ஆண் என்ற காட்டுமிராண்டி

This entry is part [part not set] of 44 in the series 20030209_Issue

மார்வின் ஹாரிஸ்

(மார்வின் ஹாரிஸ் அவர்களது புத்தகத்தின் அடுத்த அத்யாயம் ஏறத்தாழ இரண்டு வருடங்களுக்குப்பின்னர் வருகிறது. இதன் முந்தைய அத்யாயங்கள் அரசியலும் சமூகமும் இணைப்புகள் கீழே இருக்கின்றன

அவைகளைப் படிக்காமலேயே கூட இந்த கட்டுரையைப் படிக்கலாம். இது அவரது புத்தகத்தின் Savage Male என்ற தலைப்பிட்ட அத்யாயத்தின் மொழிபெயர்ப்பு.

மார்வின் ஹாரிஸ் பற்றி :

கலாசாரத்தின் , கலாசார வரலாற்றின் பொருளியல் அடிப்படைகளை வலியுறுத்தி மானிடவியலை வளர்த்தெடுத்த மார்வின் ஹாரிஸ் கொலம்பியா பலகலைக் கழகத்திலும் ஃப்ளோரிடா பல்கலைக் கழகத்திலும் பணி புரிந்தவர். மார்க்ஸியக் கண்ணோட்டத்தில் மானிடவியலைக் கண்டு ‘கலாசாரப் பொருள்முதல்வாதம் ‘ Cultural Materialism என்ற முக்கியமான நூலை எழுதியவர். )

பெண் சிசுக்கொலை என்பது ஆணாதிக்கத்தின் ஒரு வெளிப்பாடு. மற்ற ஆணாதிக்க வெளிப்பாடுகளைப்போலவே இதுவும் ஆயுதமேந்திய போர் தேவைப்படுவதின் ஒரு பக்கவிளைவு என்று காண்பிக்க முடியும் என்று நான் கருதுகிறேன்.

மனித பாலுறவின் உயர்ச்சி தாழ்ச்சிகளை விளக்க இருக்கும் பல தேற்றங்களிலிருந்து நாம் ஒன்றைத் தேர்ந்தெடுக்கவேண்டும். மாற்றமுடியாத உள்ளுணர்வுகாரணமாக இப்படிப்பட்ட மேல்-கீழ் உறவுகள் தோன்றுகின்றன என்று கூறும் தேற்றத்திலிருந்து, மனித வாழ்க்கையின் சந்தர்ப்பத்துக்கு தகுந்தாற்போல மாற்றிக்கொள்ளும் குணம் காரணமாக என்று கூறும் கருதுகோள் வரை இருக்கின்றன. நான் பெண்ணியவாதிகள், பெண் விடுதலையாளர்கள் கூறும், ‘மனித உடலமைப்பு என்பது விதியல்ல ‘ (anatomy is not destiny) என்ற கருத்தை ஒப்புக்கொள்கிறேன். உடல் ரீதியாக இருக்கும் பாலுறவு வித்தியாசங்களே ஆண்களும் பெண்களும் வெவ்வேறான அந்தஸ்துகளையும் அதிகாரங்களையும் பெற்றிருப்பதற்குக் காரணம் என்று ஒப்புக்கொள்ளமுடியாது.

கருப்பை இருப்பதும் ஆண்குறி இருப்பதும் வெவ்வேறான அனுபவங்களை ஒரு மனிதருக்குப் பெற்றுத்தருகிறது என்பதைப் பெண் விடுதலைவாதிகள் மறுப்பதில்லை. ஆனால், பாலுறவு, மற்றும் பொருளாதார, அரசியல் அதிகார சலுகைகளை பெண்களைவிட அதிகமாக ஆண்கள் பெறுவதற்குக் காரணம், உயிரியல் ரீதியான உடல் அமைப்புகள் காரணமாக என்று கூறுவதையே அவர்கள் மறுக்கிறார்கள்.

குழந்தைப்பேறு அதன் கூடவே இருக்கும் சில பாலுறவு சிறப்புகள் காரணமாக இருக்கும் சமூக பொறுப்புகள் தவிர வேறு விதமான சமூகப் பொறுப்புகள் தானாக உயிரியல் ரீதியான உடலமைப்புகளால் வருவதில்லை. மனித உடலமைப்பு மற்றும் உயிரியலை மட்டும் அறிந்த ஒருவர், பெண்கள் சமூகத்தில் தாழ்த்தப்பட்ட இடத்தில்தான் இருக்கமுடியும் என்ற கருத்துக்கு வரமுடியாது. தற்காப்புக்கும், பிறப்பு ரீதியான உடலியல் அமைப்புகளுக்கும் இடையே இருக்கும் தொடர்பின்மையில் மனிதன் எல்லா விலங்குகளையும் விட வேறுபட்டவன். நாம் உலகத்தின் மிகவும் ஆபத்தான மிருகங்கள். அதன் காரணம் நம்மிடம் பெரிய பல்லோ, கூர்மையான நகங்களோ, படுபயங்கரமான விஷக்கடியோ, தடித்த தோலோ இருப்பதால் அல்ல. ஆனால், இந்த மேற்கண்ட பொருட்களைவிட அதிகமான வலு உள்ள பொருட்களை நமது ஆயுதங்களாக ஆக்கி அவைகளை நம்முடைய பாதுகாப்புக்கு பயன்படுத்தக் கூடிய திறமையும் நம்மிடம் இருப்பதால்தான். நம்முடைய சமூகத்துடன் ஒத்திசைவதற்கான நமது பிரதான உந்துதல், நம்முடைய கலாச்சாரத்தினால் வருகிறதே தவிர, நம்முடைய உடலியல் ரீதியான அமைப்புகளால் வருவதில்லை ( Our primary mode of biological adoptation is culture, not anatomy.) ஆண்கள் பெண்களைவிட உயரமாகவும் வலிமையாகவும் இருக்கிறார்கள் என்ற ஒரே காரணத்தால் ஆண்கள் பெண்களை ஆதிக்கம் செய்கிறார்கள் என நான் நம்பத்தயாராக இல்லை. அப்படி என்றால், மனிதர்களாகிய நம்மை மாடுகளும் குதிரைகளும்தானே ஆளவேண்டும். இவை சாதாரண ஆண் பெண்ணைவிட அதிக எடையுடன் இருப்பதை விட 30 மடங்கு அதிக எடையுடன் இருக்கின்றன. மனித இனத்தில், பாலுறவு ஆதிக்கம் என்பது எந்த பாலினம் பெரியதாகவும், உள்ளுணர்வு ரீதியில் ஆதிக்கம் செலுத்துவதாகவும் இருக்கிறது என்பதல்ல, ஆனால் எந்த பாலினம் பாதுகாப்புக்கும், ஆக்கிரமிப்புக்கும் தேவையான தொழில்நுட்பத்தை பெற்றிருக்கிறது என்பதில்தான்.

ஆண்கள் பெண்கள் இருவரது உடலியல் அமைப்பும், கலாச்சார திறமைகளும் மட்டுமே எனக்குத் தெரிந்திருந்தால், நான் பெண்களே பாதுகாப்புக்கும் ஆக்கிரமிப்புக்கும் தேவையான தொழில்நுட்பத்தை ஆதிக்கம் செய்வார்கள் என்றும், ஒரு பால் இன்னொரு பாலை ஆதிக்கம் செய்தால், அது பெண்பால் ஆண்பாலைத்தான் ஆதிக்கம் செய்யும் என்றே முடிவுக்கு வந்திருப்பேன். ஆண்களுக்கும் பெண்களுக்கும் இடையே இருக்கும் உடல்ரீதியான வலிமை வேறுபாடு என்னை ஆண்களுக்குச் சார்பாக சிந்திக்கவைத்திருந்தாலும், நான் பெண்கள் வைத்திருக்கும் இன்னொரு விஷயத்தால் நாம் அவர்கள் பக்கமே சாய்ந்திருப்பேன். அதாவது, குழந்தை பிறப்பு, வளர்ப்பு, குழந்தைகளுக்கு பாலூட்டுவது ஆகியவை. பெண்கள் குழந்தை வளர்ப்பை கட்டுப்படுத்துவதால், அவர்களுக்கு எதிராக இருக்கும் ஒரு வாழ்க்கை முறையை அவர்களால் மாற்றி அமைக்கமுடியும். இதனால், பெண்கள் ஆண் குழந்தைகளை கவனிக்காமல் பெண் குழந்தைகளை மட்டுமே கவனித்து வளர்த்து பெண்கள் அதிகமாக ஆகும்படிச் செய்யமுடியும். அதே நேரத்தில், சாதுவாக இருக்கும் ஆண் குழந்தைகளுக்கு அதிக அக்கறையும், முரடாக இருக்கும் ஆண் குழந்தைகளை கவனிக்காமலும் வைத்து, எதிர்காலத்தில் முரடான ஆண் குழந்தைகளை அருகிப் போகவும் செய்யலாம். அதே நேரத்தில் முரடாக இருக்கும் பெண் குழந்தைகளை அதிக கவனத்தோடு வளர்த்தும், மென்மையாக இருக்கும் பெண் குழந்தைகளை கவனிக்காமலும் வைத்து முரடான பெண்களை எதிர்காலத்தில் அதிகரிக்கலாம். ஒவ்வொரு தலைமுறையில் மிகச்சிறிய அளவு ஆண்களே இருக்கும்படியும், அவர்கள் வெட்கத்துடனும், சொன்னசொல்படி கேட்பவர்களாகவும், கடுமையான உழைப்பாளிகளாகவும், அவ்வப்போது கிடைக்கும் பாலுறவு சந்தோஷங்களுக்கு நன்றியுடனும் இருப்பார்கள் என்றும் நான் எதிர்பார்க்கலாம். பிராந்திய குழுக்களின் தலைமை பெண்களிடமே இருக்கும் என்றும், அவர்களே கடவுளுடன் சடங்கு ரீதியான உறவு கொண்டிருப்பவர்களாக இருப்பார்கள் என்றும், கடவுள் ‘பெண் ‘ என்றே அழைக்கப்படுவாள் என்றும் நான் எதிர்பார்க்கிறேன். இறுதியாக, மிகவும் பெருமைக்குள்ளானதாகவும், உன்னதமானதாகவும் இருக்கும் ஒரு திருமண முறை பல ஆண்களை ஒரு பெண் திருமணம் செய்துகொண்டு அவர்களது பொருளாதார பாலுறவு உறவுகளை ஆள்வதுதான் என்றும் நான் எதிர்பார்ப்பேன்.

பெண் தலைமை தாங்கும் இப்படிப்பட்ட சமூக அமைப்புகள்தான் மனிதகுலத்தின் ஆரம்பத்தில் இருந்தன என்று பல 19ஆம் நூற்றாண்டு தத்துவவாதிகள் நம்பினார்கள். உதாரணமாக, பிரெடெரிக் எங்கெல்ஸ் இப்படிப்பட்ட சிந்தனையை அமெரிக்க மானுடவியலாளரான லூவிஸ் ஹென்றி மார்கன் (Lewis Henry Morgan) அவர்களிடமிருந்து பெற்றார். இவர் நவீன சமூகங்கள், இப்படிப்பட்ட, பெண் அரசாளும், பெண் ஆதிக்கம் செய்யும், தாய்வழி பாரம்பரியம் சொல்லும் தாய்வழி சமூகங்களின் வழியே தான் வந்தது என்று கருதுகிறார். பல நவீன பெண்ணியவாதிகள் இந்த கட்டுக்கதைகளை இன்னும் நம்புகிறார்கள். இதற்கிடையில், எல்லா ஆண்களும் ஒன்றுதிரண்டு, இந்த பெண்வழி ஆதிக்கத்தை ஒழித்து அவர்களது ஆயுதங்களைப் பறித்துவிட்டு, பெண்களை அடிமைப்படுத்தி அவர்களைச் சுரண்டுகிறார்கள் என்று இன்னும் நம்புகிறார்கள். இப்படிப்பட்ட ஆராய்ச்சியை ஒப்புக்கொள்ளும் சில பெண்கள், ஆண் பெண் இருவருக்கு இடையேயான சமத்துவ உறவை ஏற்படுத்துவதற்கு, ஒரு ஆயுதம் தாங்கிய கொரில்லாப்போரே தேவை என்றும் நம்புகிறார்கள்.

இந்த தேற்றத்தில் ஒரே ஒரு விஷயம்தான் தவறு. இதுவரை எந்த மானுடவியலாளரும் உண்மையான பரிசுத்தமான தாய்வழி சமூகத்தை காட்டமுடியவில்லை. பழங்கால அமேஜான் கட்டுக்கதைகளைத் தவிர்த்துப் (மொ.கு. அல்லிராஜ்யம் கட்டுக்கதைகள் போன்றவற்றைத் தவிர்த்து) பார்த்தால், சுமார் 10 அல்லது 15 சதவீத உலக சமூகங்களில், தாய்வழியாக மட்டுமே உறவுமுறையையும் பிறப்பையும் உருவாக்குகிறார்கள். ஆனால் தன்னுடைய பிறப்பு பெயர்களை தாய்வழியாக கொள்வது என்பது தாய்வழி அடையாளமே தவிர பெண்ணாதிக்கம் அல்ல. (Matrilineality not matriarchy). பெரும்பான்மையான தாய்வழி அடையாள சமூகங்களில் பெண்ணின் சமூக நிலை மற்ற சமூகங்களைவிடச் சிறப்பாக இருக்கிறது என்றாலும், பெண்ணாதிக்க, தாய்வழி ஆதிக்க சமூகத்தின் அடிப்படைக்கூறுகள் சுத்தமாக இல்லை. பொருளாதார, சமூக, மதரீதியான வாழ்க்கை ஆகியவற்றில் ஆண்களே ஆதிக்கம் செலுத்துகிறார்கள். இதிலும் ஆண்களே பல பெண்களை திருமணம் செய்யக்கூடியவர்களாக இருக்கிறார்கள். பெண்களுக்கு அந்த உரிமை இல்லை. குடும்பத்தில் தந்தையே உண்மையான அதிகார மையம் இல்லை என்பது உண்மைதான். ஆனால் தாயும் உண்மையான அதிகார மையம் இல்லை. எல்லா தாய்வழி சமூக குடும்பங்களிலும், ஒரு ஆணே அதிகார மையமாக இருக்கிறாரே தவிர பெண் இல்லை. தாயின் சகோதரனோ (அல்லது தாயின் தாயின் சகோதரனோ அல்லது தாயின் தாயின் சகோதரியின் மகனோதான் இந்த அதிகார மையம்) (மொ கு : கேரளாவில் வழங்கி வந்த மருமக்கள் வழி மான்மியத்தை நினைவு கொள்ளலாம்.)

தாய்வழி ஆதிக்கச் சமூகத்தை எதிர்பார்க்கும் எல்லோரும் அடித்தளமாக கொண்டிருக்கும் தர்க்க நியாயத்தை உடைப்பது பரவலாக இருக்கும் போர்கள்தாம். ஆண்களை எதிர்க்கவும், ஏன் தாங்களே வளர்த்து சமூகப்படுத்திய ஆண்களை அடிமைப்படுத்தவும் வல்லமை உள்ளவர்களாகவே பெண்கள் இருந்தாலும், இன்னொரு கிராமத்தில் அல்லது பழங்குடி சமூகத்தில் வளர்க்கப்பட்ட ஆண்கள் வேறொரு சவாலைக் கொண்டுவருகிறார்கள். இனங்களுக்கு இடையே நடக்கும் போர்களில் ஆண்கள் இறக்க ஆரம்பித்ததும், பெண்கள் பெரிய வலிமையுள்ள முரட்டு ஆண்களை வளர்த்தே ஆக வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார்கள்.

ஆண் ஆதிக்கம் என்பது ஒருவகை பாஸிடிவ் ஃபீட்பேக் Positive Feedback. அல்லது deviation amplification என்றும் கூறலாம். மைக் செட் வைப்பவர்களுக்குத் தெரியும். பேசுவது மெகாபோனில் வருவதை மைக் மீண்டும் பிடித்து பெரிதாக்கி ஒரு பெரிய கொய்ங் வருவதை ஃபீட்பேக் என்று அழைப்பார்கள். அதுமாதிரி சமாச்சாரம் இது. முரட்டுத்தனமாக இருக்கும் ஆண்கள், இன்னும் முரட்டுத்தனமான போரை உருவாக்குகிறார்கள். அப்படிப்பட்ட முரட்டுத்தனமான போர்களால் இன்னும் முரட்டுத்தனமான ஆண்கள் தேவைப்படுவது அதிகமாகிறது. இத்தோடு கூட, முரட்டுத்தனமான ஆண்கள், பாலுறவு ரீதியிலும் முரட்டுத்தனமாக ஆகிறார்கள். அவர்கள் முரட்டுத்தனமாக ஆக ஆக, பெண்கள் இன்னும் அடிமைப்பட்டுப் போகிறார்கள். இது அதிகமாக பல பெண்களை ஒரு ஆண் திருமணம் செய்வது நடக்கிறது. பல பெண்களை ஒரு ஆண் திருமணம் செய்வதால் வரும் பெண்கள் பற்றாக்குறை, இளைஞர்கள் மத்தியில் விரக்தியையும் வெறுப்பையும் உருவாக்குகிறது. இது இந்த இளைஞர்களை (பெண்கள் வேண்டி) போருக்குச் செல்லத்தூண்டுகிறது. இது உச்சத்தை அடைகிறது. பெண்கள் அவமானப்படுத்தப்பட்டு இளம் வயதிலேயே கொல்லப்படுகிறார்கள். இது இன்னும் முரட்டான ஆண்களைப் பெற்றுக்கொள்ள, ஆண்களை போர்களுக்கு அனுப்பி பெண்களைப் பிடித்துவர தூண்டுகிறது.

ஆண் மேலாண்மைக்கும் (Chauvinism) போர்முறைக்கும் இடையே இருக்கும் உறவுமுறையைப் புரிந்து கொள்ள ராணுவ பெண்ணடிமைக்காரர்களாக இருக்கும் ஒரு பழங்குடியினரைப் பார்க்கலாம். நான் யானோமாமோ என்ற பழங்குடியைத் தேர்வு செய்கிறேன். இவர்கள் சுமார் 10000 எண்ணிக்கையில் பிரேசில் வெனிசூவெலா எல்லையில் இருக்கும் அமெரிக்க இந்தியப் பழங்குடியினர். யானோமாமோ பழங்குடியினர் அவர்களை முதலில் ஆராய்ந்த பென்ஸில்வேனியா பல்கலைக்கழகத்தைச் சார்ந்த நெப்போலியன் சாக்னான் என்ற மானுடவியலாளரால் ‘முரட்டு மக்கள் ‘ (fierce people) என்று குறிப்பிடப்பட்டார். அவர்களோடு தொடர்பு கொண்ட அனைத்து மானுடவியலாளர்களாலும் அவர்களை மகா முரட்டுமனிதர்களென்றும், போர்க்குணம் மிக்கவர்கள் என்றும், உலகத்திலேயே தீவிரமான ஆணாதிக்க சமூகமென்றும் வரையறுக்கிறார்கள்.

ஒரு யானோமாமோ ஆண் வயதுக்கு வருவதற்குள்ளாக அவனது உடலில் ஏராளமான விழுப்புண்களும் வடுக்களும் அவன் பங்கு கொண்ட சண்டைகள், போர்கள், ராணுவ தாக்குதல்கள் காரணமாக நிரம்பிவழியும். பெண்களை மிகவும் கேவலமான முறையில் நடத்தினாலும், அந்தப் பெண்கள், உண்மையாகவோ பொய்யாகவோ திருமணத்துக்கு வெளியே பாலுறவு கொண்டதற்காகவும், பெண் கொடுக்கிறேன் என்று சொல்லி கொடுக்காமல் போனதற்காகவும் தெருச்சண்டை போட்டுக்கொண்டே இருப்பார்கள். யானோமாமோ பெண்கள் உடல்களும் சிராய்ப்புகளும் புண்களும் வடுக்களும் நிறைந்து காணப்படும். இதற்குக் காரணம் அவர்கள் கணவன், கற்பழிப்பவன், ஆசை காட்டுபவன் ஆகியோரிடம் சந்திக்கும் பாலுறவு பலாத்காரமே. கோப குணமுள்ள, போதை மருந்து சாப்பிடும் யானோமாமோ போராளி கணவனின் கீழ் வாழும் எந்த யானோமாமோ பெண்ணும் எளிதில் தப்பித்துவிடுவதில்லை. எல்லா யானோமாமோ ஆண்களும் மனைவிகளை உடல் ரீதியில் கொடுமைப்படுத்துகிறார்கள். இரக்க குணமுள்ள ஆண்கள் பெண்களை வெறுமே சிராய்ப்பு ஏற்படுத்தி, கைகால்களை உடைக்கிறார்கள். முரட்டுத்தனமான ஆண்களோ காயப்படுத்தி கொல்கிறார்கள்.

ஒருவன் தன் மனைவியை மிரட்டுவது அவளது காதுகளில் தொங்கும் கட்டையை இழுத்துத்தான். மிகவும் எரிச்சலடைந்த ஆண் வலிமையாக இழுப்பதில் அந்த காது கிழிந்து போவதும் உண்டு. சாக்னான் களப்பணி செய்துகொண்டிருந்தபோது, தன் மனைவி தனக்குத் துரோகம் செய்கிறாள் என்று கருதிய யானோமாமோ ஆண் தன் மனைவியின் காதுகள் இரண்டையும் அறுத்துவிட்டான். பக்கத்து ஊரில் இன்னொரு கணவன் தன் மனைவியின் கையில் இருக்கும் சதையை தன்னுடைய கோடாலியால் வெட்டிவிட்டான். ஆண்கள் தங்களது மனைவிகள் தங்களுக்கும் தங்கள் விருந்தினருக்கும் சேவை செய்யவேண்டுமென்றும், எல்லா கோரிக்கைகளையும் எந்த ஒரு கேள்வியும் கேட்காமல் எந்த ஒரு எதிர்ப்புக்குரலும் இல்லாமல் உடனே செய்யவேண்டும் என்றும் எதிர்பார்க்கிறார்கள். ஒரு மனைவி உடனே சட்டென்று செய்யவில்லை என்பதால், அவளை விறகுக்கட்டையால் அடிப்பதும், கோடாலியால் வெட்டுவதும், எரியும் விறகால் அவளைச் சுடுவதும் சர்வசாதாரணம். அவன் உண்மையிலேயே படு பயங்கர கோபத்தில் இருந்தால், அவள் கால் மீதோ, பின்புறத்திலோ மீது அம்பு செலுத்துவதும் உண்டு. சாக்னான் பார்த்த ஒரு சமயத்தில், அப்படி செலுத்திய அம்பு குறி தவறி அவளது வயிற்றில் சென்று தைத்து அவள் சாகக்கிடந்தாள். சாக்னான் குறிப்பிடும் ஒரு நிகழ்ச்சி இது. ஒரு முறை, பருரிவா என்ற யானோமாமோ ஆண் தன் மனைவி மிகவும் மெதுவாக நடந்துவருகிறாள் என்று கோபம் கொண்டு, கோடாலியால் அவள் தலையை அடிக்க முனைந்தான். அவள் தன் தலையை குனிந்து தப்பித்து ஓடினாள். பரூரிவா தன்னுடைய கோடாலியை வீசினான். அது அவள் தலைக்கு மேலே பறந்தது. அவன் பின்னாலேயே ஓடினான். கிராமத்து தலைவன் இடையே வருவதற்குள்ளாக, அவளது கையை தன்னுடைய கத்தியால் வெட்டி விட்டான்.

தூண்டாமலேயே, பெண்களுக்கு எதிராக வன்முறை நிறைய நடக்கிறது இங்கே. ஆண்கள் தாங்கள் மிகவும் வலிமையானவர்கள் இன்னொரு ஆணிடம் காட்டுவதற்கு இவ்வாறு செய்கிறார்கள் என சாக்னான் கருதுகிறார். ஒரு ஆண் தன் மனைவியை பொதுவான இடத்தில் அடிப்பது அவனது ‘இமேஜ் ‘க்கு உதவுகிறது என்று சாக்னான் கருதுகிறார். பெண்கள் வசதியான பலியாடுகள் போல உபயோகிக்கப்படுகிறார்கள் என கருதுகிறார். ஒரு ஆண் தன்னுடைய சகோதரனுடனுடன் போட்ட சண்டையில் தன்னுடைய மனைவி மீது அம்பு செலுத்திவிட்டான். அந்த அம்பு தைத்து அவள் இறந்துவிட்டாள்.

தன் கணவனை விட்டு ஓடும் மனைவிகள் தங்களது சகோதரர்களிடம் ஒரு குறிப்பிட்ட அளவு பாதுகாப்பையே எதிர்பார்க்க முடியும். பெரும்பாலான திருமணங்கள் தங்கள் சகோதரிகளை கொடுத்துக்கொள்ளும் ஆண்களாலேயே நடத்தப்படுகின்றன. ஒரு ஆணின் மச்சான் அவனது நெருங்கிய முக்கியமான உறவினன். இந்த இருவரும் ஒருவரோடு ஒருவர் மிகுந்த நேரம் செல்வழிக்கின்றனர். இருவரும் ஒன்றாக உட்கார்ந்து போதைப்பொருள்களைப் பறிமாறிக்கொள்வதும் சேர்ந்து சாப்பிடுவதுமாக பழகுகிறார்கள். சாக்னான் சொன்ன ஒரு நிகழ்ச்சியில், தன் தங்கை ஓடிப்போய்விட்டதால் தன்னுடைய மச்சானுடன் உறவு பாதிக்கப்பட்ட எரிச்சலில் தன் தங்கையை தன் கோடாலியால் அடித்த விஷயத்தைச் சொல்கிறார்.

யானோமாமோ ஆண் மேலாண்மையின் ஒரு முக்கியமான அங்கம், ஆண்களுக்கு மட்டுமே வழங்கப்பட்டிருக்கும் போதைப்பொருட்களை உபயோகிக்கும் உரிமை. இந்த போதைப்பொருட்களை (எபீன் ebene என்று வழங்கும் இந்த போதைப்பொருள் காட்டு கொடியிலிருந்து பெறப்படுகிறது) உபயோகப்படுத்துவதால், ஆண்களுக்கு அமானுஷ்ய காட்சிகள் தெரிகின்றன. இது இந்த ஆண்களை பழங்குடி பூசாரிகளாக (shaman) ஆக்குகிறது. இதன் மூலம் பூதங்களை சந்திக்கவும், தீயசக்திகளை கட்டுப்படுத்தவும் சக்தி பெறுகிறார்கள். எபீனை உட்கொள்வது, ஆண்களுக்கு தங்கள் வலியை பொறுத்துக்கொள்ளவும், தெருச்சண்டைகளிலும் பழங்குடிப் போர்களிலும் வரக்கூடிய பயத்தைத் தாண்டவும் உதவுகிறது. மார்பில் அடித்துக்கொள்வது, தலையால் முட்டிக்கொள்வது என்று போட்டிகளில் பங்குபெறும் இவர்கள் எந்தவித வலியையும் காட்டிக்கொள்ளாமல் இருப்பதன் காரணம் இந்த போதைப்பொருள்களின் வலிதாங்கும் மருந்துசக்திதான் என்று கருதுகிறேன். இந்த ஆண்கள் போதை தலைக்கேறி சொத்தென்று விழுவதற்கு முன்னர், பெரும் ஆட்டம் போடுகிறார்கள். விழும்போது, பச்சை சளி அவர்களது மூக்கிலிருந்து ஒழுகுகிறது. வினோதனமான உறுமும் ஒலிகளை எழுப்புகிறார்கள். நான்கு கால்களில் நடக்கிறார்கள். கண்ணுக்குத்தெரியாத பூதங்களுடன் பேசுகிறார்கள்.

யூத கிரிஸ்தவ பாரம்பரியத்தைப் போலவே, யானோமாமோ மக்களும் தங்களுடைய ஆண் ஆதிக்கத்தை அவர்களது மனிதத் தோற்றக் கட்டுக்கதை (origin myth) மூலம் நியாயப்படுத்துகிறார்கள். உலகம் தோன்றும்போது, அங்கு மகா முரடர்களான ஆண்கள் மட்டுமே இருந்தார்கள். இவர்கள் சந்திரனின் ரத்தத்தால் உருவாக்கப்பட்டிருந்தார்கள். இந்த ஆரம்பகால ஆண்களில் கனபோரமா என்ற ஒருவன் இருந்தான். அவனது கால்கள் கர்ப்பமடைந்தன. அவனது இடது காலிலிருந்து பெண் வந்தாள். அவனது வலது காலிலிருந்து பெண்மைத்தன்மையுள்ள ஆண் வந்தான். இந்த இரு யானோமாமோ மனிதர்களும் சண்டைபோட அஞ்சுபவர்களாகவும் போரில் கோழைகளாகவும் இருக்கிறார்கள்.

மற்ற ஆண் ஆதிக்கமுடைய கலாச்சாரங்களைப்போலவே, மாதவிடாய் ரத்தத்தை தீயது என்றும் ஆபத்தானது என்றும் யானோமாமோ மக்கள் கருதுகிறார்கள். ஒரு பெண் முதல்முறை மாதவிடாய் அடையும்போது அவளை ஒரு இதற்காகக் கட்டப்பட்ட மூங்கில் கூண்டில் அடைத்து உணவின்றி வாழவிடுகிறார்கள். பிறகு ஒவ்வொரு மாதவிடாய் காலத்தின் சமயத்தின் போதும் அவள் தன்னைத் தனிமைப்படுத்திகொண்டு இருக்கவேண்டும். அவள் வெளியே வீட்டின் நிழலில் ஓரமாக குந்திக்கொண்டிருக்கவேண்டும்.

யானோமாமோ பெண்கள் குழந்தைப்பருவத்திலிருந்து கொடுமைப்படுத்தப்படுகிறார்கள். ஒரு சிறுமியின் சகோதரன் அவளை அடித்தான் என்றால், அவள் திருப்பி அடித்தால் அவளே தண்டனை அடைவாள். சிறுவன்கள் எப்போதும் யாரை அடித்தாலும் தண்டிக்கப்படுவதில்லை. யானோமாமோ தந்தைகள் தங்களது கோபக்கார 4 வயது பையன்கள் தங்களை முகத்தில் அடித்தால் சந்தோஷக் கூக்குரலிடுவார்கள்.

சாக்னான் அவர்களது யானோமாமோ மக்களின் பாலுறவு உறவு முறைகள் பற்றிய சாக்னானின் கவனிப்புகள், அவர்களை கவனித்த மானுடவியலாளரின் ஆண் சார்பு சிந்தனையாகவே இருந்திருக்கலாம் என்பதையும் நான் யோசித்தேன். ஆனால், அதிர்ஷ்டவசமாக, யானோமாமோ மக்களைப்பற்றி ஒரு பெண் மானுடவியலாளரும் ஆராய்ச்சி செய்திருக்கிறார். ஜூடித் ஷாபிரோ (Judith Shapiro) என்ற சிக்காகோ பல்கலைக்கழக பேராசிரியர் யானோமாமோ பெண்கள் அடங்கிப்போகும் குணத்தைப்பற்றி குறிப்பிட்டுச் சொல்கிறார். திருமணத்தைப் பொறுத்த மட்டில் ஆண்களே பறிமாறிக்கொள்பவர்களாகவும் பெண்கள் பறிமாறப்படுபவர்களாகவும் இருக்கிறார்கள் என்பதை அவர் தெரிவிக்கிறார். யானோமாமோ மொழியில் திருமணம் என்பதன் நேர் பொருள் ‘ஒன்றை இழுத்துக்கொண்டு போவது ‘ (மொகு. இஸ்துகினு போறது). விவாகரத்து என்பது ‘ஒன்றை தூக்கி எறிவது ‘. 8 அல்லது 9 வயது சிறுமிகள் தங்கள் கணவனுக்குப் பணிவிடை செய்ய ஆரம்பிக்கிறார்கள். அவர்கள் அருகிலேயே படுத்துக்கொள்கிறார்கள். அவர்களைப் பின் தொடர்கிறார்கள். அவர்களது உணவுகளை தயாரித்து கொடுக்கிறார்கள். ஒரு ஆண் தன் 8 வயது மனைவியுடன் உடலுறவு கூட கொள்ளலாம். தன் சகோதர்களிடம் தன்னை தன் கணவனிடமிருந்து கூட்டிக்கொண்டு சென்றுவிடுமாறு சிறுமிகள் இறைஞ்சுவதை டாக்டர் ஷாபிரோ கண்டிருக்கிறார். எப்படியாயினும் உறவினர்கள் இறுகப்பற்றிய சிறுமியின் கரத்தை உதறுவதும் மறு கரத்தை இறுக்கமாகப் பற்றி கணவனின் உறவினர்கள் இழுத்துச் செல்வதும் நடக்கிறது.

யானோமாமோ பெண்கள் தங்கள் கணவனால் அடிக்கப்படுவதையும், தான் சிறந்த மனைவி என்பதை எவ்வளவு அடிகளை சமீபத்தில் வாங்கியிருக்கிறாள் என்பதை கொண்டு அளந்து கொள்வதையும் சாக்னான் குறிப்பிடுகிறார். ஒருமுறை, இரு பெண்கள் தங்கள் தலைமீது இருக்கும் வடுக்களை காட்டி பேசிக்கொண்டிருந்ததை ஒட்டுக்கேட்டார். ஒருத்தி, இன்னொருத்தியின் தலையைப் பார்த்துவிட்டு, உன்னுடைய கணவன் உன் மீது எவ்வளவு அக்கறையுள்ளவனாக இருந்தால் இவ்வளவு முறை உன்னை தலையிலேயே அடித்திருப்பான் என்று சந்தோஷப்பட்டு வியந்து சொன்னாள். டாக்டர் ஷாபிரோ அவர்களது உடலில் எந்த காயமும் வடுவும் இல்லாமலிருந்தது யானோமாமோ பெண்களுக்கு மிகுந்த கவலையாகிவிட்டது என்பதையும் அவர் குறிப்பிட்டார். அந்தப் பெண்கள், ‘என் கணவன் என்னைப்பற்றி எந்த அக்கறையும் இல்லாமல் இருக்கிறான் ‘ என்று அவர்கள் கூறியதாகக் குறிப்பிட்டார். யானோமாமோ பெண்கள் தாங்கள் அடிக்கப்படவேண்டும் என்று விரும்பாவிட்டாலும், தாங்கள் அடிக்கப்படுவோம் என்பதை எதிர்பார்க்கிறார்கள் என்று முடிவுக்கு வரலாம். கணவர்கள் அடிக்காமல் இருக்கும் ஒரு உலகத்தை அவர்கள் கற்பனை செய்து பார்க்கமுடியவில்லை என்று கூறலாம்.

(அடுத்த இதழில் இந்த அத்யாயம் முடிவு பெறும்)

Series Navigation