This entry is in the series 20030209_Issue

ப்ரகாஷ் நாகராஜ்


இமி அசை மகிழ்வுக்கு
இரு மனித விலங்குகளின் அழைப்பு
ஒன்பது மாதத்தில் வருகை.

அனுப்பிய முகவரி இல்லாமல்
சேரும் முகவரி இல்லாமல்
வந்துவிட்ட கடிதம்.

நாலு கை பட்டு
நசுஙும் முன்னே
பத்திரபடுத்தும் ஓர் ஆலையம்.

உன்னை தேடி வந்து
முகவரி கொடுக்கும் சிலர்.

இப்படி அழையா விருந்தாளியாக
வந்த உன் மேல்
இத்தனை பாசமா ?
கடவுளே!
அடுத்த ஜென்மத்தில்
என்னை முகவரி இல்லாமல் அனுப்பு !

pnagraj@netvigator.com

Series Navigation