கனவு வெளியேறும் தருணம்

This entry is part [part not set] of 41 in the series 20071206_Issue

தமிழ்மணவாளன்



வெறிச்சிட்டுச் சிவந்து அனாதரவாய்த் தொங்கும்
அந்தியின் வெறுமை கவிழ
சந்தித்த போது
மெல்ல மெல்ல சொற்களைக் கொண்டும்
காற்றுக் குமிழ் வெளியேற
நிரப்புதலைச் சாத்தியமாக்கும் மெலிய
புன்னகையோடும்
தொடர்ந்த பேச்சில்
தளர்ந்த இறுக்கம்
இட்டுச்சென்ற பிரதேசங்கள் அதற்கு முன்
கண்டிராதவை
பூக்களின் மலர்ச்சியில் மணந்து
நுரைபொங்கிப் பெருகியோடும் ஆறென
எல்லாவற்றையும்
பறிமாறிக்கொள்ள யத்தனித்த
வார்த்தைகளால் ஆன
புனிதப்படுத்தப்பட்ட உரையாடலில்
நேற்றிரவெல்லாம் நீயென்னுடன் இருந்ததைச்
சொல்லாமலே
வெளியேறிப்போகிறது கனவு

–தமிழ்மணவாளன்


tamilmanavalan@yahoo.co.in

Series Navigation

தமிழ்மணவாளன்

தமிழ்மணவாளன்