கலைச்சொற்கள்,இன்றைய தமிழ்- சில கேள்விகளும்,குறிப்புகளும்

This entry is part [part not set] of 49 in the series 20040101_Issue

K.ரவி ஸ்ரீநிவாஸ்

வெங்கட்ரமணன் கட்டுரையில் சில கருத்துக்களை முன் வைத்துள்ளார்.அவை விரிவான பரீசிலனைக்கு

உரியவை..தமிழில் அறிவியல்,சமூக அறிவியல் போன்றவற்றில் வெறும் கலைச்சொற்களை உருவாக்குவதால் மட்டும் பெரிதும் பயனில்லை.தொடர்புடைய சிந்தனைகள்,கருத்துக்கள்,கோட்பாடுகள் குறித்தும் எழுதப்பட வேண்டும்.அப்போதுதான் கலைச்சொற்கள் எந்தப் பொருளில்,எந்த சந்தர்ப்பத்தில் எப்படி,ஏன் பயன்படுத்தப்படுகின்றன என்பது புலனாகும்.இந்தப் புரிதல் கலைச்சொற்கள் உருவாக்கத்தின் போதே தேவைப்படும்.அதைவிடுத்து அப்படியே சொற்களை உருவாக்குவதால் பயனில்லை.உதாரணமாக

stem cell என்பதை தண்டு செல்கள் என்று குறிப்பது எளிது.ஆனால் தமிழில் தண்டு/முதுகுத் தண்டு/வடம்

போன்றவைக்கும் stem cell என்பதையும் தொடர்புபடுத்திப் புரிந்துகொள்வது பொருத்தமாயிராது.இங்கு

stem என்பது originate,derive,or to be caused by something என்ற பொருளில் உள்ளது.stem cell-

an undifferentiated cell that can give rise to other cells of the same type indefinitely or from which specialized cells e.g. blood cells develop.இந்த பிண்ணனி தெரியாவிட்டால் பொருத்தமற்ற

கலைசொற்களையே உருவாக்கிக்கொண்டிருப்போம்.எழுதப்படும் போது பயன்படுத்தப்படும்/புழக்கத்தில் உள்ள

எத்தனை சொற்கள் இப்படி பொருத்தமற்று உள்ளன என்பதை கண்டறிவது அவசியம்.கலைச்சொற்களைப் பொருத்தவரையில் ஒரு தர்க்க ரீதியான கண்ணோட்டம் இல்லை.உ-ம் photo -புகைப்படம்/நிழல்படம்.

photosynthesis-ஒளிச் சேர்க்கை.சேர்க்கை என்பது அவ்வளவு பொருத்தமல்ல. ஒளிப்பதிவு,ஒளிப்பதிவாளர்-

இவையும் பயன்பாட்டில் உள்ளன.(ஒளிஒவியர் என்பது சிற்ப்புமிக்க குழப்பம்).

தளையறு மென்கலம் என்று ஒருவர் குறிப்பிடுவதை வேறொருவர் தடையற்ற மென்பொருள் என்று குறிப்பிடலாம்.இன்னொருவர் நிபந்தனையற்ற மென்பொருள் என்று எழுதலாம்.இவற்றையெல்லாம் விட பொருத்தமான சொல்லை வேறொருவர் உருவாக்கலாம்.ஆங்கிலத்தில் Free Software,Open Source குறித்து ஏராளமாக எழுதப்பட்டுள்ளது.அத்துடன் ஒப்பிடுகையில் தமிழில் குறைவு.காப்பிரைட் என்பதை பதிப்புரிமை என்கிறோம்,காப்பிலெப்ட் டிற்கு ?. வெங்கட் ரமணன் எளிமைப்படுத்தப்பட்ட பார்வையை முன் வைக்கிறார்.இது ஒரளவிற்கே உதவும்.கார் என்பது மோட்டார் கார் என்பதிலிருந்து வந்த சொல்.தமிழில் கார் என்பது அதற்கு முன் பயன்படுத்தப்பட்ட விதம் வேறு(உ-ம் கார்மேகம்,கார் காலம்,கார்குழல்).இன்றும் கார் காலம் என்ற சொல் பயன்படுத்தப்பட்டாலும் அதை யாரும் (மோட்டார்) காருடன் தொடர்புடையது என்று புரிந்து கொள்வதில்லை.மோட்டார் வாகனம் என்பது அரசின் விதிகள்,அறிவிப்புகளில் உள்ள சொல்.கார்-தேர் என எதுகை-மோனை ரீதியாக இதை பார்ப்பது உதவாது.புகைரதம் என்பது தமிழ் நாட்டில் புழக்கத்தில் இல்லை, ஈழத்தமிழர் பயன்படுத்தும் சொல் இது.தமிழில் புகை வண்டி என்ற சொல்லும், புகை ரதம் என்ற சொல்லும் ஒரே பொருளைக் குறிக்கின்றன.தமிழ்நாட்டில் பேச்சில் ரயில் என்ற சொல்லே பயன்படுத்தப்படுகிறது, எழுத்திலும் கூட இதுவே அதிகம் பயன்படுத்தப்படுகிறது.ஆனால் இன்று ரயில் என்றால் அதிலிருந்து புகை வரவேண்டும் என்று யாரும் எதிர்பார்ப்பதில்லை.சொல்லை அப்படியே பொருள் கொண்டால் என்ன ஆகும்.ஆங்கிலத்தில் railway/train என்ற சொல்லுக்கும், புகைக்கும் என்ன தொடர்பு.அது போல் மிதிவண்டி நிலையம் என்று எழுதியிருந்தாலும் பேச்சிலும்,எழுத்திலும் சைக்கிள் என்பதுதான் அதிகம் பயன்படுத்தப்படுகிறது.open university என்பது திறந்த வெளி பல்கலைகழகம் என்பதாகவே மொழிபெயர்க்கப்படுகிறது, திறந்த பல்கலைகழகமாக அல்ல.open source என்பதில் உள்ள source என்பதற்கு ஆணைமூலம் என்பது அவ்வளவு பொருத்தமான சொல்லாக இல்லை.open source குறித்து எழுதப்பட்டுள்ள பலதுறை கட்டுரைகளும்,கண்ணோட்டங்களும் தமிழில் தரப்பட்டு, விவாதிக்கப்பட வேண்டும்.பென்க்லர்,லெசிக் போன்றோர் எழுதியவற்றை தமிழில் தருவது முக்கியமானது எனக் கருதுகிறேன்.

கார்பன் டை ஆக்ஸைட் என்பது கரியமில வாயு என்று தரப்படுகிறது, ஆனால் பலவற்றை ஆங்கிலச் சொற்களால்தான் குறிக்கிறோம்-ஹைட்ரஜன்,பிளோரின்,யுரேனியம், ஒசோன்.சில சொற்கள் புழக்கத்தில் வந்து நிலைத்துவிடுகின்றன.சட்டத்துறையில் தீர்ப்புகள்,கட்டுரைகளில் பல சொற்கள்(habeuas corpus,ispo facto,de jure, pacta sunt servanda ) பயன்படுத்தப்படுகின்றன.இவை சட்டச் துறை சொல்லாடலின் பகுதியாக உள்ளன.அத்துறையிலுள்ளோருக்கு இவற்றின் பொருள் என்ன என்பதை புரிந்து கொள்ளமுடியும்.ஒவ்வொன்றையும் ஆங்கிலத்தில்தான் எழுத வேண்டும் என்று யாரும் எதிர்பார்ப்பதில்லை.தமிழில் habeuas corpus

என்பது ஆள் கொணர்தல் என்பதாக மொழி பெயர்க்கப்படுகிறது என்று நினைக்கிறேன்.இது பெருமளவிற்கு

பொருத்தமானது,படிப்பவருக்கு ஆள் கொணர்தல் மனு என்றால் என்ன என்பது ஒரளவிற்காவது விளங்கும்,ஹெபியஸ் கார்ப்பஸ் என்றால் அந்தளவிற்கு விளங்காது.எனவே எழுதும் போது ஆள் கொணர்தல்

மனு என்று எழுதி அடைப்புகுறிக்குள் ஹெபியஸ் கார்ப்பஸ் என்று குறிப்பிட்டால் படிப்பவர் வேறு யாரிடமாவது ஹேபியஸ் கார்ப்பஸ் மனு என்றால் என்ன என்பதை கேட்டாவது தெரிந்து கொள்ள முடியும்.இல்லாவிடில் ஆள் கொணர்தல் மனு என்றால் என்ன என்பதை சில வரிகளில் விளக்கி இது ஹெபியஸ் கார்பஸ்

மனு என்பதன் தமிழாக்கம் என்பதை புரியவைக்கலாம்.நாளடைவில் ஹேபியஸ் கார்ப்பஸ் என்று குறிப்பிடுவது கூட தேவைப்படாது.எப்படி மக்களவை என்பது லோக்சபாவைக் குறிக்கிறது என்பது இன்று படிப்பவர்களுக்குப் புரிகிறதோ அது போல் ஹெபியஸ் கார்பஸ் மனு என்றால் என்ன என்பதும் புரிந்துவிடும்.

தமிழில் கலைச் சொற்கள் உருவாக்கம்,பயன்பாடு குறித்து ஒரு குழப்பமான நிலையே உள்ளது.evolution

என்பதற்கு பரிணாமம் என்ற சொல்லை பயன்படுத்துகிறோம்.தமிழ் இணைய பல்கலைககழக தளத்தில் உள்ள இலங்கை அரசின் வெளியீட்டில் வேறொரு சொல் உள்ளது.இது தமிழ் நாட்டில் பயன்படுத்தப்படுவதாகத்

தெரியவில்லை.இலங்கையில் இது மட்டுமே பயன்படுத்தப்படுகிறதா அல்லது பரிணாமம் என்பதும் பயன்படுத்தப்படுகிறதா என்பதை யாராவது விளக்கினால் பயனுள்ளதாக இருக்கும்.இந்த இரண்டு சொற்கள் தவிர வேறு சொற்(கள்) பயன்பாட்டில் உள்ளனவா ?

குவாண்டம் என்பதற்கு குவாண்டம் உட்பட ஐந்து சொற்கள் தரப்படுகின்றன / எழுதும் போது பயன்படுத்தப்படுகின்றன.இது தவிர வேறு சொற்கள் பயன்பாட்டில் இருக்கக் கூடும். artifical intelligence

என்பதற்கு செயற்கை அறிவு/அறிவாற்றல் என்பது பொருத்தமான சொல்,புழக்கத்தில் உள்ளது. வேறொரு

சொல்லை சமீபத்தில் ஒரு கட்டுரையில் படித்தேன்.கட்டுரையாளர் அதை உருவாக்கினாரா அல்லது அதுவும்

ஏற்கனவே புழகத்தில் உள்ள சொல்லா என்பது தெரியவில்லை.

இப்படி பல சொற்களை ஒன்றைக் குறிக்க பயன்படுத்தப்படும் போது குழப்பம் ஏற்படுகிறது.எதிர்காலத்தில்

தமிழில் உள்ளவற்றை தகவல் தொகுப்புகளில் சேர்க்க,வரிசைப்படுத்த,தேட முயற்சிகள் செய்யும் போது இது இன்னும் சிக்கலை விளைவிக்கும்.கூகிளில் ஆங்கிலத்தில் குவாண்டம் என்று தேடினால் போதும்.தமிழில் அப்படித் தேடினால் குவாண்டம் என்பதை சிப்பம் அல்லது துணுக்கம் என்று குறிப்பிடும் கட்டுரைகள்

கிடைக்காது.பொதுவாக தேடும் போது முக்கிய வார்த்தைகளின் அடிப்படையில் தேடுவதுண்டு.தமிழில் வெளியாகியுள்ள அறிவியல் கட்டுரைகளை ஒரு தகவல் தொகுப்பில் ஏற்றும் போதோ அல்லது அதில் தேடும் போதோ வேறு சொற்களும் பயன்படுத்தப்படுகின்றன என்பதைத் தெரிந்துகொள்ளாமல் தகவல் தொகுப்பைஉருவாகீனோலோ அல்லது தேடினாலோ பல கட்டுரைகள் விட்டுப்போகும்.அப்போது குவாண்டம் அல்லது சிப்பம் அல்லது துணுக்கம் என்று தொகுப்பது, தேடுவது மிகவும் சிரமம் தரும். இது ஒரு எளிய உதாரணம். இந்த சிக்கல்களை உணராமல் அவரவர் தம் பங்களிப்பாக ஏற்கனவே புழக்கத்தில்/பயன்பாட்டில் உள்ளவற்றிற்கு கலை சொற்களை உருவாக்கி அறிமுகப்படுத்தி,பயன்படுத்திக் கொண்டிருந்தால் குழப்பங்கள் அதிகரிக்கும், தகவல் தொகுப்பு உருவாக்கம்,வரிசைப்படுத்தல்,தேடல் போன்றவை மேன்மேலும் கடினமாகும்.

இது தவிர வேறோரு பிரச்சினையுமுள்ளது.புவி ஈர்ப்பு விசை, புவியீர்ப்பு விசை என்ற இரண்டும்

பயன்பாட்டில் உள்ளன.தகவல் தொகுப்பு உருவாக்கம்,தேடல் முயற்சிகளில் இந்த இரண்டும்

கணக்கில் கொள்ளப்படாவிட்டால் அவற்றின் நோக்கம் நிறைவேறாது.இது போல் தமிழில் உள்ள

கலைச் சொற்களை ஆராய்ந்து சமமான சொற்கள் பட்டியல் தயாரிக்காமல் இணையம்,கணினி

தரும் வசதிகளை நாம் பயன்படுத்திக்கொள்ள முடியாது.பயன்படுத்தக்கூடிய வகையில் ஒரு தகவல்

தொகுப்பினை தயாரிப்பது என்பதும் எளிதல்ல.ஆனால் எத்தனை பேர் இது குறித்து யோசிக்கிறார்கள்.

பிரச்சினை தொழில் நுட்பத்தில் இல்லை.தமிழில் உள்ள கலைச் சொற்களின் தொகுப்பு, ஆங்கில சொற்களுடன் உருவானால் மட்டுமே குழப்பங்களை தவிர்க்க முயற்சி செய்ய முடியும்.தமிழ் கலைச்சொற்களுக்கென்று ஒரு தெசாரஸ் உருவாக்க வேண்டிய நிலைதான் இன்று உள்ளது.சில அடிப்படைகளை புரிந்து கொண்டு செயல்படாவிட்டால் ‘ஒரடி முன்னே, ஈரடி பின்னே ‘ என்ற ரீதியில்தான் பயணம் தொடரும்.

ஆங்கிலத்தில் meta என்ற சொல்லை வேறோரு சொல்லின் முன்பயன்படுத்துவதன் மூலம் பல புதிய சொற்கள் உருவாக்கப்படுகின்றன.உ-ம் meta data,meta analysis,meta theory,metaphysics.தமிழில் மீமெய்யியல் என்பது metaphysics ஐ குறிக்க பயன்படுத்தப்பட்டுள்ளது.இன்று அவ்வாறு பயன்படுத்த முடியுமா.மீ போல் இவ்வாறு பயன்படுத்தக்க்கூடிய சொற்கள் எவை.

அறிவியலும்,அறிவு சார்சொத்துரிமைகளும் என்ற கட்டுரை உயிர்மை டிசம்பர் 2003 இதழில் வெளியாகியுள்ளது.இதை எழுதும் போது பொருத்தமான கலைச்சொற்கள் எவை என்பதற்காக இணையத்தில் தேடினேன்.அது அவ்வளவு பயனுள்ளதாக இல்லை.எனவே என்னுடைய தமிழறிவை ஆதாரமாகக் கொண்டு எழுதினேன்.தமிழில் அறிவுசார் சொத்துரிமைகள் குறித்து குறைந்தது ஒரு நூலாவது வெளிவந்திருக்கும் என யூகிக்கிறேன்.அது குறித்து எனக்குத் தெரியாது.என் போல் தமிழ் நாட்டிற்கு வெளியே வசித்துக் கொண்டு தமிழில் எழுதுபவர்களுக்கு உதவும் வகையில் தமிழில் உள்ள அனைத்து கலைச் சொற்களும் இணையத்தில் கிடைத்தால் பயனுடையதாக இருக்கும்.தமிழில் நான் எழுத நினைத்த பல கட்டுரைகளை எழுதாமல் விட்டதற்கு ஒரு முக்கிய காரணம் தொடர்புடைய கலைச்சொற்கள்,கோட்பாடுகள்

தமிழில் நானறிந்த வரையில் இல்லாததுதான்.பதிப்புரிமை தொடர்பாக அண்மையில் சில முக்கியமான தீர்ப்புகள் வெளியாகியுள்ளன.இவை குறித்து ஒரு கட்டுரை எழுத முயன்ற போது அடிப்படை விஷயங்களை விளக்காமல் கட்டுரையை எழுதினால் அது பலருக்குப் புரியாது என்பதால் ஒரு நீண்ட கட்டுரைதான் தேவை என்று உணர்ந்தேன்.ஆனால் அத்தகைய கட்டுரை எழுதுவதற்கு போதுமான நேரம் செலவிடமுடியாத நிலையில் அதை கைவிட்டேன்.இதை ஆங்கிலத்தில் எழுதுவது எளிது.சில இணைய இணைப்புகள் மூலம் விரிவான விளக்கத்தை தவிர்த்துவிடலாம்.தமிழில் அவ்வாறு செய்ய முடியாது.பதிப்புரிமையின் அடிப்படைகளைக் கூடக் கூறியாக வேண்டும்.ஏனெனில்,இங்கு கருத்து-வெளிப்பாடு (idea-expression) பற்றிய அடிப்படை புரிதல் இல்லாத கட்டுரை மூலம் தமிழ் வாசகர் பதிப்புரிமையை தவறாகப் புரிந்து கொள்ளும் அவல நிலை உள்ளது.patents broad in scope என்பதை குறிக்க நீட்சி என்ற சொல்லை உயிர்மையில் வெளியான கட்டுரையில் பயன்படுத்தியுள்ளேன்.இதை விட பொருத்தமான சொல் இன்னொருவரால் பயன்படுத்தப்பட்டிருக்கலாம்.இதே போல் compulsory licensing என்பதற்கு நான் ஒரு சொற்தொடரினைப்

பயன்படுத்துகிறேன்.இன்னொருவர் வேறொரு சொற்தொடரைப் பயன்படுத்தியிருக்கக்கூடும்.இரண்டையும்

படித்து வாசகர் சிறிது குழப்பமடையக் கூடும் என்பதால் ஆங்கில வார்த்தை(களை)/யை கட்டுரையில் ஒரிடத்தலாவது தருவதை நான் கடைப்பிடிக்கிறேன், (முடிந்தவரை).தமிழில் CD என்பதைக் குறிக்க ஒன்றிற்கு

மேற்பட்ட சொற்கள் இருக்கும் போது (அவ்வாறிருக்கவே அதிக வாய்ப்புள்ளது) CD என்பதையும் தேவையான இடத்தில் தமிழ் வார்த்தையுடன் சேர்த்து பயன்படுத்துவது சாலப் பொருத்தம்.அன்றாட வாழ்வில் CD என்பதே மிக அதிக அளவில் புழக்கத்தில் உள்ளது.புது தில்லி நேரு பிளேசில் உள்ள கடைகளிலும்,

மும்பை லாமிங்டன் ரோட்டிலும் CD என்றுதான் சொல்கிறார்கள்.கணினியை பயன்படுத்தக் கற்றுக்கொள்ளும்

அம்மாக்களும்,அப்பாக்களும்,தாத்தாக்களும்,பாட்டிகளும் கூட CD என்றால் புரிந்து கொள்கிறார்கள். எனவே தூயதமிழ்ச் சொற்கள் இருந்த போதும் கூடவே ஆங்கிலச் சொற்களையும் பயன்படுத்துவது தேவைப்படுகிறது.

World Summit On Information Society குறித்து எத்தனை கட்டுரைகள் தமிழில் வெளியாயின.தகவல்

சமூகம் குறித்து படிக்க,விவாதிக்க ஏராளமான நூல்கள்,கட்டுரைகள் உள்ளன.இந்த உச்சிமாநாட்டை ஒட்டி

பல அறிக்கைகள் வெளியாயின.சில முன்னோடி முயற்சிகளுக்கு பரிசு தரப்பட்டது. இது குறித்து ஒரு புரிதலைத் தர wiki அடிப்படையினாலான இணையதளம் தமிழில் இருந்திருந்தால் விளக்க குறிப்புகளுடன்

பலவற்றை வாசகர் கவனத்திற்கு தந்திருக்க முடியும்.இது போன்ற சாத்தியபாடுகள் குறித்து ஏற்கனவே திண்ணையில் எழுதியுள்ளேன். இத்தகைய முயற்சிகளில் பலரும் பங்கேற்க முடியும்.தகவல் சமூகம் குறித்த ஒரு விவாதம் தமிழில் நடைபெற இது உதவியிருக்கும்.இத்தகைய முயற்சிகளின் விளைவாக பல புதிய கலைச்சொற்கள் உருவாகவும் வாய்ப்புள்ளது.இதை செயல்படுத்துவது கடினமல்ல்.ஆர்வமுள்ள ஒரு சிலர்

சேர்ந்து செய்ய முடியும்.தகவல் பெருக்க யுகத்தில் தேவையானவற்றை தெரிவு செய்து தரமுடியும்.

பாரம்பரியம் குறித்த பெருமித நினைப்புகளே நம்மை நிகழ்காலத்தின் தேவைகள் குறித்த ஒரு செயல்முறைக் கண்ணோட்டத்தை உருவாக்கிக் கொள்வதிலிருந்து தடுத்துவிடுகின்றன போலும்.மொழியின் வளம் வெறும் கலைச்சொற்களால் தீர்மானிக்கப்படுவதல்ல.மாறாக ஒரு மொழியில் முன்வைக்கப்படும் கருத்துகள்,சிந்தனைகள்,விவாதங்கள்,கோட்பாடுகளை வைத்தே அம்மொழி சமகால உலக அறிவுடன் எந்த அளவு தொடர்புடையதாக,அதை உள்வாங்கி பயன்படுத்தும் திறனுள்ளதாக விளங்குகிறது என்பதை ஒரளவேனும் அறிய முடியும்.இந்த அடிப்படையில் தமிழை மதிப்பிட்டால் சில கசப்பான உண்மைகளாவது புரியும் என்று நினைக்கிறேன்.

பார்த்தா சாட்டர்ஜியின் பல கட்டுரைகள் வங்க மொழியில் முதலில் வெளியாகி பின்னர் அவை ஆங்கிலத்தில் மாறுதல்களுடன் தரப்படுவதாக அறிகிறேன்.தமிழில் அவரது கட்டுரைகளை தர வேண்டுமெனில் விரிவான

குறிப்புகள் தேவை, அது மட்டுமின்றி ஒரு முன்னுரையும் தேவைப்படும். அவர் உலகப் புகழ் பெற்ற சமூக அறிவியல் அறிஞர்.நானறிந்தவரையில் அவரது ஒரு நூல் கூட, குறிப்பாக தேசியவாதம் குறித்த புகழ் பெற்ற நூல் கூட தமிழில் மொழிபெயர்க்கப்படவில்லை.இவையெல்லாம் தமிழில் இல்லை என்ற பிரக்ஞை கூட இங்கு இல்லை.

இன்று ஆங்கிலத்தை பயிற்று மொழியாக பயின்று தமிழில் எழுதப்படிக்க தெரிந்த பலர் தங்கள் 20களிலும்,

முப்பதுகளிலும் உள்ளார்கள்.இவர்கள் அறிவும்,அனுபவமும் நமக்குத் தேவை.இவர்களை தமிழில் எழுதுங்கள் என ஊக்கப்படுத்த வேண்டும்.இவர்களின் எழுத்துக்கள் குறித்து தமிழ் ஆர்வலர்களுக்கு விமர்சனங்கள் இருக்கலாம்.ஆனால் இப்படித்தான் எழுத வேண்டும் என்று எழுதி,இப்படி எழுதுபவர்களின் எழுத்துக்களை ஏளனம் செய்தால் அவர்களுடன் ஒரு உரையாடல் தொடர்வதற்கான சாத்தியக் கூறு குறைவு.மாறாக இப்படியும் எழுதலாமே, இன்ஸ்டால் என்று எழுதுவதற்கு பதிலாக நிறுவு என்பதை பயன்படுத்தலாமே,

நீங்களே கூட கலைச் சொற்களை உருவாக்கலாமே என்று அவர்களுடன் ஒரு உரையாடல் தொடருமேயானால் அதுவே பல நல்ல விளைவுகளை உருவாக்கும். எனவே விமர்சனங்கள் இருப்பினும் நூறு பூக்கள்

மலரட்டும் என்று தமிழில் தகவல்களை/கருத்துகளை நேர்மையாக தரமுயல்வோரை வரவேற்க வேண்டும்.

நோக்கம் ஒன்றே, அணுகுமுறைகளும்,நிலைப்பாடுகளும்தான் வேறு என்பதால் உரையாடல்களை தொடர்வோம், அவரவர் பாணியிலும் எழுதுவோம் என்ற கண்ணோட்டத்தில் தமிழை வளப்படுத்த முயல வேண்டும்.தமிழில் பல ஆயிரம் பேர் பல்துறை அறிவைத் தந்தாலும் போதாது என்ற நிலையில்தான் நாம் உள்ளோம். பலர் நேரடியாக ஜெர்மன்,பிரென்ஞ்ச மொழிகளிலிருந்து தரமுடியுமெனில் அதுவும் நல்லதுதான்.

நம்முன் உள்ள சவால்களைக் குறித்த ஒரு காரியவாத,யதார்த்தக் கண்ணோட்டத்துடனான

புரிதல் தேவை, வெறும் வார்த்தை ஜாலங்கள் அல்ல.தமிழ் என் தாய் மொழி, அதில் சமகால சிந்தனைகளைத் தருவது மிகவும் கடினமாக உள்ளது.இந்தப் பிரச்சினைக்குத் தீர்வு கலைச்சொற்கள்

மட்டுமல்ல என்று நான் கருதுகிறேன்.

இன்னும் சொல்லலாம்.விரிவஞ்சி இத்துடன் நிறுத்திக் கொள்கிறேன்.

பிற்குறிப்புகள் :

1,wired ஜனவரி இதழில் வெளிவந்துள்ள குறிப்பு இது:

For centuries Japanese speakers have happily absorbed foreign lingo into their argot.Gairaigo,

‘words from outside ‘ even have their own alphabt,katakana. But the rate of pulling in tech and business terms is acclerating , forcing the Ministry of Education to start-and keep updating- a

new glossary.Here is a nano-sample

Romanized English

inobeeshon innovation

akauntabiriti accountability

(ஜப்பானிய மொழி எழுத்துகளை நான் தரவில்லை.மேல் விபரங்களுக்கு அந்த இதழைப் பார்க்கவும்.

www.wired.com)

2,Dutch is spoken by 21 million.Still according an organisation set up by Dutch&Belgian governments to promote Dutch

‘Dutch may not be threatened with extinction in the short or medium term, but it is in danger of losing domains.It could eventually become just a colloquial language , a language you use at home to speak with your family-the language you can best express your emotions in- but not the one you use for the serious things in life-work,money,science,technology ‘

(Language Death-David Crystal-Cambridge University Press, 2000)

இந்த நூல் பற்றிய ஒரு குறிப்பினை கீழ்க்கண்ட தளத்தில் காணலாம்

http://thisaiettumselvom.rediffblogs.com

ravisrinivas@rediffmail.com

Series Navigation

குறிப்புகள் தேவை, அது மட்டுமின்றி ஒரு முன்னுரையும் தேவைப்படும். அவர் உலகப் புகழ் பெற்ற சமூகவியல் அறிஞர்.நானறிந்தவரையில் அவரது ஒரு நூல் கூட, குறிப்பாக தேசியவாதம் குறித்த புகழ் பெற்ற நூல் கூட தமிழில் மொழிபெயர்க்கப்படவில்லை.இவையெல்லாம் தமிழில் இல்லை என்ற பிரக்ஞை கூட இங்கு இல்லை.