சூரியனிடமிருந்து பிரம்மாண்ட சூரிய ஒளிவீச்சு இந்த வாரம்

This entry is part [part not set] of 59 in the series 20031106_Issue


இந்த வாரம் இதுவரை இல்லாதது போன்று, தொடர்ந்து 10 நாட்கள் சூரியனிடமிருந்து பிரம்மாண்டமான ஒளி வாயு வீச்சு நடந்து வந்திருக்கிறது.

இதனால், பில்லியன் டன் எடையுள்ள அதிவெப்ப வாயுக்கள் விண்வெளியில் சூரியனால் வீசி எறியப்பட்டன. இவற்றில் கொஞ்சம் பூமியை நோக்கியும் எறியப்பட்டன.

சூரியனை தொடர்ந்து கண்காணிக்க ஆரம்பித்ததிலிருந்து இதுபோன்ற ஒரு விஷயத்தைப் பார்த்ததேயில்லை என்று அறிவியலாளர்கள் தெரிவிக்கிறார்கள். இதன் மூலம் பூமியில் புவி காந்த புயல்கள் எந்த அளவு விளைவை ஏற்படுத்தும் என்று விண்வெளி தட்பவெப்பவியலாளர்கள் ஆராய்ந்து வருகிறார்கள்.

மிகச்சக்தி வாய்ந்த சுரிய ஒளிவாயு வீச்சுக்கள் ‘X ‘ அளவுக்குறியீட்டில் அளவிடப்படுகின்றன. சென்ற ஞாயிற்றுக்கிழமை X8 மற்றும் X3 நிகழ்ச்சிகளாகக் குறிக்கப்பட்டிருக்கின்றன.

திங்கள்கிழமை இன்னொரு X3 நிகழ்ச்சி நடைபெற்றது.

சென்றவாரம் உடனுக்கு உடனே X7 நிகழ்ச்சியும் X10 நிகழ்ச்சியும் நடைபெற்றன. செவ்வாய்க்கிழமை X20க்கு மேல் அளவிடக்கூடிய நிகழ்ச்சி நடைபெற்றதாக அறிவியலாளர்கள் கூறுகிறார்கள். ஆனால், இது சரியான அளவு என்று சொல்லமுடியாது. ஏனெனில், சூரியனைக் கண்காணிக்கும் துணைக்கோள்கள் சில வினாடிகளுக்கு ஒளி தாங்காமல் குருடாக ஆனதாக அறிவியலாளர்கள் தெரிவிக்கிறார்கள்.

எப்படியிருப்பினும், செவ்வாய்க்கிழமை நடந்த நிகழ்ச்சி இதுவரை அளவெடுத்ததிலேயே மிகவும் அதிகமான சக்தி உடைய ஒளிவாயு வீச்சு என்று அறிவியலாளர்கள் தெரிவிக்கிறார்கள். சென்றமுறை 2 ஏப்ரல் 2001இலும், 16 ஆகஸ்ட் 1989இலும் இதுபோன்ற X20 ஒளிவீச்சு நடந்திருக்கின்றன.

ஆனால், சூரிய புள்ளி இடம் 486 என்று குறிக்கப்பட்டிருக்கும் இடத்திலிருந்து வந்த மேற்கண்ட ஒளிவீச்சுக்கள் காரணமாக இந்த இடம் மிகவும் அதிகமாக இயங்கும் ஒளிவீச்சு இடமாக அதிகாரப்பூர்வமாக குறிப்பிடப்படுகிறது. 486 மேற்கு சூரியப் பகுதியில் இருப்பதால், இதிலிருந்து வரும் ஒளிவாயுவீச்சு பூமியை நோக்கி வரவில்லை.

இருப்பினும், நமது பூமியின் காந்த கவசம் தொடர்ந்து காந்ததுகள்களால் 24 மணிநேரத்திலிருந்து 48 மணி நேரம் வரை தாக்கப்படும் என்றும் இதனால் புவிகாந்த புயல்கள் தோன்றும் என்றும் அறிவியலாளர்கள் கூறுகிறார்கள்.

துருவத்தில் இதுபோன்ற காந்தத்துகள்கள் பூமியின் காந்த மண்டலத்தோடு வினை புரிவதால் தோன்றும் அட்டகாசமான ஒளி வெகுவிரைவில் துருவங்களில் தோன்றும் என்றும் கூறுகிறார்கள்.

இந்த காந்தபுயல் பூமியைச் சுற்றிவரும் துணைக்கோள்களையும் தாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த புயலில் வரும் எலக்ட்ரான்கள் இந்த துணைக்கோள்களில் இருக்கும் மைக்ரோசிப்புகளை பாதித்து அழிக்கும் என கருதுவதால், இந்த துணைக்கோள்களின் வேலைகள் தற்காலிகமாக நிறுத்தப்படும் என்றும் அறிவித்திருக்கிறார்கள்.

சிற்றலை ஒலிபரப்பில் வரும் வானொலியும் இதனால் பாதிக்கப்படும்.

Series Navigation

செய்தி

செய்தி