாயா ?
இல்லை
மாறுவேனோ சூாியனாய்
என் திசை நோக்கி திரும்பும்
சூாியகாந்திக்காய்….
- சூாியனாவேனோ!……..
- திண்ணை அட்டவணை
- ஒரே நூற்றாண்டில் முப்பது நூற்றாண்டுகள்.
- தினம் ஒரு கவிதை –சங்கமம்
- தேவதேவனின் கவிதையுலகம்
- மசாலா சப்பாத்தி
- மைதாமாவு அல்வா
- ரோபோ கப் 2001
- எகிப்தை அழித்தது என்ன ?
- ஹைக்கூ கவிதைகள்
- மாபெரும் பயணம்
- …என்று கூறுபவர்க்கு
- ‘டி.எஸ். எலியட்டும் உள்ளீடு அற்ற மனிதர்களும்……. ‘ (1)
- சென்னை
- சேவியர் கவிதைகள்.
- தேவதேவனின் மூன்று கவிதைகள்
- தி.கோபாலகிருஷ்ணன் கவிதைகள்
- இந்த வாரம் இப்படி சூலை 4, 2001
- ஒரே நூற்றாண்டில் முப்பது நூற்றாண்டுகள்.
- வேறு வேறு அணில்கள்