இதற்கும் புன்னகைதானா… ?

This entry is part [part not set] of 27 in the series 20020127_Issue

புஹாாி, கனடா


அண்ணலே…
மண்ணுயிர் யாவுக்கும்
பிறவிகள் உண்டாமே…
உனக்கொரு பிறவியில்லையா… ?

தினம்…
உன்னைத் தேடித் தேடி
என் கால்களில்
பாதங்களே இல்லாமல் போய் விட்டன…

கோட்சேக்களெல்லாம்
மீண்டும் மீண்டும்
பிறவிகளெடுத்து விட்டனர்…
உனக்கு மட்டும் பிறவியே இல்லையா… ?

அண்ணலே…
இன்று
என்னுடைய மனுவையும் கேள்…
நீ பிறவியெடுக்காதே…

கோட்சேக்களுக்கே சொந்தமாகிவிட்ட
இந்த மயானத்தில்…
நீ ஜனித்ததுமே
உன் ரோஜா இதயத்தைச்
சல்லடைக் கண்களாய்த்
துளைக்க…
துப்பாக்கிகள்
துடித்துக் கொண்டிருக்கின்றன…

என்ன..!
இதற்கும் புன்னகைதானா… ?

Series Navigation

புஹாரி, கனடா

புஹாரி, கனடா