ஊழி

This entry is part [part not set] of 57 in the series 20050106_Issue

பவளமணி பிரகாசம்


அலையாலே தாலாட்டி
அருந்துயிலை தந்தவளே
வேசமாய் இழுத்தின்று
பெருந்துயிலில் ழ்த்தியதேன் ?
வயிற்றை கழுவ வழியானவளே
வயிறு நிறைய விழுங்கியதேன் ?
வெறியாட்டம் டியதேன் ?
காயசண்டிகை னதேன் ?
பட்டும் பகட்டுமறியா எளியவரை
பாட்டும் பரதமும் அறியா பாமரரை
குடிசைக்குள் குலக்கொழுந்துடன்
குடியிருந்த குடும்பங்களை
பூண்டோடு அழித்ததேன் ?
புரண்டு வந்த ஊழியே!
பொறுப்பில்லா ழியே!
எச்சிறுமை கண்டு நீ
பொங்கி எழுந்தனையோ ?
பாவங்கள் பொறுக்காமல்
அப்பாவிகளை அழைத்தனையோ ?
நோயும் நொடியும் அண்டாமல்
பசியும் மூப்பும் வாட்டாமல்
பத்திரமாய் காத்திடவே
மொத்தமாய் அள்ளிச் சென்றாயோ ?
பாடம் புகட்ட வந்தாயோ ?
வஞ்சம் தீர்க்க நினைத்தாயோ ?
அகந்தை அழிக்கச் சொன்னாயோ ?
அன்பை வளர்க்கச் சொன்னாயோ ?
அர்த்தமில்லா பேரழிவென்று
வெதும்புகிறோம் நாமின்று
தீயின் நாவால் பிஞ்சுகளை
தின்ற சூடு றுமுன்னே
அரக்கி போல அதிர வந்தாய்
அடக்கி விடு உக்கிரத்தை
டாதே ஊழி தாண்டவத்தை
காட்டாதே உன் கோர முகத்தை
அமைதியாய் நீ நடந்து
நல்வழியை வகுத்துக்கொடு.

Pavalamani Pragasam
Pavalamani_pragasam@yahoo.com

Series Navigation

பவளமணி பிரகாசம்

பவளமணி பிரகாசம்