கே.பாலசந்தர் ::::: தாதா சாகிப் பால்கே விருது

This entry is part [part not set] of 47 in the series 20110430_Issue

கோச்சா


சந்தோஷம் சில சமயம் அள்விடமுடியாதபடி பெருகும். கே.பாலசந்தருக்கு , தாதா சாகிப் பால்கே விருது என்று தொலைக்காட்சியில் செய்தி வந்த போது அதேவிதமான சந்தோஷம்….
மனதுக்குள் பகலவனாய் ஒளிவட்டமிட்டது, “அபூர்வராகங்கள்”, அவள் ஒரு தொடர்கதை… மன்மதலீலை… டீக் ஹை… காட்சிகள்.
டைட்டில்கள் இசையுடன் ஓடி, பின் திரை கருமையாக, இசை வெறுமையாக, மெதுவாய் வரும்… இயக்கம்: கே.பாலசந்தர் என்று…. அது வந்து போகிறது…. வெறுமையான இசை பின் பிரவாகமெடுத்து ஓடுகிறது….
நளினமற்ற பெண்கள் கதாநாயகிகளாய் வந்து தூக்கத்தில் பயமுறுத்திய தலைமுறைக்கு நளினத்தை தந்து தூக்கம் தந்தவன் – இனிய கனவுகளுடன்…
திமிரும் புதிய தலைமுறை எண்ணங்களை இயல்பாய் தந்தவன்…
முரணான உணர்வு போராட்டங்களில் வழுக்கி விழாமால் விழா கண்டவன்… அபூர்வமாய் நமக்கு கிடைத்த ராகம் அது…
கண்டவுடன் எல்லையற்ற… பேதமற்ற காதல் மனம் மன்மதலீலையாக ஓடி விளையாடியது…
40தாண்டிய சிக்கலில் சிந்து பைரவி இசைத்தார். அதிலும், பாடறிந்து படிப்பறிந்து பள்ளிக்கூடம் தானறிந்தாலும்… தமிழிசைக்காக கேள்வி கேட்ட கேள்வியின் நாயகன். சினிமாவில் வேள்வி கண்டவன்.
கட்டிய கோட்டை உறுதி என்பதால், பல விமர்சன பீரங்கிகள் துளைத்தும் அருங்காட்சியகமாய் இன்னும் உள்ளான்…

கமல் ரஜினி ஸிரிதேவி – மூன்று பந்துகளை தூக்கி போட்டு மாறி மாறி பிடிக்கும் வித்தைக்காரனைப் போல , அவர்கள் கொண்டு இவன் செய்த ஜாலம் தமிழ் சினிமாவின் பொற்காலம்…
எவனும் தான் கொண்ட ஜாதியின் பிழைகளை சுட்டிக் காட்டுவதும் இல்லை தட்டிக் கேட்பதும் இல்லை… ஆனால் இவருக்கு அது ஒரு தொடர்கதை…
இவர் நாகேஷுடன் நடத்தியது கதகளி என்றால்,
கதைகளுடன் சில சமயம் ஆடியது ருத்ரதாண்டவ அரங்கேற்றம்…
அழகு பெண்களும் , அர்த்தகதை வசனமும் இவர் தந்த கொடை – தமிழ்சினிமாவிற்கு…..
திருவள்ளுவரை முத்திரையாக கொண்டு அரங்கம் நிறைத்த அண்ணல் இவர்….
நமக்கு நல்ல சினிமா பல தலைமுறைக்கு தந்த கலை வள்ளல் இவர்…
வாழ்க வாழ்த்துக்கள்….. கே.பாலசந்தர்… புதுமை இயக்குனரே.. தமிழ் சினிமாவின் நிரந்தர பொங்கும் பூம்புனலே…

கோவிந்த (எ) கோச்சா

Series Navigation

கோச்சா

கோச்சா