என் வீட்டருகே ….

This entry is part [part not set] of 27 in the series 20020127_Issue

தேன்சிட்டு


என் வீட்டருகே
கல்லறைத் தோட்டம் …

காலை வெயிலில் மின்னிடும்
பனியில் குளித்திடும்
அழகான கல்லறைகள் ….

என் நெஞ்சின்
நினைவுச்சின்னம் ஆதலால்
உரையாடுகிறேன், இவர்களிடம்
உண்மையாக …
மனசார நேசிக்கிறேன்-இம்
மாண்டு போன மனிதர்களை.

எனக்கும் ஒரு இடம்
காலி இங்கே …
இன்ப பூமியே,உன்னை
இறுதியாக பார்க்கிறேன்,
ஒரு தடவை….
என்னுள் ஏனோ
ஏக்கப் பெருமுச்சு…

முகவுரை தந்த கருவறையே,
முடிவுரை இந்த கல்லறையா ?
முகம் இழந்து,
முகவரி இழந்து,
இறுதியில் என் காலடிகள்,
உனை நாடித்தானே……
அய்யகோ …
விட்டுவிடேன்,
என்னை மட்டும்..

என்னுள் ஏனோ
ஏக்கப் பெருமுச்சு,
ஒரே மெளனமெங்கும்…
மரணமொழி புரியுமா ?
மனிதர்க்கு.

உலக வாழ்வில்
உண்மைகள் உறங்கிப்போகிறது,
மனசாட்சிகளோ என்றும்
மெளனமாகிறது,என்றாலும்
மறவாமல் சென்று வருவேன்
கல்லறைத் தோட்டத்திற்கு,
என் தவறுகள் இங்கே,
திருத்தப்படுவதால் …….

***

Series Navigation

தேன்சிட்டு

தேன்சிட்டு