கயிற்றரவு

This entry is part [part not set] of 35 in the series 20061012_Issue

வெ. அனந்த நாராயணன்



கார்க் கண்ணாடிமேல்
மோதி
உதிர்ந்த சருகாய்
உயிரைவிட்டது
பட்டாம்பூச்சி

அதே கண்ணாடிமேல்
பறந்து வந்து
ஒட்டிக் கொண்டு
பட்டாம்பூச்சியாய்ப்
படபடத்தது
பழுத்த சருகு

வெ. அனந்த நாராயணன்

Series Navigation

வெ. அனந்த நாராயணன்

வெ. அனந்த நாராயணன்

கயிற்றரவு

This entry is part [part not set] of 18 in the series 20011007_Issue

ருத்ரா


திடாரென்று விழித்துக்கொண்டேன்.
தூக்கம் நழுவி ஓடிவிட்டது.
மொட்டை மாடியில்
கயிற்றுக்கட்டிலில்
தொய்ந்து கிடந்தேன்.
இருட்டுக் கூடு
இறுக்கிப் பிடித்துக் கொண்டிருந்தது.
இந்த புழுக்கூடு
இமைகளில் உரசியது.
மூக்குமுனையில்
மூச்சுப்பூக்களின் மகரந்தங்களை
நக்கி ருசி பார்த்துக்கொண்டிருந்தது
இந்த இருட்டு.
பாசக்கயிறு
பதம் பார்க்கும் நாடகம் இது.
விடியல் கீற்றுகள்
மலைமுகடுகளுக்கு
கண்மை தீட்டும் முன்
தீண்டுவதற்கு காத்திருக்கும்
கால சர்ப்பத்துள்
தவம் இருக்கும்
மரணத்தின் கர்ப்பம் இது.
மையிருட்டின்
கருப்புச் சதையை
பிய்த்துக்கொண்டு
புறப்படும்
வர்ணப்பிரளயங்களே !
கொஞ்சம் பொறுங்கள்.
என் மேனியின்
புல்லாிக்கும்
மயிர்க்கால்களில்
மறைவாய்க் கிடக்கும்
இந்த
தூாிகை வனங்களில்
வசந்தம் துளிர்க்கட்டும்.
அதோ
அவளின்
அற்புதமான முறுவலிப்புகளில்
கிழக்குகள்
கின்னரம் முழக்கும்.
மரணித்து மரணித்து
ஒத்திகை
பார்த்துக் கொள்வதற்கு
காதல்
இங்கொரு அனுபவம்.
அவள்
எத்தனை தடவை
சிாித்து சிாித்து உதிர்கிறாள்.
என் மரணம்
உதிர்ந்து உதிர்ந்து
அந்த சோழிகள்
ஒவ்வொன்றிலும்
கருதாிக்கிறேன்.
அந்த ‘கயிற்றரவை ‘ப்
பிடித்துக்கொண்டு
நட்சத்திரங்கள் தோறும்
தொற்றிக்கொள்கிறேன்.
சாக்கிய முனிவனின்
தத்துவத்தை..என்
தலையணைக்குள்
திணித்துக்கொண்டு
புரண்டு புரண்டு படுத்தபோதும்
வானத்து விழுதுகளைப்
பிடித்துக்கொண்டு
ஊஞ்சல் ஆடிக்கொண்டிருக்கிறேன்.
அது
கயிறா ?
பாம்பா ?
அது என்ன என்று
தொியும் வரை
அது
காதல்.
அவள் வெட்டுச்சிாிப்பில்
ஆயிரம் பாம்புகள் தீண்டும்.
ஆயிரம் பிறப்புகள் தோன்றும்.
ஜனனத்தின் மீது
காதல் கொண்ட மரணம்.
மரணம் கூட
மசக்கை கொண்டு
பிறந்து பார்க்க
துடிக்கும் காதல்.
இன்னும் விடியவில்லை.
எங்கோ
‘வெங்கடேச சுப்ரபாதம் ‘
ஒலியை
உளி கொண்டு செதுக்குகிறது.
விழி மூடிக்கொண்டு !

Series Navigation

ருத்ரா

ருத்ரா