ஆடு புலி ஆட்டம்

This entry is part [part not set] of 36 in the series 20030815_Issue

ஆதர்ஷ் ராவ்


என் மனம் உனக்கு துல்லியமாய்ப்புரியும்
உன் எண்ணங்களும் எனக்கு அவ்வாறே

புரிந்ததை நான் சொல்ல மாட்டேன்
நீயும் வெளிப்படையாய்க் கூறியதில்லை

எனக்கு வேண்டிய ஆறுதலை நீயும்
உனக்கு வேண்டியதை நானும் தரமறுக்கிறோம்

ஆத்மார்த்தமான காதல் என்ற பெயரில்
நீயும் நானும் திருமணத்தில் இறங்கினோம்

கற்பனையால் ஆயுதங்கள் கொண்டு
ஒருவரை ஒருவர் காயபடுத்துகிறோம்

எங்கு அடித்தால் வலிக்கும் என்று
உனக்கும் எனக்கும் தெளிவாய்த் தெரியும்

என்னிடம் உன் எதிர்பார்ப்பும் உன்னிடம்
என்னுடையவையும் நிறைவேறவேயில்லை

உன்னைப்பற்றிய என் பிம்பத்திற்கும்
என்னைப்பற்றிய உன் பிம்பத்திற்கும்

திருமணம் நடந்திருந்தால் ஒருவேளை
நன்றாய் இருந்திருக்குமோ என்னவோ ?

aadharsh02@iimk.ac.in

Series Navigation

ஆதர்ஷ் ராவ்

ஆதர்ஷ் ராவ்

ஆடு புலி ஆட்டம்

This entry is part [part not set] of 31 in the series 20020825_Issue

திலகபாமா,சிவகாசி


சிதைத்தும் உதிர்த்தும் போடுகின்ற
என் கனவுகள்
சேர்த்து சேர்த்து
சேதாரமாகிப் போன விரல்கள்

சிதறிக் கிடப்பவற்றை
சேர்க்கத் தோன்றுவதில்லை
இப்போதெல்லாம் எனக்கு

விடுத்து எனக்கானதை
கனவுகளின்சுழற்சிகளூடே
நீ மிதித்து போட்டவற்றை
வனையக் கற்ற நான்

உடைந்த கண்ணாடிச் சில்லுகளுக்கிடையில்
உடையாததாய் காண்பித்து
உருளும் பாதரசத் துளிகள்

சேர்த்த சிதறல்கள்எனதெனும்
எண்ண்ம் தந்த துன்பம்
சேர்க்காத சிதறல்களினால்
சேராது போனது

சிதறிக் கிடந்த ஆசைகள்
இப்போதெல்லாம் என் ஆட்டம்
வெட்டப் படும் உன் காய்கள்
என் காய்கள் பழமாகும் இனி

***

Series Navigation

திலகபாமா,சிவகாசி

திலகபாமா,சிவகாசி