ஒரு வழியா இந்த மெட்டிஒலி.. தலை வலி …

This entry is part [part not set] of 32 in the series 20050623_Issue

கற்பகம் இளங்கோவன்


ஒரு வழியா இந்த மெட்டிஒலி.. தலை வலி முடிஞ்சுதுன்னு சொன்னதுதான் தாமதம்..

என்னம்மா கோபம் வந்துருச்சுங்க எங்க அம்மாவுக்கு!

சும்மா சொல்லக்கூடாது.. கலைஞர் வந்து பாராட்டும் அளவுக்கு புகழ் சேர்த்துருச்சு மெட்டி ஒலி team. கவிஞர் வைரமுத்து, மனோரமா ஆச்சி ஆகியோரும் முக்கிய விருந்தினராக பங்கேற்றார்கள். சன் டிவியில் நான்கு மணி நேரம் ஒலிபரப்பானது இந்த நிகழ்ச்சி.

வெளியே செல்ல வேண்டியிருந்ததால் என்னை ஒளிப்பதிவு செய்யுமாறு உத்தரவு போட்டு சென்றார்கள் அம்மா.

கவிஞர், மற்றும் கலைஞர் ஆகியோரின் பேச்சு மட்டும் கேட்டேன்.

உண்மை சொல்ல வேண்டுமென்றால் மனதின் ஓரமாக கொஞ்சம் வலித்தது.

ஒரு பொய்யை பத்து முறை சொன்னாலே அது உண்மையாகிவிடும் என்பார்கள்.

இந்த மெட்டிஒலி தொடர்.. பெண்ணாகப் பிறந்தால் படாதபாடுதான் என்றும், பெண்ணைப் பெற்றவன் நரக வேதனை அனுபவிப்பான் என்றும் 811 episode களில் குறைந்தது 800 முறை அழுத்தமாக சொல்லி இருக்கிறார்கள். யோசித்துப்பார்த்தால் இது போன்ற தொடர்கள் கண்டிக்கப்பட வேண்டியவை என்பது என் கருத்து.

No wonder.. அம்பிகா பிறந்தபோது இரண்டாவதும் பெண்ணாகிவிட்டதே என்று எங்கள் குடும்பத்தில் கொஞ்சம் தாழ்வான மன நிலைமை உருவாகியது.

உலகம் எங்கேயோ முன்னேறிக்கொண்டிருக்கிறது. தமிழ் நாட்டுப் பெண்களிடையே இந்திரா நுயி, கல்பனா சாவ்லா ஆகியோரைவிட அழுமூஞ்சி சரோ ரொம்ப பிரபலம் அடைந்துவிட்டாள் போலிருக்கிறது. வா ழாவெட்டி பெண்கள், கொடுமைக்கார மாமியார், சந்தேகப்படுகின்ற கணவன், உதவாக்கரை கணவன் என்று மாய்ந்து மாய்ந்து ஐந்து பெண்களும் கடந்த 3 1/2 வருடங்களாக இந்த தொடரில் அழுது தீர்த்திருக்கிறார்கள். (அதுவும் வெளக்கு வெச்ச நேரத்துல.. நம்ம வீட்டு நடுவில ?!)

வாழ்க்கை போராட்டம் நிறைந்ததுதான் ஆண்களுக்கும், பெண்களுக்கும். பெண்களை மட்டுமே அழ வைத்து, அவங்கள பெத்தவரை நாயாகப் பேயாக அலையவைத்து, ஒருவித பரிதாப அலையை உருவாக்கி, அதில் வெற்றி காண்பது சரிதானா ? 811 முறை இந்த அப்பன் ஓயாமல் அழுவதை கண்ட ?னங்க தங்கள் வீட்டில் பெண் குழந்தை பிறந்தா எப்படிங்க சந்தோசப்படுவாங்க ?

சுமாரான மாமியார் கூட, நான் மெட்டி ஒலி மாமியாரைவிட எத்தனையோ மேலடான்னு சோதிக்க ஆரம்பிச்சுடுவாங்கதானே ?

மொத்தத்தில் பெண்களின் சைகால ?ியை நன்றாகப் புரிந்துகொண்டு வெற்றி கண்டிருக்கிறார் இந்த இயக்குனர். பொதுவாக மற்றவர்கள் அழுவதைக் கண்டால் பெண்களுக்கு பாசம் பொத்துக் கொண்டு வரும். அப்படிதான் இந்த தொடரில் வந்த ஐந்து சகோதரிகளும் அழுது அழுதே தமிழ் குடும்பங்களின் பாசத்தை வென்று விட்டார்கள். இவர்களைவிட நம்ம வாழ்க்கை எவ்வளவோ மேல் என்று க ?டப்படுகின்ற பெண்கள் கூட சமாதானம் அடைந்துவிடுவார்களே. எந்த விதத்தில் சமூகத்துக்கு நல்லது செஞ்சிருக்குது இந்த தொடர் ? என்ன மெெ ? ? கொடுத்திருக்கிறார்கள் இந்த வெற்றி அணி ?

பெண்கள் சமுதாயத்தில் வெற்றி பெறுவது, போராடி ெ ?யிப்பது, உயர்ந்த பதிவிகளை அடைவது போன்ற வி ?யங்களை ஏன் தொடராக்க மறுக்கிறார்கள் ?

நல்ல வேளை கடைசியில் இரண்டு மறுமணங்களை புகுத்தியிருந்தார்கள்.

மொத்தமா குறை சொல்லலே.. இரண்டு நல்ல வி ?யங்களைச் சொல்ல, இரண்டாயிரம் கேலன் கிளசரின் செலவு செய்து.. தவறான ஒரு மெண்டாலிடியை மேலும் வலுவாக்கி விட்டார்களே என்று வருத்தம்.

எப்ப திருந்த போறாங்களோ ? திருந்த விடப்போறாங்களோ ?

மீடியா என்கிற மிக வலுவான சக்தி இது போன்ற சீரியல்களால் அனாவசியமாக வீணாக்கப்படுகிறது!

விடுப்பில் வீட்டில் இருப்பதால்தான் இந்நிகழ்ச்சிகள் அவ்வப்போது காதில் விழியில் விழுந்து தொலைக்கிறது. மெட்டிஒலி மட்டுமில்லீங்க, ந்ிம்மதி, சொர்க்கம், தீர்க்க சுமங்கலி, மனைவி, கணவனுக்காக அப்படி இப்படான்னு ஏகப்பட்டது இருக்குது.

நாளொன்றுக்கு சுமார் ஐந்து மணி (மணியான) நேரங்களை இவற்றில் கரைக்கும் என் சொந்த அம்மாவே இந்த கருத்தை ஒப்புக்கொள்ள மாட்டார்கள். மனக் குமுறல்.. அதனால் நண்பர்களிடம் முறையிட்டேன்.

அன்புடன்.

கற்பகம் இளங்கோவன்

Series Navigation

கற்பகம் இளங்கோவன்

கற்பகம் இளங்கோவன்