மாமிசக்கடை

This entry is part [part not set] of 34 in the series 20100926_Issue

நட்சத்திரவாசி


மாமிச கடைமுன் கூடியிருக்கும் மக்கள்

மாமிசத்தை மொய்க்கும் ஈக்களை குறித்து

கவனம் கொள்வதில்லை

மாமிசத்தை விலைக்கு வாங்குவதற்கு முன்

ஊர்ஜிதம் செய்யப்படுகிற மனத்தடையயல்லா

நிலை ஒரு முறையேனும் வாய்க்க வேண்டும்

மாமிசக்கடையில் வெட்டி தறிக்கும்

மாமிசங்களை மட்டுமே கணக்கிலெடுப்பதால்

எலும்புகளை குறித்த குறை

அப்படியே இருக்கிறது

மாமிசம் வெட்டுபவன் முன்பு

ஆடு போல் நிற்கிற மக்கள்

தங்கள் இயலாமையை

வெளிப்படுத்துவதே இல்லை

எனினும் மாமிசம் குறித்த நல்லெண்ண

புத்தகத்தை புரட்ட தயராக இல்லை

மாமிசத்துக்கும் எலும்புக்கும்

இடையில் வேறுபடுத்தலை விரும்பாத

மாமிச வெட்டிக்கும்,மாமிச பிரியருக்கும்

இடையில் பெயரிடப்படாத பனிப்போர்

இருக்கத்தான் செய்கிறது

மாமிசத்தை வெட்டி துண்டுகளாக்கி

பைக்குள் நுழைத்து கையில் தரும்

வரையிலாவது குறைந்த பட்சம்

பனிப்போர் நிகழ்கிறது

இடையில் நாய்களுக்கான மாமிசம்

வாங்கும் பிரத்யேக முகங்கள்

எப்போதும் அலட்சியமாகவே

மாமிசத்தை அணுகுகின்றன

பிரயேக முகம் என்பதால்

மாமிசம் வெட்டுபவனும் கண்டு கொள்வதில்லை

மாமிச பட்சணிகளும் கண்டு கொள்வதில்லை

எல்லாவற்றிலும் மொய்த்து தீர்கிற

ஈக்கள் இவை யாதொன்றையும்

அறிவதில்லை.

Series Navigation

நட்சத்திரவாசி

நட்சத்திரவாசி