கனவும் வாழ்வும்

This entry is part [part not set] of 27 in the series 20020819_Issue

மு.புகழேந்தி


வாழ்வு வேண்டி
வழி நடந்தேன்
வழிதடம் முழுதும்
மலக் குவியல்
மலம் தின்ன
நாயும் பன்றியும் போராட்டம்

விண்ணதிர ஒலி-ஒளு கிளம்ப
நாயும் பன்றியும்
பறந்தன தொலைதூரம்

தடம் பார்த்து
கால் பதிக்க
முதுகு தண்டில் சில்லிப்பு

வடம் அறுந்த
பெருந் தேர் ஓன்று
உருள உருள
நான்
குடை சாய்கிற
தேரடி விலக விலக
தேர் சக்கரம்
துரத்த துரத்த
கால் பிண்ணி தடம் பதித்து
மூச்சு திணற ஓடுகிறேன்

மனித வாசம் அற்ற
பரந்த வெளு
நானும்
பெருந்தேர் சக்கரமும்
இருட்டா விடியலா
துரத்துகிறது துரத்துகிறது
கல்லும் கரடும்
முல்லும் புதரும் தாண்டி
ஓடுகிறேன் ஓடுகிறேன்

பாதை வழியே
பாழும் மொட்டை கிணறு
கால் இடறி
கிணற்றில் விழ
சக்கரம் மறைய
கொடி பிடித்து மேலற
கொடி கயிறாகி
கயிறு கருநாகமாக மாறியது

இரவு
திண்ணையில் படுத்தவன்
விடியலில்
தரையில் இருந்தேன்.!
***
pugazhendi@hotmail.com

Series Navigation

மு.புகழேந்தி

மு.புகழேந்தி