சாதி – குற்றணர்வு தவிர் ஜனார்த்தன் -கட்டுரை பற்றி

This entry is part [part not set] of 33 in the series 20100822_Issue

விருட்சம்



/சாதி – குற்றணர்வு தவிர் ஜனார்த்தன் – தமிழில் மணி

திறந்த பொருளாதர சந்தை, நகர் பொருளாதாரம், உலகமயாமாக்கம் போன்றவை சாதி என்கிற பெரிய மாளிகை அசைத்து, இடிக்கிறது. கொஞ்ச காலத்தில் அது தூள் தூளாக்கப்பட்டு விடும். சமூக அளவில் சாதிகள் மறைவதற்கான ஒரு சில மாற்றங்களை செய்வது மேலும் அதன் அழிவை துரிதமாக்கும். சாதி வெறும் பிறப்பு சார்ந்த விசயமாகவே மட்டும் இருக்க கூடாது. அது ஒரு சஙகம்(கிளப்) போல அதற்கான நுழைவு, வெளியேற்ற விதிகள் கொண்ட நிறுவனமாக மாற்றப்படும் போது அதனது எதிர்மறை விளைவுகள் தானாகவே தன் பலம் இழக்கும். நமது சந்தை விதிகளும், மக்கட்தொகுப்பும் சாதியை அழிக்கும் வேலையை தொடர நாம் அனுமதிக்கலாம்.
-//

இதில் எனக்கு நம்பிக்கை இல்லை. சாதிப் பிரிவுகள், உட்பிரிவுகள் அது ST முதல் FC வரை ஏதாவது வரையறையில் வைத்து அதற்கேற்ற சலுகைகள் என்று வைத்து படிக்கும் மாணவர்களாகிய எதிர்கால சந்ததியினரிடையே அதை வளர்த்தும் அரசே சான்றிதழ் வழங்கியும் , ஜாதி ஓட்டுக்கள் என்று அரசியல் செய்தும் இருக்கும் வரை இது எப்படி சாத்தியமாகும் ?


Thanks & Regards,

Series Navigation

விருட்சம்

விருட்சம்