விலகாத உறவு…

This entry is part [part not set] of 48 in the series 20101227_Issue

ஹேமா(சுவிஸ்)


******************************
ஒருக்களித்து வைத்த கட்டில்.
மடித்த சாய்கதிரை.
மூலையில்
சாய்த்த கைத்தடியோடு செருப்பு.
கவிழ்த்தபடி எச்சில் துப்பும் சட்டி.
எறிவதற்கான குப்பைக்குள்
மருத்துப் போத்தல்களோடும்
மற்றும் நினைவுகளும்.
அலமாரியில் ஒரேயொரு சேலை
ரவிக்கையுடன் !
ஓய்ந்துவிட்ட ஒப்பாரி.
அணைந்த ஊதுவத்தி.
பாட்டியையும்
பாட்டியின் ஆவியையும் மறந்து
பயமில்லாமல் தலைவாசல் தூணில்
சுற்றி விளையாடும் பேரப்பிள்ளைகள்.
இயற்கையும் விழிதுடைத்து
அடுத்த அலுவலுக்காய் !
தாத்தா மட்டும்
அறை வாசலுக்கு
வருவதும்
நிற்பதும் போவதுமாய்!!!

Series Navigation

ஹேமா(சுவிஸ்)

ஹேமா(சுவிஸ்)