கடல் அரசனின் கட்டளை!

This entry is part [part not set] of 29 in the series 20030119_Issue

ராஜி


பதைபதைத்துப் பொங்கி வரும் அலையின் நுரை!
அதைரியமாய் நான் இஇருப்பதோ கடலின் கரை!

அந்தரங்கம் என்னுடையது கடல் அரசன் மனத்தில் வைப்பாயோ ?
சந்திரசூரியரைச் சந்தித்தால் என்னையும் வரவேற்க வருவாயோ ?

காலைக் கதிரவன் உதித்தாலும், கடல் அலைகள் நிற்பதில்லை !
மாலை மணம் மங்கச்செய்தாலும், என் மனஅலைகளும் ஒய்வதில்லை!

உலோபியாக, அன்பில்லாமல் இருந்தால், வருமம் தரும் ஊடல்
ஆலோசியுங்கள், கட்டளை இதுவோ! சொன்னார் அரசன் கடல்!

மூதுரை சொல்படி விரோதம் மறைந்தால் வருமோ பிரிவு ?
ஆதுரம், மதுரம் நாம் அணைத்தால் ஏன் அரும்பும் முறிவு ?

***
r2iyer@ryerson.ca

Series Navigation

ராஜி

ராஜி