காலத் தடாகம்….

This entry is part [part not set] of 41 in the series 20040729_Issue

பட்டுக்கோட்டை தமிழ்மதி


அந்த
கரையில் நின்று கால்கள் நனைத்தோம்.

மீன்கள் பிடிக்க மீன்களானோம்.
விழிமீன் அலைமீன்
சிறுமீன் பெருமீன்
சினேகம் பார்த்தோம்.

நீரில் தாமரையாய்
நின்று தலை நீட்டினோம்.
வெள்ளத்தணைய உள்ளத்தணைய
உயர்ந்தோம் இருந்தோம்.

அலையாய் நீந்தி
சில பொழுது
சிலையாய் அசையாதிருந்தோம்.

ஆழம் தொட்டோம்
அள்ளியது மண்ணென்றாலும்
ஆனந்தத்தில்
முத்தாக முகம் மலர்ந்தோம்.

மழைத்துளி விழ
கரையும்துளி நாமானோம்.

காய்த்தமரம் கல்லடிபடுதலாய்….
தத்தளிக்கும் நீரில்
தவளைக்கல் வீசுதல்லாய்
மழைத்துளி வெயில் ஒளி
அங்கே
வீசித்தெறிக்க….

எறிந்த கல்லாய்
உனக்கு நானும் எனக்கு நீயும்
இருந்தோம் ஒளிந்தோம்.

நமக்கு
வெயில் மழையாக
நிலம் நீராக….

தாகம் தணித்து
தள்ளிவந்த பின்னும்
தணியாமல்….

காணச் சொல்கிறது
தேடச் சொல்லி ஓடச்சொல்கிறது.

கடந்து வந்த பின்

கானல் நீராக
காண
நெஞ்சம் நனைக்கும் நீராக

அந்த
காலத் தடாகம்
காதல் தடாகம்.

tamilmathi@tamilmathi.com

Series Navigation

பட்டுக்கோட்டை தமிழ்மதி

பட்டுக்கோட்டை தமிழ்மதி