ஆப்பிள் பெண்ணுள் எாியும் நிலவுகள்–(1) (பாப்லோ நெருடாவின் கவிதை தமிழாக்கம்)

This entry is part [part not set] of 35 in the series 20060127_Issue

ருத்ரா


(Carnal apple, Woman filled, burning moon, –
XII From: ‘Cien sonetos de amor ‘ by Pablo Neruda)

ஓ மனிதா!
பெண் எனும் மாயப்பிசாசு..
என்றெல்லாம்
காறி உமிழும்
காவி சுலோகங்கள்
இங்கே
ஏராளம்.ஏராளம்.

ஆனால்
பெண் எனும்
அந்த மரப்பாச்சியிலிருந்து
மின்காந்த பாய்ச்சல்கள்
எத்தனை! எத்தனை!
அதிலிருந்து செதுக்கிய
இன்பத்தின் சிற்பங்கள்
பலகோடி.

அந்த ஆப்பிள்சதையின்
புல்லாிப்புகளில்
புாிந்துகொண்ட
பஜகோவிந்தங்களையும்
செளந்தர்ய லகாிகளையும்
பாராயணம் செய்கின்ற
சூடான இரவு மூச்சுகளின்
சூத்திரங்களில்
சுருண்டுகிடக்கும்
அக்கினியில்
அந்த சமஸ்கிருத
புனிதங்கள் எல்லாம்
புகைந்து போயின.

வெறும்
உடலைக்கொண்டு
பொட்டலம்
போடப்பட்டவளா பெண் ?
உணர்ச்சிகளின்
சிப்பமா பெண் ?
கொழுந்துவிட்டு எாியும்
நிலவை
ஒரு குச்சி ஐஸ்கிாீமாய்
என் கைகளில்
தந்தது யார் ?

கடல்பாசிகளில்
சிக்கிக்கொண்ட நீச்சல் இது.
இரவுக்கவிச்சியின்
இனிய நாற்றத்துள்
இனிய நாற்றுகள் பாய் விாிக்கும்
இன்பக்கடல் இது.

சேறும் நீருமாய்
ஒளியும் நிழலுமாய்
உயிரை ஊற்றி ஊற்றி
உடலைக்கரைக்கும்
இந்த உன்மத்த
விளையாட்டில்
கரை ஏற விரும்பாத
அலைகள் இங்கே
நுரைக்கவிதைகள் எழுதும்.

இரண்டு பருத்த துணெ¢கள்
உன்னை
துகெ¢கி நிறுத்திக்கொண்டிருக்கின்றன.
அந்த கால் நரம்புகள்
உண்மையில் கால நரம்புகள்.
முதல் சூாியன்
முகம் கழுவி
வாய்கொப்புளிக்க
தொடங்கியதிலிருந்தே
அந்த ஆசையின்
‘நியூரான்கள் ‘
உன் துணெ¢களுக்கு
அலங்காரத்தோரணங்கள்
கட்டி வைத்துவிட்ட
ரகசியம் உனக்கு தொியுமா ?

விஞ்ஞானிகள் கூட
அதற்கு ஒரு சமன்பாடு
கண்டு பிடித்து வைத்திருக்கிறார்கள்.
‘கடவுள் = சைத்தான் ‘
அந்த துணெ¢களை பிளந்துகொண்டு
நரசிம்ம அவதாரம் எடுங்கள்.
உயிர் ஆற்றலுக்குள்
உறைந்திருக்கும்
E = Mc^2 ஐ அப்போதே
புாிந்துகொண்டு விடுவீர்கள்.

இருளும் ஒளியும்
செய்த
முதல் கலவியின்
அந்த முதல் இரவில்
‘பிக் பேங்க் ‘ எனும்
முதற்பெரும் வெடிப்பில்
பீாிட்ட பிரபஞ்சப்பிழம்பில்
உன் முகம் பார்த்துக்கொள்.
அது
அவனா ?
அவளா ?
இருட்டுக்குழம்பில்
உணர்ச்சியின்
வண்ணத்துப்பூச்சி இறக்கைகள்
ஹாரண்ய ரேதஸ் எனும்
தங்க விந்துகளை
உயிாின் மகரந்தங்களாய்
வாாி இறைக்கும்
வெப்பச்சுவை
உன் உடலெல்லாம்
போர்த்தியிருக்கிறது.
இந்த போர்வையெல்லாம்
அழிவின் பொத்தல்கள் வழியே
ஆவியாகிப் போய்விடுமுன்
உன்
ஆகர்ஷண சக்தியைக்கொண்டு
இந்த ஆகாயத்தை
சுருட்டி மடக்கு.
இந்த ஓட்டை வீட்டுக்கு
மட்டும் அல்ல
இந்த பிரபஞ்சத்துக்கே
பட்டா போட
உன்னால் தான் முடியும் மனிதா !
ஆம்..அது
உன்னால் தான் முடியும்.

====ருத்ரா.
epsivan@gmail.com

Series Navigation

ருத்ரா

ருத்ரா