வேண்டாம்.. வேண்டாம்..ஆனால்..

This entry is part [part not set] of 47 in the series 20040304_Issue

புதியமாதவி


++++

விடைபெறுகின்றேன்
மன்னித்துவிடு
உண்பதும்
உன் பசித்தீர்க்க
உறக்கத்தில்
விழிப்பதும்
மட்டுமே
என் வாழ்வின்
தவமல்ல.

என்னுடன் நீ
நட்சத்திரங்களை
எண்ண வேண்டாம்.

என்னுடன் நீ
புல்தரையில்
நடக்கவேண்டாம்

என்னுடன் நீ
கடல்மணலில்
கதைப்பேச வேண்டாம்

என்னுடன் நீ
எனக்குப் பிடித்த
எதையுமே
செய்ய வேண்டாம்

உன்னுடம் நான்
வாழ்ந்த
வாழ்வின் எச்சமாய்
பூத்திருக்கும்
பூக்களை
உன் அதிகார
அங்கியின்
அலங்காரப்பூவாக்க
பறித்துவிடாதே..

அன்புடன்,

புதியமாதவி

Series Navigation

புதியமாதவி, மும்பை

புதியமாதவி, மும்பை