கவியோகி வேதம்
^^^^
பெரும்பான்மை மாந்தர் சென்ற ‘கணம் ‘ பேசியே
அரும்சொத்தாம் ‘இக்கணத்தின் ‘ ஆற்றலினை இழக்கின்றார்!
..
பழைய ‘டேப் ‘ போடுபவர் வாய்களைத் தைத்தாலே,
இழைகின்ற இப்புவியில், இனிய ‘சுரம் ‘ பிறக்குமென்பேன்;
..
சிறுவயதுத் துன்பத்தை, செல்வோர்கள்,வருவோர்கள்
உறவினர்கள் அனைவரிடம் ஒப்பாரி வைப்பதினால்,
..
பலபேர்வாய் ‘ரப்பர்வாய் ‘ ‘பேழ் ‘வாயாய் ஆச்சுதென்பேன்!
உலவுகின்ற ‘இன்பஒளி ‘ ஓடிவரும் சூக்குமமும்,
..
இக்கணத்தின் ‘சுக ‘வழியும் இவர்களால்தான் அடைத்ததென்பேன்!
சொக்கவைக்கும் நிலவொளியை சுகமிலாதான் ரசிப்பானா ?
..
பாய்ச்சல் அருவிதனைப் பைத்தியம் புகழாது!
‘ஆய்வு ‘செய்யும் புதுமைகளை அறிவிலியும் ரசிக்காது!
..
நேற்றைய பொழுதுகளோ நில்லாத காசாச்சு!
தோற்றப்போம் கணங்களோ தொலைவுநிற்கும் ‘மான் ‘ஆச்சு!
..
இக்கணத்தைக் ‘கைப் ‘பிடித்தால் எக்கணமும் தேன்நிலவு:
இக்கணத்தை மனத்திற்கே இதம்தரும் முதலிரவாய்
..
நாம்நினைத்தால் ‘கற்பகம் ‘ நற்சேதி கொண்டுதரும்!
நாம்பெறுவோம் நன்மைகளை இக்கணமே எனநினைத்தால்,
..
அத்தா மரைத்திரு அழகுறவே மேன்மைசெய்வாள்;
வெத்து வேட்டுகளால் விளைச்சல் வந்திடுமா ?
..
இக்கணத்தில் ‘உழைப்புசெய்ய ‘ இனிமைஎண்ணம் பதிந்துவிட்டால்
அக்கிரம ராக்கதரும் அசைத்திடவே முடிந்திடுமா ?
..
தூக்கமும், சோம்பலும்,தொலையாத புலம்பல்களும்
ஆக்கிரமி த்துப்பெண்டிரை ‘அலட்சுமி ‘ ஆக்கிற்றே!
..
என்செய்வேன் என்-இனிய எழில்மிகு திருநாடே!
பொன்-ஆன பொழுதையெல்லாம் தொலைக்காட்சிப் புதைக்குழிக்குள்
..
தினம்கழித்து, மனம்கெடுத்துத் திசைமாறிப் போனாரே!
இனிதுசெய்ய ‘இக்கணம் ‘ எனும்தேவி எண்ணிடினும்,
..
பெண்டிரும், ஆண்மகனும் போனதெண்ணிப் புலம்பினரே!
கண்கெடுக்கும் மாயவலை கரையவழி தெரியலையே!
.
என்இனிய கிராமத்தில் இன்றும்ம தியம்,மதித்துப்
பொன்னாகத் தறிநெசவில், பலவேலை களில்மூழ்கி,
..
இக்கணத்தைப் பணமாக இயக்கிக் காட்டுகின்றார்!
இக்கணத்தை நகரத்தார் பொக் ‘ கெனவே தொலைத்துவிட்டு,
..
போன ‘கணத் தை ‘எண்ணிப் புலம்பித் தீர்க்கின்றார்!
ஆனவய துவந்தும் ஆண்கள்குட்டிச் சுவரமர்ந்தே,
..
ஊர்க்கதையும்,பெண்கதையும் சிரிப்போடு உரைத்துவிட்டு
சாரமாய் ஓர்வேலை ‘வரலை ‘யென சரம்திரிப்பார்!
.
மலைமுகட்டு அருவிஒன்று பெரும்பொந்துள் மறைந்து ‘கொட்டின் ‘,
வலைவலையாய்ச் சொல்திரிப்போர் வாளாது பார்த்திருப்பின்,
..
யாருக்கு இந்ந ?டம் ? யாரின் துரதிர் ?டம் ?
போர்செய்யும் சுறுசுறுப்பு பொழுதுமுட்டும் இருந்துவிட்டால்,
..
எக்கணமும் பயன்பாடு இருந்துநம்மை அறம்காக்கும்;
திக்கெட்டும் புகழ்சேரும்;தெருவெல்லாம் வளம்செழிக்கும்;
..
இக்கணமும் போச்சே! எனப்புலம்பல் தேவையில்லை!
எக்கணமும் நம் ‘சித்தே ‘! இவ்வுண்மை ஒருசொத்தே!
…(யோகியார்)
yogiyarvedham@vsnl.net
- ரெ.கார்த்திகேசுவின் இரு நூல்கள் வெளியீடு 12 மார்ச் 2005 (சனி)
- தொடரும் கவிதைக் கணம்
- சென்னை இலக்கிய நிகழ்வுகள் -`எழுத்தாளர் மா. அரங்கநாதனின் படைப்புலகம்
- நூல் அறிமுகம்: ம.வெங்கடேசன் எழுதிய ‘ஈ வெ ராமசாமி நாயக்கரின் மறுபக்கம் ‘
- எள்ளிருக்கும் இடமின்றி
- கலைச்செல்வனின் மரணச்செய்தி. துயருறு பொழுதுடன் நாம்
- மழை ஆடை (Rain Coat)
- சென்னை இலக்கிய நிகழ்வு
- கார்ல் பாப்பரின் வெங்காயம்-2
- பால் பத்து
- டாக்டர் ராமதாசும் இசைப்பாடமும்
- கடிதம் பிப்ரவரி 11,2005
- தளப்பரப்பில் ஒலிகடத்தும் கருவிகளும் செல்பேசிகளும்
- மனவெளி நாடக விழா
- கடிதம் பிப்ரவரி 11, 2005
- கடிதம் பிப்ரவரி 11 ,2005 – சின்னக் கருப்பன் , நேசகுமார், அரவிந்தன் நீலகண்டன்
- மறுமலர்ச்சியை வரவேற்கிறேன்
- கருமையம் வழங்கும் நாடகங்கள்
- கடிதம் – பெண்கள் தலைமையில் இஸ்லாமிய தொழுகை – இடமாற்றம்
- கீதாஞ்சலி (14) உன் ஆடம்பர ஒப்பனைகள் ( மூலம்: கவியோகி இரவீந்திரநாத் தாகூர் )
- கீதாஞ்சலி (15) அன்போடு அளிப்பதை ஏற்றுக்கொள் ( மூலம்: கவியோகி இரவீந்திரநாத் தாகூர் )
- பெரியபுராணம் – 32 (18. மானகஞ்சாற நாயனார் புராணம் – தொடர்ச்சி )
- திண்ணை மரத்தடி அறிவியல் புனைகதைப் போட்டி முடிவுகள் -விரைவில்
- பாகிஸ்தானில் விற்கப்படும் இரானியப் பெண்கள்
- அறிவியல் கதை – விளையாட்டுப் பிள்ளை (மூலம் : மைக்கேல் ஸ்வான்விக்)
- திரை
- து ணை – 6
- நினைப்பும்.. பிழைப்பும்..
- ஓணான்கள்
- தீண்டப்படாத சீதா (சீதாயணம்) (ஓரங்க நாடகம்) காட்சி மூன்று: ஆசிரமத்தில் லவா, குசா இரட்டையர் பிறப்பு)
- சிந்திக்க ஒரு நொடி : தமிழகத்துப் பிரதான திராவிடக் கட்சிகளுக்குள் ஜனநாயகம் சாத்தியமில்லை
- சிந்திக்க ஒரு நொடி : நடிப்பு சுதேசிகள்
- சிந்திக்க ஒரு நொடி : தமிழ் சினிமாக்களில் பெண் பாத்திரங்களுக்கு வேலையில்லாததால் மொழிபோயிற்று
- கடந்த வரலாறும் கண்முன் விரியும் வரலாறும் : பயங்கரவாதம் வரிக்கும் சமாதானப் பாயிற் படுப்பரெல்லாம் பாடையிற்போவர்! ( பாகம்:1 )
- கடந்த வரலாறும் கண்முன் விரியும் வரலாறும் : பயங்கரவாதம் விரிக்கும் சமாதானப் பாயிற் படுப்பவரெல்லாம் பாடையிற்போவர்! (பாகம்:2)
- வெறுப்பு வர்ணம்
- மோகமுள்
- ‘இக்கணம் ‘
- நிஜங்களையும் தாண்டி…
- தஸ்லிமா நஸ்ரீனின் பெண்ணியக் கவிதைகள் (ஆங்கிலம் : கரோலின்ரைட் )
- பேசி பேசி…
- பிரிய மனமில்லை
- மெளனவெளி
- இடையினம்
- கூ ற ா த து கூ ற ல்
- பூகோள வடிவத்தின் பூர்வீக நாடகம்!யுக யுகங்களாய்ப் பிணைந்து பிரிந்த கண்டங்கள் (4)