இயல்பு

This entry is part [part not set] of 31 in the series 20020330_Issue

பொன் முத்துக்குமார்


எங்கள் குடியிருப்பு வாயிலில்
வளர்ந்துகொண்டிருக்கும்
மரங்களுக்கெல்லாம்
கிளைகள் தரித்து
திருத்திக் கொண்டிருந்தார்கள்.
தலைகுனிந்து அசையாது
அப்பாவிற்கடங்கி
சிகை திருத்துவோனுக்கு
மெளனமாய் தலைகொடுத்திருக்கும்
சிறுவனாய் –
மரக்கன்றும் யிருந்தது.
தரிக்கப்பட்ட மரக்கன்றுகள்
மிக அழகான ஒழுங்கில்
நேர்த்தியான வடிவத்தில்
அசைவற்று நின்றுகொண்டிருந்தன.
கீழே வீழ்ந்துகிடந்த
இலைத்துளிகளை
இன்னொரு இயந்திரம் உறுமலோடு
சிதறடித்துக் கொண்டிருந்தது.

ஓடிப்போய்
அவர்கள் சிகைபற்றியுலுக்கி
‘மரங்களின் இயல்பு
திசைதொறும் கிளைத்தல் ‘
என்று சொல்லத் தோன்றியது.

Series Navigation

பொன் முத்துக்குமார்

பொன் முத்துக்குமார்