இதயம் உன்னை வரைந்து பார்க்கிறது

This entry is part [part not set] of 53 in the series 20040827_Issue

நளாயினி தாமரைச்செல்வன்


உன் பார்வையால்
என்னுள்
மின்னல் ஒன்று
எழுந்து ஓயும்.
உன் வார்த்தை
ஜாலத்தில்
என் நாடிஇ நரம்பெல்லாம்
வாத்தியமாகும்.
தெரியாதது போல்
உன் தேவை கருதி
நீ எனைத் தொடும் போது
என்னுள் மிருதங்க அதிர்வு
இப்படித்தான்
இப்போ
மனசு உன்னை
அடிக்கடி
ஞாபகப்படுத்திக் கொள்கிறது.
அடடே!
இங்கே பாரேன்.
என்னையும் கேட்காமல்
உன்னையும் கேட்காமல்
என் இதயம்
அடிக்கடி உன்னை
வரைந்து பார்த்து
வர்ணம் தீட்டுகிறது.

Nalayiny Thamaraichselvan
thamarachselvan@hotmail.com
swiss.

Series Navigationரவி சுப்பிரமணியன் கவிதைகள் >>

நளாயினி தாமரைச்செல்வன்.

நளாயினி தாமரைச்செல்வன்.