குப்பைத் தொட்டி

This entry is part [part not set] of 30 in the series 20020917_Issue

ஆனந்தன்


என்னுள் இருக்க வேண்டியவை
எல்லாம் சிந்திக் கிடக்கின்றன…
என்னுள் அழுத நாட்கள்
எத்தனை எத்தனை….
என்று திருந்துவர், இவர்கள் ?

புகை குடித்தால் புதைவது
தன் உயிர் மட்டும் அல்ல
என்று தெரிந்தும் – ஊதி
முடிப்பவர்களாவது மீதி துண்டை
என்னில் சேர்ப்பார்களா ?

காலை அடுப்படி வேலையில்
அவசரமாய்க் கொட்டவரும்
அடுத்தாத்து மாமியாவது – நின்று
நிதானித்து சரியாய்
என்னுள் சேர்ப்பாளா ?

வறுமையின் உருவமைந்து,
வேண்டாத காகிதத்தை
வேண்டித் தேடிவரும், சிறுவர்களும்
என்னுள் இருப்பதையும்
சிந்தித்தான் செல்கின்றனர்.

நேற்றைய சாதத்திற்கு
என்னுள் தலையை நுழைத்து
வாரிக் கலைக்கிறது
வாலும் தோலுமாய்
அந்த நாய்.

இவை பற்றாத குறைக்கு
குப்பையோடு வரும்
குப்பை வண்டி – வேகமாய்
இங்கு வாரி,
ஊர் முழுக்க இறைக்கிறது!

அத்தனை குப்பைகளும்
என் அகம் புறக்கணித்து
அணிவகுத்து நடந்பூசூல்ஷ
தொட்டிலாடாம்ஸ்ரீ – முகவரி
மறுக்கப்பட்ட மழலைகளுக்கு.

k_anandan@yahoo.com

Series Navigation

ஆனந்தன்

ஆனந்தன்