ஆகு பெயர்

This entry is part [part not set] of 41 in the series 20091009_Issue

உஷாதீபன்,


“அந்தப் பையன் வந்திட்டுப் போனாங்க…” -உள்ளே நுழைந்ததுமே சுமதி முதல் தகவலாகச் சொன்னாள். என் மனதில் என்ன எதிர்பார்ப்பு இருக்கும் என்பது அறிந்து சொல்வது போலிருந்தது. “வந்துட்டானா? பரவாயில்லையே! எங்கே ரெஸ்பான்ஸ் இருக்காதோன்னு நினைச்சேன்…” “நீங்க கிளம்பிப்போய், அஞ்சு நிமிஷத்துல வந்துட்டாங்க…” “அப்டியா? ஆச்சரியமாயிருக்கே! அவன் வீடு எங்கேயோ தூரமா இருக்குன்னுல்ல சொன்னான். வீ;ட்டு வாசல்ல கடைன்னான். ஒரு முறைகூடப் போனதில்லை. அதுக்குள்ளே எப்படி வந்தான்?” “எப்படியோ, பால் வந்திடுச்சு நமக்கு. அது போதும்…” “அதுக்கில்லே சுமதி….தூரமா அவன் வீடு இருக்கிறதாலே, கொண்டு வர முடியாது…வேறே எங்கேயாவது வாங்கிக்குங்கன்னு சொல்லிடுவானோன்னு பார்த்தேன்…” “அது ஏன் சொல்றான்? நாம அவன்ட்ட கடந்த ஒரு வருஷமாப் பால் வாங்கிட்டிருக்கோம்…இந்த உதவி கூடப் பண்ண மாட்டானா?” “அது எப்படி? திடீர்னு ரெண்டு பாக்கெட் கொண்டு வான்னு சொன்னா, அவன்ட்டப் பால் இருக்க வேண்டாமா? சாயங்கால வேளை வேறே? ராத்திரி பன்னெண்டு மணிக்கு மேலதான் புதுப்பால் வரும். அதனாலதான் சந்தேகம் எனக்கு….” “பால் வியாபாரம் பண்றவங்ககிட்டே எப்பவும் பால் பாக்கெட் கைவசம் இருக்கத்தான் செய்யும். ஆகையினால நம்பிச் சொல்லலாம்…சொன்னவுடனே அந்தப் பையன்ட்டக் கொடுத்து விட்டுட்டான்ல?” “பையன்ட்டயா? அவனே வரல்லியா?” “அவனே எப்படி வருவான்? கடை முதலாளியே எல்லாத்துக்கும் அலைவாரா? அப்புறம் வேலைக்கு எதுக்குப் பையன்களை வைக்கிறதாம்?” “வேலைக்கா? வேலைக்குமில்லே, சேலைக்குமில்லே…! ஆள் போட்டு இந்த வியாபாரத்துல லாபம் பார்க்க முடியுமா? இல்ல கட்டுபடிதான் ஆகுமா? எல்லாம் சொந்தக்காரப் பசங்கதான்…” “அப்டியா?” “சொந்தக்காரப் பசங்கன்னா, சொந்தத் தம்பிங்கன்னு சொல்ல வந்தேன்…” “அதானே பார்த்தேன்…” “என்ன பார்த்தே? உனக்கு எப்படித் தெரியும்?” “முக ஜாடை அந்தப் பெரியவன் மாதிரியே இருந்திச்சேன்னு நினைச்சேன்…” “ரெண்டு பேர் இருக்காங்க…ஒருத்தன் காலைல பேப்பர் போடப் போயிடுவான்…இன்னொருத்தன் வீடு வீடாப் பால் போடுவான்…” “பாருங்க! குடும்பமே எவ்வளவு பொறுப்பா இயங்குதுன்னு…” ……….2…………. -2- “அந்தப் பெரிய பையன் காலைல ரெண்டு மணிக்கு எழுந்து பால் வண்டியை வரவேத்து, பால் பாக்கெட்டுகளை இறக்கி, பிறகு நாலு மணிக்கு வந்த நிய+ஸ் பேப்பர்களைப் பிரிச்சு அடுக்கி, எல்லாத்தையும் விநியோகத்துக்கு அனுப்பிட்டு, காலேஜ் வேறே போறான் தெரியுமா?” “காலேஜா? படிக்கிறானா அந்தப் பையன்?” “ஆம்மா….பி.இ., ஐ.டி., செக்ன்ட் இயராம்…காலைல நம்ம ஏரியாவுலதான் காலேஜ் பஸ் ஏறுவான்..நான் பார்த்திருக்கேன்….” “பரவாயில்லையே….அவனப்பத்தி இவ்வளவு தெரிஞ்சு வச்சிருக்கீங்க…? குடும்பத்துக்கு மூத்த பையன் போலிருக்கு…? எவ்வளவு பொறுப்பா இருக்கான்…” “உண்மைதான்…ஆனா இந்த ரெண்டு பசங்களும் சரியில்லையே…” “ஏன்?” “அவுங்க படிக்கலை….இந்த வேலையைத்தான் செய்யுறாங்க…..” “பாவங்க…..பார்த்தாலே படு பாவமா இருக்கு…” “யார்தான் பாவமில்லே சொல்லு? எல்லாரும் ஒவ்வொரு விதத்துலே பாவந்தான்…நான்கூட அப்படிப் பார்த்தா பாவந்தான்….” “என்ன சொல்றீங்க?” “ஆமா, உண்மையத்தான் சொல்றேன்…லஞ்ச லாவண்யம் தலைவிரிச்சாடுற இந்த உலகத்துலே எந்த பலவீனத்துக்கும் ஆட்படாமே, மாசா மாசம் வெறும் சம்பளத்தை மட்டும் வாங்கிட்டு வந்திட்டிருக்கேன் பாரு…அதனாலதான் சொல்றேன்..நானும் பாவம்தான்னு…” “உங்களை யார் தடுத்தா? நீங்களா வேண்டாம்னு இருந்தா அதுக்கு மத்தவங்க என்ன பண்ணுவாங்க?” “சீ! அது ஒரு பொழப்பா? நாயும் பிழைக்கும் இந்தப் பிழைப்பு…அந்த ஈனச் செயலை என்னால செய்ய முடியாது…” “அப்போ ஏன் புலம்புறீங்க? நமக்கும் கிடைக்கலியேன்னு நீங்க மனசுக்குள்ளே ஏங்குறமாதிரி இருக்கு…” “விடு, எதுக்கு இந்த அபத்தப் பேச்சு.?..அப்புறம் உனக்கும் எனக்குமே சண்டை வரும்…! தேவையா? அது கிடக்கட்டும்…வந்த பையன் யாரு? அதைச் சொல்லு…” “அதாங்க…அசடு மாதிரி இருப்பானே ஒருத்தன்…கடைசித் தம்பி போலிருக்கு…அவன்தான்….” “யாரு? இந்த தத்த….தத்த…தத்தன்னு புரியாமப் பேசுவானே…அவனா?” “அவனேதான்…நீங்ககூட இப்போ போன தீபாவளிக்குக் காசு கேட்டு இல்லைன்னு சொன்னீங்களே…அந்தப் பயதான்…” “பார்த்தியா, நீயே கிண்டலடிக்கிறே? அவன் கேட்ட முறை சரியில்லை சுமதி…அதனாலதான் இல்லைன்னேன்…” “முறை என்ன முறை இதுலே? போஸ்ட்மேன், சிலிண்டர் போடுறவன்…அயர்ன் பண்றவன்…இப்டி எல்லாருக்கும் கொடுக்கலையா? இவனுக்கு மட்டும் ஏன் இல்லைன்னு சொல்லணும்?….. …….3……… -3- ஒரு முப்பதோ, ஐம்பதோ கொடுத்துத் தீர்த்திருக்கலாம்…அதப்போய் இல்லைன்னு சொல்லி அவனை விரட்டிட்டீங்க…” “நீ அந்தப் பய பேச்சைக் கேட்டிருந்தேன்னா இப்படிச் சொல்ல மாட்டே!.வருஷத்துக்கொருதரம் கொடுக்கிறீங்க…கொடுத்தா என்ன சார்…..குறைஞ்சா போறீங்க?”ன்னு சொல்றான்…பார்த்தா அசடு மாதிரி இருக்கான்.!..பேச்சைப் பாரு…வாய் எப்படிக் கிழியுதுன்னு….?” “அதான் நீங்களே சொல்றீங்களே…அசடுன்னு…பிறகென்ன…? தெரியாமப் பேசிட்டான்னு விட வேண்டிதான்…” “அப்படிச் சங்கடப்பட்டுட்டுக் கொடுக்கணுமா? என்ன அவசியம்? போடான்னு விரட்டிட்டேன்…” “விரட்டிட்டீங்க சரி…அந்த அம்பது ரூபாயை மிச்சப்ப:டுத்தி கோட்டை கட்டிட்டீங்களா? கெட்டபேர்தான் மிச்சம்…” “இதிலென்ன கெட்ட பேர் இருக்கு? அவன் யாரோ…நாம யாரோ? நாளைக்கே பால் வேண்டாம்னு நிறுத்திட்டு வேறே யார்ட்டயாவது வாங்கிட்டுப் போறோம்…அவனே சதமா என்ன? தீபாவளிக் காசு, தீபாவளிக்; காசுன்னு இனி ரோட்டோட போறவங்க கூடக் கேட்க ஆரம்பிச்சிடுவாங்க போலிருக்கு…கடந்த ஒரு வருஷமா இந்தத் தெருவுல நான் போய் வந்திட்டிருக்கேன்…எனக்கு தீபாவளிக் காசு கொடுங்கன்னு வந்து நின்னாலும் ஆச்சரியப்படுறதுக்கில்லே…ஜனங்க எதுக்கும் வெட்கப்படுற மாதிரித் தெரியல்லே…” “ஆரம்பிச்சிட்டீங்களா…? கொடுக்கிறதோ கொடுக்கிறீங்க…ஒன்பது பேருக்குக் கொடுத்தாச்சு…இந்தப் பத்தாவது ஆளுக்கும் கொடுத்திருக்கலாமேன்னுதான் சொல்ல வந்தேன்…” “சரி, விடு…என்னைக்கோ நடந்தது….அதுக்கு இப்போ எதுக்கு விவாதம்? தேவையில்லாம…” “உங்களுக்குத் தேவையில்லாததாத் தோணுது…ஆனா எனக்கு அப்படித் தோணலையே? அவமானமால்ல இருக்கு?” இவன் ஒரு கணம் தயங்கினான். பிறகு கேட்டான். “அவமானமா? உனக்கென்ன அவமானம்?” “ஆமா, பின்னே? அந்தப் பால் போட்ட அசட்டுப் பையன்ட்ட, அந்தச் சமத்து அண்ணன்காரன் என்ன சொல்லி விட்டிருக்கான் தெரியுமா?” “என்னவாம்?” “தீபாவளிக்காசு தரமாட்டேன்னாருல்லடா, அவுரு வீடுதாண்டா…போய்ப் போட்டுட்டுவான்னு அடையாளம் சொல்லி அனுப்பிச்சானாம்….அத வச்சுத்தான் வந்தேங்கிறான் இவன்…” சொல்லிவிட்டு சங்கடத்தோடு இவன் முகத்தையே தயக்கத்தோடு பார்த்தாள் சுமதி. முகத்தில் ஈயாடவில்லை இவனுக்கு!! —————— ushaadeepan@gmail.com

Series Navigation

உஷாதீபன்

உஷாதீபன்

ஆகு பெயர்

This entry is part [part not set] of 44 in the series 20080410_Issue

உஷாதீபன்


அ “ ந்தப் பையன் வந்திட்டுப் போனாங்க… ”
-உள்ளே நுழைந்ததுமே சுமதி முதல் தகவலாகச் சொன்னாள்.
என் மனதில் என்ன எதிர்பார்ப்பு இருக்கும் என்பது அறிந்து சொல்வது போலிருந்தது.
வந்துட்டானா? பரவாயில்லையே! எங்கே ரெஸ்பான்ஸ் இருக்காதோன்னு நினைச்சேன்… “ ”
நீங்க கிளம்பிப்போய், அஞ்சு நிமிஷத்துல வந்துட்டாங்க… “ ”
அப்டியா? ஆச்சரியமாயிருக்கே! அவன் வீடு எங்கேயோ தூரமா இருக்குன்னுல்ல சொன்னான். “
வீ;ட்டு வாசல்ல கடைன்னான். ஒரு முறைகூடப் போனதில்லை. அதுக்குள்ளே எப்படி வந்தான்? ”
எப்படியோ, பால் வந்திடுச்சு நமக்கு. அது போதும்… “ ”
அதுக்கில்லே சுமதி….தூரமா அவன் வீடு இருக்கிறதாலே, கொண்டு வர முடியாது…வேறே “
எங்கேயாவது வாங்கிக்குங்கன்னு சொல்லிடுவானோன்னு பார்த்தேன்…”
அது ஏன் சொல்றான்? நாம அவன்ட் ட கடந்த ஒரு வருஷமாப் பால் வாங்கிட்டிருக்கோம்…இந்த “
உதவி கூடப் பண்ண மாட்டானா?”
அது எப்படி? திடீர்னு ரெண்டு பாக்கெட் கொண்டு வான்னு சொன்னா, அவன்ட்டப் பால் இருக்க “
வேண்டாமா? சாயங்கால வேளை வேறே? ராத்திரி பன்னெண்டு மணிக்கு மேலதான் புதுப்பால் வரும்.
அதனாலதான் சந்தேகம் எனக்கு…. ”
பால் வியாபாரம் பண்றவங்ககிட்டே எப்பவும் பால் பாக்கெட் கைவசம் இருக்கத்தான் செய்யும். “
ஆகையினால நம்பிச் சொல்லலாம்…சொன்னவுடனே அந்தப் பையன்ட்டக் கொடுத்து விட்டுட்டான்ல?”
பையன்ட்டயா? அவனே வரல்லியா? “ ”
அவனே எப்படி வருவான்? கடை முதலாளியே எல்லாத்துக்கும் அலைவாரா? அப்புறம் வேலைக்கு “
எதுக்குப் பையன்களை வைக்கிறதாம்? ”
வேலைக்கா? வேலைக்குமில்லே, சேலைக்குமில்லே…! ஆள் போட்டு இந்த வியாபாரத்துல லாபம் “
பார்க்க முடியுமா? இல்ல கட்டுபடிதான் ஆகுமா? எல்லாம் சொந்தக்காரப் பசங்கதான்…”
அப்டியா? “ ”
சொந்தக்காரப் பசங்கன்னா, சொந்தத் தம்பிங்கன்னு சொல்ல வந்தேன்… “ ”
அதானே பார்த்தேன்… “ ”
என்ன பார்த்தே? உனக்கு எப்படித் தெரியும்? “ ”
முக ஜாடை அந்தப் பெரியவன் மாதிரியே இருந்திச்சேன்னு நினைச்சேன்… “ ”
ரெண்டு பேர் இருக்காங்க…ஒருத்தன் காலைல பேப்பர் போடப் போயிடுவான்…இன்னொருத்தன் வீடு “
வீடாப் பால் போடுவான்…”
பாருங்க! குடும்பமே “ எவ்வளவு பொறுப்பா இயங்குதுன்னு…”
……….2………….
-2-
அந்தப் பெரிய பையன் காலைல ரெண்டு மணிக்கு எழுந்து பால் வண்டியை வரவேத்து, பால் “
பாக்கெட்டுகளை இறக்கி, பிறகு நாலு மணிக்கு வந்த நிய+ஸ் பேப்பர்களைப் பிரிச்சு அடுக்கி,
எல்லாத்தையும் விநியோகத்துக்கு அனுப்பிட்டு, காலேஜ் வேறே போறான் தெரியுமா? ”
காலேஜா? படிக்கிறானா அந்தப் பையன்? “ ”
ஆம்மா….பி.இ., ஐ.டி., செக்ன்ட் இயராம்…காலைல நம்ம ஏரியாவுலதான் காலேஜ் பஸ் “
ஏறுவான்..நான் பார்த்திருக்கேன்….”
பரவாயில்லையே….அவனப்பத்தி இவ்வளவு தெரிஞ்சு வச்சிருக்கீங்க…? குடும்பத்துக்கு மூத்த “
பையன் போலிருக்கு…? எவ்வளவு பொறுப்பா இருக்கான்…”
உண்மைதான்…ஆனா இந்த ரெண்டு பசங்களும் சரியில்லையே… “ ”
ஏன்? “ ”
அவுங்க படிக்கலை….இந்த வேலையைத்தான் செய்யுறாங்க….. “ ”
பாவங்க…..பார்த்தாலே படு பாவமா இருக்கு… “ ”
யார்தான் பாவமில்லே சொல்லு? எல்லாரும் ஒவ்வொரு விதத்துலே பாவந்தான்…நான்கூட அப்படிப் “
பார்த்தா பாவந்தான்…. ”
என்ன சொல்றீங்க? “ ”
ஆமா, உண்மையத்தான் சொல்றேன்…லஞ்ச லாவண்யம் தலைவிரிச்சாடுற இந்த உலகத்துலே “
எந்த பலவீனத்துக்கும் ஆட்படாமே, மாசா மாசம் வெறும் சம்பளத்தை மட்டும் வாங்கிட்டு வந்திட்டிருக்கேன்
பாரு…அதனாலதான் சொல்றேன்..நானும் பாவம்தான்னு… ”
உங்களை யார் தடுத்தா? நீங்களா வேண்டாம்னு இருந்தா அதுக்கு மத்தவங்க என்ன “
பண்ணுவாங்க? ”
சீ! அது ஒரு பொழப்பா? நாயும் பிழைக்கும் இந்தப் பிழைப்பு…அந்த ஈனச் செயலை என்னால “
செய்ய முடியாது… ”
அப்போ ஏன் புலம்புறீங்க? நமக்கும் கிடைக்கலியேன்னு நீங்க மனசுக்குள்ளே ஏங்குறமாதிரி “
இருக்கு…”
விடு, எதுக்கு இந்த அபத்தப் பேச்சு.?..அப்புறம் உனக்கும் எனக்குமே சண்டை வரும்…! “
தேவையா? அது கிடக்கட்டும்…வந்த பையன் யாரு? அதைச் சொல்லு… ”
அதாங்க…அசடு மாதிரி இருப்பானே ஒருத்தன்…கடைசித் தம்பி போலிருக்கு…அவன்தான்…. “ ”
யாரு? இந்த தத்த….தத்த…தத்தன்னு புரியாமப் பேசுவானே…அவனா? “ ”
அவனேதான்…நீங்ககூட இப்போ போன தீபாவளிக்குக் காசு கேட்டு இல்லைன்னு “
சொன்னீங்களே…அந்தப் பயதான்…”
பார்த்தியா, நீயே கிண்டலடிக்கிறே? அவன் கேட்ட முறை சரியில்லை சுமதி…அதனாலதான் “
இல்லைன்னேன்…”
முறை என்ன முறை இதுலே? போஸ்ட்மேன், சிலிண்டர் போடுறவன்…அயர்ன் பண்றவன்…இப்டி “
எல்லாருக்கும் கொடுக்கலையா? இவனுக்கு மட்டும் ஏன் இல்லைன்னு சொல்லணும்?…..
…….3………
-3-
ஒரு முப்பதோ, ஐம்பதோ கொடுத்துத் தீர்த்திருக்கலாம்…அதப்போய் இல்லைன்னு சொல்லி
அவனை விரட் டிட்டீங்க…”
நீ அந்தப் பய பேச்சைக் கேட்டிருந்தேன்னா இப்படிச் சொல்ல மாட்டே!.வருஷத்துக்கொருதரம் “
கொடுக்கிறீங்க…கொடுத்தா என்ன சார்…..குறைஞ்சா போறீங்க? ன்னு சொல்றான்…பார்த்தா அசடு மாதிரி ”
இருக்கான்.!..பேச்சைப் பாரு…வாய் எப்படிக் கிழியுதுன்னு….? ”
அதான் நீங்களே சொல்றீங்களே…அசடுன்னு…பிறகென்ன…? தெரியாமப் பேசிட்டான்னு விட “
வேண்டிதான்…”
அப்படிச் சங்கடப்பட்டுட்டுக் கொடுக்கணுமா? என்ன அவசியம்? போடான்னு விரட்டிட்டேன்… “ ”
விரட்டிட்டீங்க சரி…அந்த அம்பது ரூபாயை மிச்சப்ப:டுத்தி கோட்டை கட்டிட்டீங்களா? “
கெட்டபேர்தான் மிச்சம்…”
இதிலென்ன கெட்ட பேர் இருக்கு? அவன் யாரோ…நாம யாரோ? நாளைக்கே பால் வேண்டாம்னு “
நிறுத்திட்டு வேறே யார்ட்டயாவது வாங்கிட்டுப் போறோம்…அவனே சதமா என்ன? தீபாவளிக் காசு,
தீபாவளிக்; காசுன்னு இனி ரோட்டோட போறவங்க கூடக் கேட்க ஆரம்பிச்சிடுவாங்க போலிருக்கு…கடந்த
ஒரு வருஷமா இந்தத் தெருவுல நான் போய் வந்திட்டிருக்கேன்…எனக்கு தீபாவளிக் காசு கொடுங்கன்னு
வந்து நின்னாலும் ஆச்சரியப்படுறதுக்கில்லே…ஜனங்க எதுக்கும் வெட்கப்படுற மாதிரித் தெரியல்லே…”
ஆரம்பிச்சிட்டீங்களா…? கொடுக்கிறதோ கொடுக்கிறீங்க…ஒன்பது பேருக்குக் கொடுத்தாச்சு…இந்தப் “
பத்தாவது ஆளுக்கும் கொடுத்திருக்கலாமேன்னுதான் சொல்ல வந்தேன்…”
சரி, விடு…என்னைக்கோ நடந்தது….அதுக்கு இப்போ எதுக்கு விவாதம்? தேவையில்லாம… “ ”
உங்களுக்குத் தேவையில்லாததாத் தோணுது…ஆனா எனக்கு அப்படித் தோணலையே? “
அவமானமால்ல இருக்கு?”
இவன் ஒரு கணம் தயங்கினான். பிறகு கேட்டான்.
அவமானமா? உனக்கென்ன அவமானம்? “ ”
ஆமா, பின்னே? அந்தப் பால் போட்ட அசட்டுப் பையன்ட்ட, அந்தச் சமத்து அண்ணன்காரன் “
என்ன சொல்லி விட்டிருக்கான் தெரியுமா?”
என்னவாம்? “ ”
தீபாவளிக்காசு தரமாட்டேன்னாருல்லடா, அவுரு வீடுதாண்டா…போய்ப் போட்டுட்டுவான்னு “
அடையாளம் சொல்லி அனுப்பிச்சானாம்….அத வச்சுத்தான் வந்தேங்கிறான் இவன்…”
சொல்லிவிட்டு சங்கடத்தோடு இவன் முகத்தையே தயக்கத்தோடு பார்த்தாள் சுமதி.
முகத்தில் ஈயாடவில்லை இவனுக்கு!!
——————
உஷாதீபன்,
8-10-6 ஸ்ருதி இல்லம், “ ”
சிந்து நதித் தெரு,
மகாத்மாகாந்தி நகர்,
மதுரை-625014.
———————————-
செல்: 94426 84188.
.

Series Navigation

உஷாதீபன்

உஷாதீபன்