அனுபவ மொழிகள்

This entry is part [part not set] of 26 in the series 20020525_Issue

கோமதி நடராஜன்


# உங்களுக்கு எல்லாமே தொியும் என்று சொல்லிக் கொள்ளுங்கள்,தவறில்லை.ஆனால்,அடுத்தவனுக்கு எதுவுமே தொியாது என்று கணித்து விடாதீர்கள்.தற்பெருமையைக் கூட மன்னித்து விடலாம்,அகம்பாவத்தை மன்னிக்க முடியாது அது அழிக்கப் படவேண்டிய ஒன்று

# உங்கள் திறமையை அடுத்தவாிடம் எதிர்பார்க்காதீர்கள்.ஒரே கலையை ஒரே திறமையை,ஒரே மாதிாி எல்லோருக்கும் தந்து விடுவதில்லை.ஆணவம் வந்து விடக்கூடாதே என்றுதான்,அழகு மணம் மென்மை நிறைந்த ரோஜாவுக்கு முள்ளைக் கொடுத்திருக்கிறான்.அவன் தருவதற்கும் காரணம் இருக்கும் தராமல் விட்டதற்கும் காரணம் இருக்கும்.

# அடுத்தவரைக் குறை கூறு முன் ,உங்கள் பக்கம் விரல் திரும்பாதிருக்க,உங்களைக் கவனமாக ஒருமுறை ஆராய்ந்து கொள்ளுங்கள்.நீங்கள் ஒரு விரலை நீட்டினால்,ஓராயிரம் விரல்கள்,உங்களைச் சுட்டிக் காட்டக் கழுகுகள் போல் வட்டமடித்துக் கொண்டே இருக்கும்.இரையாகிவிடாதீர்கள்.

# உங்கள் பேச்சும் நடத்தையும்,உங்கள் வாழ்க்கை வயலில் நீங்கள் தூவி வரும் விதைகள்.தீமையை விதைத்து நன்மையை அறுவடை செய்ய எண்ணாதீர்கள்.முள்ளை விதைத்துத் தானியத்தைத் தேடாதீர்கள்.

அடுத்தவர் நம்மிடம் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதைப் பிழையின்றி அழகாகக் கணக்குப் போடும் நீங்கள்,அடுத்தவாிடம் நீங்கள் நடந்து கொள்ள வேண்டிய கணக்கில் மட்டும் தவறி விடுகிறீர்களே !எப்படிப் பார்த்தாலும்,ஒன்றும் ஒன்றும் இரண்டு என்றுதானே வரவேண்டும்,உங்கள் கணக்கில் மட்டும் விடை வேறு படலாமா ?

# வாய்ப்புக் கிடைத்தபோதெல்லாம்,அடுத்தவரைக் கிண்டலும் கேலியும் குத்தலுமாகப் பேசி வதைப்பதில் குடூரமான சந்தோஷம் அடைபவரானால்,உங்களிடம் இல்லாத ஏதோ ஒரு உயர்வை,அவரக்ளிடம் கண்டு அதனால் வெளியாகும் தாழ்வு மனப்பான்மையும் ,பொறாமையும்,உங்களை ஆட்டிவைக்கின்றன,என்பதை அப்பட்டமாக உலகுக்கு உணர்த்திவிடுகிறீர்கள்.தன்னிறைவு பெற்றவன் இது போன்ற மட்டமான கேளிக்கைகளில் ஒரு நாளும் ஈடுபடமாட்டான்.

# அடுத்தவர் தோல்விகளைக் கண்டு சந்தோஷம் அடைபவரா நீங்கள் ?ஆம் என்றால்,சந்தோஷத்தின் உண்மையான அர்த்தத்தைப் புாிந்து கொள்ளாதவர் நீங்கள் என்பதைக் காட்டுகிறீர்கள்.அடுத்தவர் துக்கத்தில் இன்பம் காணும் அற்பத்தனமானக் காாியத்தை மிருகங்கள் கூடச் செயாது.ஐந்தறிவு ஜீவன்கள் கூட சமயத்தில் நமக்கு ஆசானாக உயர்ந்து நிற்கின்றன.

# அடுத்தவர் தோல்வியில் நீங்கள் காட்டும் மகிழ்ச்சியானது,அடுத்தவர் வெற்றியில் நீங்கள் பொறாமை கொள்பவர் என்ற அருவருப்பான உண்மையை எல்லோருக்கும் எடுத்துச் சொல்லிவிடும்.உங்கள் முகத்தில், நீங்களே சேற்றைப் பூசிக்கொள்ளாதீர்கள்.

# நாம் அடுத்தவரை அடக்கி ஆளவேண்டும் என்று ஆசைப் படாமல் இருப்போமே.நமக்குள் இருக்கும் நம் மனதை அரை நிமிடம் கூட நம்மால் அடக்க இயலாத போது,அடுத்தவரை அடக்க நினைத்தால் அது ஆகக் கூடியக் காாியமா ?நமக்கு அடங்கி நடப்பதற்காக ஒரு புழுவைக் கூட இறைவன் படைத்திருக்க மாட்டான்.அவரவர்களுக்கென்று தனி பாதை உண்டு,ஆற்ற வேண்டியக் கடமைகள் உண்டு.

# உங்கள் ஆசைப் படியே அடுத்தவரை அடக்க நினைக்கிறீர்களா ?அப்படியென்றால் அதற்காக நீங்கள் எடுக்க வேண்டிய ஆயுதங்கள் ,கனிவு,புன்னகை,அன்பு,இன்சொல்,அரவணைப்பு என்றிருந்தால்,உங்கள் நோக்கத்தில் தவறே இல்லை,இத்தனையும் கொண்டு போராடினால்,உங்களுக்குத் தோல்வியும் இல்லை.உறவு என்ற சாம்ராஜ்யத்தி

யாத இனிய சர்வாதிகாாி நீங்களாகத்தான் இருக்க முடியும்.உங்கள் எல்லைக் கோட்டைத் தாண்டி யாரும் தப்பி ஓடவும் மாட்டார்கள்.

–கோமதிநடராஜன்—

ngomathi@rediffmail.com

Series Navigation

கோமதிநடராஜன்

கோமதிநடராஜன்

அனுபவ மொழிகள்

This entry is part [part not set] of 32 in the series 20020407_Issue

கோமதிநடராஜன்


1.நடிப்புக் கலவாமல்,மனம் விட்டுச் சிாிக்கக் கற்றுக்கொள்ளுங்கள்.கவலைகளைக் கொல்லச் சிறந்த மருந்து இந்த சிாிப்பு.

2.அடுத்தவர்களிடம் காணும் நல்ல விஷயங்களையும் அவர்களது சாதனைகளையும் முழுமனதோடு பாராட்டப் பழகிக் கொள்ளுங்கள்.மனம் கடல் போல் விாிவதைக் காண்பீர்கள்.

3.அன்பு பாசம் நட்பு இவைகளுக்கு மட்டுமே அடி பணியுங்கள்.இவைகளுக்காக வணங்கிய தலை என்றுமே நிமிர்ந்து நிற்கும்.

4.உங்கள் மனசாட்சிக்கு மட்டும் பயந்து நடந்தால் போதும்.மனசாட்சியைவிட உற்றத் தோழன் வேறு இல்லை.அடுத்தவருக்குப் பயந்து நடந்தால் நீங்கள் நீங்களாக இருக்கமுடியாது.

5. ‘நான் செய்வது சாி,என் செய்கை யாரையும் புண்படுத்தாது,எனக்கு நன்மை தரவில்லையென்றாலும் அடுத்தவருக்குத் தீமை தராது ‘,என்பதை உங்கள் மனசாட்சிக்கு விரோதமின்றி உறுதிப் படுத்தியபின்,எந்த காாியத்தையும் தொடங்குங்கள்.இறைவனும் துணை வருவான்.

6.உங்களோடு உரையாடுபர்களின் முகபாவங்களிலிருந்தும்,அவர் கூறும் ஒன்றிரண்டு வார்த்தைகளிலிருந்தும் அவர் மனதை வாசிக்கக் கற்றுக் கொள்ளுங்கள்.எந்த அளவு இவரை நம்பலாம்,என்று புாிந்துகொண்டால்,அதற்கேற்றார் போல் நம் எல்லைக் கோடுகளை வரைந்து கொள்ளலாம்.

7.யாரையும் நம்பி உங்கள் மனக்கஷ்டங்களைக் கூறாதீர்கள்.கேட்பவர்களில்பாதி பேர் ரசித்துக் கொள்வர்,மீதி பேர் சலித்துக் கொள்வர்.

8.எல்லோருக்கும் உங்களைப் பிடிக்கவேண்டும் என்ற் நடக்காத ஒரு விஷயத்துக்காக,எந்த ஒரு முயற்சியிலும் ஈடுபட்டு உங்கள் நேரத்தை வீணாக்காதீர்கள்.உங்களோடு பழகுபவர்களில் உங்களைப் பிடித்துப் பழகுபவர்களை விட,பிடிப்பதாக நடித்துப் பழகுபவர்கள்தான் அதிகம்.

9.போட்டி,பொறாமை வெறுப்பு இந்த மூன்றுக்கும் மனதில் இடம் தராமல்,மனதைத் தூய வெண்பனியாகத் தும்பைப்பூவாக வைத்திருங்கள்.இறைவன் இருக்க விரும்புவது இதுபோன்ற கோவில்களில்தான்.

10.உங்களோடு வம்புக்கு வர ஆசைப் படுபவர்களைத் தண்ணீரை ஒட்ட விடாதத் தாமரைஇலை போல் புண்படுத்தாமல் பக்குவமாக உருட்டிவிடுங்கள்.பிரயோஜனமான நல்ல பல விஷயங்கள் நமக்காகக் காத்திருக்கின்றன.

11. எத்தனை நெருக்கமானவர்களாக இருந்தாலும், பொருள் பணம் உதவி என்று எதையும் யாாிடமும் எதிபார்க்காமல் இருப்பதில் உறுதியாக இர்ங்கள்.எதிபார்ப்பும் அது தரு ஏமாற்றமும் உறவுப்பாலத்தின் ஒவ்வொரு ஆணிகளையும் அகற்றிக் கொண்டே வரும்.

12.எல்லோரையும் திருப்திப் படுத்தவேண்டும் என்ற முயற்சியில் சக்திக்கும் தகுதிக்கும் மீறி வீண் முயற்சியில் ஈடுபடாதீர்கள்.மழை பெய்தால் உப்பு வியாபாாியும் வெயில் காய்ந்தால் விவசாயியும் இறைவனிடம் அதிருப்தி கொள்வர்.அனைவரையும் ஒரே சமயத்தில் திருப்திப் படுத்த இயலாதென்றால்,கேவலம் மனிதனால் முடியுமா ?

13.கோபம் வீரத்துக்கு அழகு என்று எண்ணாதீர்கள்.மனோதிடம் அற்றவன்,தாழ்வுமனப்பானமை கொண்டவன்,தவறுகள் செய்தவனும் தங்கள் குறைகளை மறைத்துத் தங்களைக் காத்துக் கொள்ளவும் எடுக்கும் ஆயுதமே இந்தக் கோபம்.உலகை வெறுக் காலடியில் கிடத்த ஒரு நல்ல ஆயுதம் அன்பு மட்டுமே.

——

1995ல் மங்கையர்மலாில் வெளியான கட்டுரை

ngomathi@rediffmail.com

Series Navigation

கோமதிநடராஜன்

கோமதிநடராஜன்