சாவை துணைக்கழைத்தல்

This entry is part [part not set] of 25 in the series 20100411_Issue

நட்சத்திரவாசி


சாவை துணைக்கழைத்தல்
நட்சத்திரவாசி

சுருக்கிடப்பட்ட கயிறை நன்றாக
இழுத்து பார்த்துக்கொள்கிறானவன்
நாற்காலி ஒன்றின் மீதேறி
கயிற்றை தலைக்குள் விட்டு
சுருக்கை சரி செய்து கொள்கிறான்
தான் தற்கொலை செய்து கொள்ள
யாரும் காரணமில்லை
என்று எழுத தோன்றியது அவனுக்கு
மேஜையில் பேனாவோ,காகிதமோ
காணவில்லை
பரபரப்பு அடைகிறானவன்
உடனே செய்து முடித்தாகவேண்டும்
கொஞ்சமும் தாமதித்தால்
எல்லாமே வீண்
யாராவது வரக்கூடும்
சமயமும் இல்லை
இனி கதவை திறந்து
காகிதத்தையும்,பேனாவையும்
எடுப்பதற்க்குள்…….
கதவையும் திறக்க வேண்டும்
கதை திறந்தால் நாற்காலி தெரியும்
அவற்றை முதலில் மறைக்க வேண்டும்
எல்லாம் பாழாகி விடுமோ
என்ற பயமும் இப்போது
கயிறை மறைத்து
நாற்காலியை தூரவைத்து
தாழ்பாழை திறக்க போகையில்
கேட்டது அம்மாவின் குரல்
“கதவ மூடிகிட்டு உள்ளே
என்ன பண்றே?”
கதை திறந்த போது
சாவு ஓடிப்போயிற்று.

Series Navigation

நட்சத்திரவாசி

நட்சத்திரவாசி