This entry is in the series 20030918_Issue

அருண்பிரசாத்.


அலுப்பூட்டும் இந்த
புகைவண்டிப் பயணங்களில்
இவனது இசை மட்டும்
இன்னமும் அலுப்பே தருவதில்லை.

இருப்புச் சத்தங்களின் பின்னணியிலும்
இவன் விரல்வழி கசியும்
உள்ளுருக்கும் கிடார் இசை என்
உடைந்த சிறகுகளை
மெல்ல நீவுகின்றது.

கட்புலனாகா வெளிகளினூடே
மேலும் உயரங்களில் பறக்கிறேன்.
பூஜ்ஜிய நிறையில் மீண்டும்
உன் நினைவுகளுடன்.

அருண்பிரசாத்.
everminnal@yahoo.com

Series Navigation