அன்பின் பஞ்சு

This entry is part [part not set] of 39 in the series 20031016_Issue

– பா. சத்தியமோகன்.


தவிப்பினால்
சிதறுண்டிருக்கிறது
என் வீடு
தேவைகளின் கூரை
நொய்ந்தபடி
தொங்குகிறது.
பதற்றங்களால்
பரிதாபமாகியிருக்கிறது
கிழிந்த மனது.
உதவுகின்ற கரங்கள்
இருக்கின்றதா எனத் தேடி
குமிகிறது கண்கள்
தேடுகின்ற கண்களுக்கு
உண்மையும் அன்பும்
உதவியும் கருணையும்
ஓயாமல் தரவல்லார்
எவருமில்லை பூமியில்.
எதுவும் சிறிது காலம்
யாவரும் சிறிது நேரம்
யாவரும் சிறிது தூரம்
புரிந்துவிடுகிறது
ஒரு கணத்தில் யாவும்
கலைந்துவிடுகிறது
ஒரு கணத்தில் சகலமும்
அன்பின் பஞ்சு
நிரம்பிய வெளியால்
காத்திருக்கும் ஆகாயம்
மெல்ல எனை உச்சரிக்கிறது.

Series Navigation

பா. சத்தியமோகன்

பா. சத்தியமோகன்