ஜனார்த்தன் – தமிழில் மணி
2011 மக்கட்தொகை கணக்கெடுப்பில் சாதியை சேர்க்க வேண்டும் என்ற மத்திய அரசின் தீர்மானத்தை ஓட்டி முற்போக்காளர்கள் மத்தியில் ஒரு சலசலப்பும் எதிர்ப்பும் கிளம்பியிருக்கிறது. இது சாதிவாரியான பிரிவை அதிகப்படுத்தும் என்ற வாதம் தவறானது ஏனெனில் அது குறிப்பிடப்படாமல் இருந்துவிட்டால்மட்டும் சமூகம் சாதியற்ற சமூகமாக மலர்ந்துவிடுவதில்லை. ஓவ்வொரு சாதியும் மொத்த சதவீத்த்தில் தோராயமாக எத்தனை சதவீதம் இருக்கிறது என்பதை தெரிந்து கொள்வது அவர்களின் நிலையை தெரிந்துகொள்ள உதவும்.
உண்மையில் எந்த சாதிவாரி கணக்கெடுப்பும் சரியானதாக அமையப்போவதில்லை. 1931ல் எல்லா சாதி தொகுதிகளும் சமூக சாதி அடுக்கின் மேல் நோக்கி நகர முனைவதாக ஆங்கிலேயர்கள் கண்டறிந்தனர். இந்தமுறை அதற்கு நேர்மாறான விளைவுகள் ஏற்படலாம். குற்றணர்வு பெற்ற உயர்சாதி இந்துக்கள் தங்களது சாதியை குறிக்காமல் விடும் அதே நேரம் மற்ற சாதிகள் அதிக ஓதுக்கிட்டு பலனுக்காக தங்களது எண்ணிக்கை கூட்டும் முயற்சியில் இறங்கலாம். எப்படியாயினும் சாதியின் பிடிப்பு மாறாது அதே அளவில் நம்மீது இறுகித்தான் இருக்கப்போகிறது.
முற்போக்காளார்கள் சாதிபற்றிய பார்வைதான் ஒரு உண்மையான பிரச்சனையாய் முன் நிற்கிறது. இந்திய முற்போக்காளார்கள், பொதுவாக இந்திய உயர் சாதி இந்துக்கள் சாதி நிறுவனத்திலிருக்கிற அதீத சமச்சீரன்மையால் அடைகிற பெரும்குற்றவுணர்வின் காரணமாக – சாதி நிறுவனத்தோடு எந்த சமனும் செய்து கொள்ளத்தயாராயில்லை. இதனால் சமச்சீரான மற்றும் அனைத்து சாதியினரையும் உள்ளடக்கிய மாற்றங்கள் என்ற போர்வையில் பேசும் சாதிப்பற்று அரசியல்வாதிகளின் வாதங்களுக்கு உதவிக்கரம் நீட்டுகின்றனர்.
சாதியைப்பற்றிய மாபெரும் குற்றவுணர்வை இந்துக்கள் இறக்கிவைக்க வேண்டிய நேரமிது. சாதி சமூகம் இப்போது இந்து மதம் என்று அழைக்கப்படக்கூடிய ஒரு மத நாகரீக காலத்தில் ஒரு தேவைக்காக தோன்றியிருந்தாலும் அது அனைத்து இந்தியராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட்துதான். இன்னும் சொல்லப்போனால் தங்கள் மதரீதியில் எந்த அங்கீகாரம் சாதிக்கு இல்லாதபோதும் இஸ்லாமும், கிறித்துவமும் இந்த மண்ணில் சாதியை சுவீகரித்துக்கொண்டவைதான். சுருங்க்கூறின், சாதி ஒரு இந்து பிரச்சனையல்ல, அது ஒரு இந்திய நடைமுறை.
சாதி யாராலும் உட்கார்ந்து யோசித்து கண்டுபிடிக்கப்பட்ட முறையாகயிருக்க முடியாது. அது எல்லோராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட்தாலேயே அது வளர்ந்திருக்க முடியும். அது இந்த் மண்ணிலே மேலும் கீழும் வளர்ந்து வியாபித்து, அடிவேர் வரை ஊடுறுவ அதுவே காரணமாய் அமைந்திருக்க முடியும். ஓவ்வொரு அந்நிய படையெடுப்பின் போதும், புரட்சியாளர்கள் அதற்கு எதிராக தாக்கியபோதும் அது மேலும் மேலும் பெருகி அதன் வேர்களை பலப்படுத்திகொண்ட்து. சாதி வெறும் மத சம்பந்தப்பட்ட விசயமாக மட்டுமின்றி இந்திய யதார்த்த்தில் தேவையான ஒரு கூட்டு பாதுகாப்பு மனப்பான்மை உணர்வை கொடுப்பதான ஒரு அமைப்பாய் நிருபணமாயிருக்கிறது.
நமது சில முற்போக்காளர்கள் நம்புவது போல சாதியின் மீதான பெரும் தாக்குதல்கள் இஸ்லாமிய படையெடுப்பினாலோ, பாதிரியார் படையினாலோ நிகழவில்லை. புத்தர் சாதியின் மீது தாக்குதல் நட்த்தி தோற்றுப்போனார். அதுபோல விவேகானந்தர், கபீர், குருநானக், ராம் மோகன் ராய், தயானந்த சரஸ்வதி, ராமானுஜம், ஏன் காந்தியும், அம்பேத்காரும் கூட. சாதியின் மீதான் எந்த தாக்குதல் உடனடியான எதிர் தாக்குதலை கொடுத்திருக்கிறது. அம்பேத்காருக்குப்பிறகு, குறிப்பாய் கன்சிராமும், மாயாவதியும் ஒரு பழி எதிர்வினையாய் சாதியை எதிர்த்தனர். அதற்காக அவர்களை தலித்துக்களையும் மற்ற தாழ்த்தப்பட்டவர்களையும் ஒரு குடையின் கீழ் தொகுக்க முயற்சித்தனர். பிற்படுத்தப்பட்ட் மக்களும் சாதிவாரியாக தொகுக்கப்பட்டு அதனால் பெரும்பயன் அடைந்து – அது தெற்கே துவங்கி வடக்கி நோக்கி நகர ஆரம்பித்திருக்கிறது. குறிப்பாய் தமிழகத்தில் சாதி அடக்குமுறை என்பது ஆதிக்க ஜாதிகள் தாழ்த்தப்பட்ட சாதிகளின் மீது செலுத்தும் சாதி ஆதிக்கத்தை குறிக்கும்.
சாதியின் சூட்சுமத்தை தெரிந்து கொள்ள அதை ஆதியோடு அந்தமாக அறிந்து கொள்வது அத்தியாவசியமான ஒன்று. ஒரு தனிமனிதனுக்கு அது பிரிக்கும் நடைமுறையல்ல,. தன் குழுவோடு ஒன்றிணையும் ஒரு தளம் அது. அதில் தாயதித்தனம் அந்த சமூகத்தை இணைக்கிறது. கடினமான புயலடிக்கிற நேரங்களில் அது அவனை அணைந்துவிடாமல் காக்கிறது. த்த்தளிக்கும் படகிற்கு கலங்கரை விளக்கமாய், உடுக்கை இழந்தவனுக்கு இடுக்கண் களையும் கரமாய் அவனை அணைக்கிறது. ஒரு மனிதன் தன் தற்கால, எதிர்கால கவலைகள் எதுவுமின்றி பாதுகாப்பாய் உணரும் போதும் சாதி தன் இறுக்கமான கண்ணிகளை தளர்த்தி கொள்கிறது. ஒரு அரசாங்கம் தனது தனிமனித உரிமையை தனது சமூக உரிமைகளோடு சமரசம் செய்யாமல் பாதுகாக்கிற பொழுது தானகவே சாதி கரைந்து போகும்.
பன்முகத்தன்மையோடு இருக்க நாம் பழகியதால் சாதி இன்னும் இருந்து கொண்டிருக்கிறது. மேற்கத்திய உலகத்தில் வேற்றுமையும்,பன்முகத்தன்மையும் அச்சமூட்டும் சமூக பலவீன்ங்களாக கருதப்பட்டு முழுமையாக வன்முறையாய் அழித்தொழிக்கப்பட்ட்து. அமெரிக்கர் செவ்விந்தியர்களையும், ஆஸ்திரேலியர்கள் தங்களது பூர்வ குடிகளையும் அவ்வாறே செய்தனர். ஒருமுகத்தன்மை நோக்கி நகரும் சமூகம் அதை அடைய செய்யும் அதிபயங்கர வன்முறை கொண்டு அழித்தொழிக்கும் வேலையில் ஈடுபடும் என்று 19 நூற்றாண்டு பிரஞ்சு அறிஞர் இர்னெஸ்ட் ரெனான் கூற்றை அம்பேத்கார் நினைவு கூர்கிறார். “ ஓற்றுமை எப்போது வன்முறையினால் வழி நட்த்தப்படுவதில்லை. அவ்வாறு நிகழ்ந்து கொஞ்ச காலமே உயிரோடிருந்த தெற்கு, வடக்கு பிரான்சின் இணைப்புகள் நீர்மூலமாக்குதல் மூலம் நிகழ்ந்து வன்முறையே ஆட்சி செலுத்தியது “
இந்தியாவில் வேற்றுமை, பன்முகத்தன்மை பலவீனமாகவோ, ஒரு அச்சுறுத்தலாகவோ கருதப்படவேயில்லை. எல்லா இனத்தையும், வகுப்பையும் மிக குறைந்த உராய்வுகளோடு வன்முறைகளோடு அவர்களின் நிலைமை பலவீனப்படாமல் ஒரே தளத்தில் கொண்டு வரும் வழியே பெரும்பாலும் கடைபிடிக்கப்ப்ட்ட்து இவ்வாறே ஓவ்வொரு படையெடுப்பின் போதும் ஓவ்வொரு இந்து பொருளாத முன்னேற்ற மாற்றத்திலும் சாதிகள் வள்ர்ந்தன. அதற்கு மாறாக வன்முறையோடு சாதியற்ற சமூகத்தை அடைய நாம் முயற்சித்திருக்கலாம். ஆனால் அமைதி மற்றும் சமரசமான ஒரு வழியை நாம் தேர்ந்தெடுத்தோம்.
அப்படியென்றால் சாதியும் அதன் எதிர்மறை விளைவுகளும் எல்லா காலத்திலும் இருக்கப்போகிறது என்ற அர்த்தமா ? கண்டிப்பாய் இல்லை. திறந்த பொருளாதர சந்தை, நகர் பொருளாதாரம், உலகமயாமாக்கம் போன்றவை சாதி என்கிற பெரிய மாளிகை அசைத்து, இடிக்கிறது. கொஞ்ச காலத்தில் அது தூள் தூளாக்கப்பட்டு விடும். சமூக அளவில் சாதிகள் மறைவதற்கான ஒரு சில மாற்றங்களை செய்வது மேலும் அதன் அழிவை துரிதமாக்கும். சாதி வெறும் பிறப்பு சார்ந்த விசயமாகவே மட்டும் இருக்க கூடாது. அது ஒரு சஙகம்(கிளப்) போல அதற்கான நுழைவு, வெளியேற்ற விதிகள் கொண்ட நிறுவனமாக மாற்றப்படும் போது அதனது எதிர்மறை விளைவுகள் தானாகவே தன் பலம் இழக்கும். நமது சந்தை விதிகளும், மக்கட்தொகுப்பும் சாதியை அழிக்கும் வேலையை தொடர நாம் அனுமதிக்கலாம்.
முற்போக்காளர்கள் சாதி பற்றிய குற்றவுணர்வில் உழன்று கொண்டிருக்க வேண்டாம். அவர்கள் அதோடு சண்டை போடுவதற்கு பதிலாக அநிர்நியம் அடைய செய்யவேண்டும்
- பொத்தி பொத்தி வளர்த்திருக்கா !!!
- சமஸ்கிருதம் கற்றுக்கொள்வோம் – 5
- இலக்கியத் தோட்டத்தின் விருது விழா
- சூறாவளியின் பாடல்
- பிரபஞ்சத்தின் மகத்தான எழுபது புதிர்கள் ! பூமியின் துல்லிய ஈர்ப்பு வரைப்படம் பதியும் ஈசாவின் விண்ணுளவி அனுப்பிய புதிய தகவல் (கட்ட
- சமபாதத்தில் உறைந்த இந்திய நடனங்கள் – 3
- இவர்களது எழுத்துமுறை – 2 புதுமைப்பித்தன்
- சீதாம்மாவின் குறிப்பேடு – ஜெயகாந்தன் -24
- திரு ஹெச் ஜி ரசூல் கவிதை பற்றி
- தா
- தமிழ் பட்டிமன்ற கலைக் கழகம் (சிங்கப்பூர்) வழங்கும் 49வது பட்டிமன்றம்
- ஆதிசங்கரர் ஞானசம்பந்தரை “திராவிட சிசு” என குறிப்பிட்டது பற்றி புதிய மாதவியின் கருத்து
- கவிஞர் சிற்பி இலக்கிய விருது வழங்கும் விழா
- ஜடாயு எதிர்வினைக்கு நன்றி
- அரவிந்தன் நீலகண்டனுக்கும் நன்றி
- கால்டுவெல் , திராவிடம் குறித்து கண்ணன், நரேன்…
- நிஜங்கள் சுடுகின்றன
- இரயில் பயணம்
- முள்பாதை39
- உயிருண்டு வயிறில்லை
- வேத வனம் விருட்சம் 96 –
- கலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) ஓ இரவே ! = கவிதை -32 பாகம் -3
- கவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) இசைக் கருவிகள் பாடும் கவிதை -14 எங்கே இசை பொங்கிடுமோ
- சிதறிப் போன கண்ணாடி…
- கால்டுவெல் + திராவிடம் > இனவரைவியல்
- சாதி – குற்றணர்வு தவிர்
- (Brahmins have become the Dalits)தலித் பிராமணன்
- கல்லறை முதல் கல்லறை வரை – விஜயின் மதராசபட்டணம்
- உலகங்கள் விற்பனைக்கு
- களம் ஒண்ணு கதை பத்து – 10 இன்பசேகரம்
- பாதிரிமார்களின் தமிழ் பங்களிப்பு: ஒரு நடுநிலைப் பார்வை – 2
- நெஞ்சை முறிக்கும் இல்லம் (Heartbreak House) மூவங்க நாடகம் அங்கம் -1 காட்சி -5
- பரிமளவல்லி (தொடர்கதை) அத்தியாயம் 4. பட்டிமன்றம்