என்று தணியும்

This entry is part [part not set] of 41 in the series 20110220_Issue

தேனு



பாலின வேற்றுமைகள்
இறைவனது அரங்கேற்றம்…
வேற்றுமைக்கான வாழ்வியல் நியதிகள்???
ஓர் வர்க்கம் அதீதம்
இயற்றியிருக்கக் கூடும்..
.
எந்நேரமும் எவ்விடமும்
பாதுகாப்புக்கான கோபக்கோர்வைகள்
மென்மை மறைபட…
.
பற்றியெரியும் உடல் வேட்டங்கள்…
வகையென பேருந்து உரசல்கள்..
அறிமுகமற்ற எண்கள்..
நீண்டு மிரட்டும் அழைப்புகள்..
.
கிட்டும் வேளைகள்..
உடைகள் ஊடுருவப்படும்
உதிர்பூக்களின் தேகங்கள்..
பிய்த்து பிடுங்கும்
கொன்றுண்ணி கழுகுப்பார்வைகள்…
.
சுதந்திர மண்தான்..
கேலிக்காட்படுத்தப்படக் கூடிய
சுதந்திர மண்தான்..
.
என்று தணியும்
இத்தரமற்றுத் திரியும்
மாயக்கருமங்கள்??

– தேனு

Series Navigation

தேனு

தேனு