மும்பையன்
செல்வி அவர்களின் கட்டுரை சிறப்பான ஒன்று. நம்பிக்கை வைப்பதிலும், சிறு சிறு மாற்றங்களிலும் மகிழ்ச்சி கொள்வதிலும் தவறில்லைதான். அந்த சுகந்திரம் கூட இல்லாவிட்டால் 60 ஆண்டு சுகந்திரத்தின் பலந்தான் என்ன?
ஆனால், மருத்துவர் விசயத்தில் எனது தனிப்பட்ட நம்பிக்கை பலமுறை பொய்த்திருக்கிறது. எனது குடும்பத்து நபர்கள் யாராவது அரசியலுக்கு வந்தால், எந்த எம்.எல்.ஏயாவது தவறு செய்தால் சாட்டையால் அடியுங்கள் என்று சொன்னதான ஞாபகம். [என் ஞாபகம் தவறாகக்கூடயிருக்கலாம், அல்லது வார்த்தைகள் தவறாகயிருக்கலாம் ] அப்போது நான் மிக மகிழ்ந்தேன். தமிழக அரசியலில்
தங்களை வெளிப்படையாய் சுயவிமர்சனம் செய்து தண்டித்து கொள்ளும் ஒரு கட்சி வளர்கிறது என்ற செய்தியே நம்பிக்கை கீற்றை பரவச்செய்தது. ஆனால் அதன் உண்மை நிலையென்ன, என்பது நம்மில் அனைவரைக்கு தெரியும். தேவைப்படும்போது வன்முறை கையில் எடுத்தல், அடிப்படையான கொள்கை என்ற ஒன்றை வகுத்துக்கொண்டு தேவைப்படும்போது அதை மாற்றி அமைத்தல் அல்லது கொஞ்சம் சமரசம் செய்து கொள்ளல், அடிப்படை அறிவின்றி எதையோ, யாரையோ, எதற்காகவோ எதிர்த்தல், அதன் மூலம் கிடைக்கிற பப்ளிசிட்டியை ஓட்டாக மாற்றல், ஒவ்வொரு தேர்தலிலும் குதிரை மாற்றல், தனது குடும்பாதிக்கத்தை மெதுவாக நுழைத்தல், கட்சியும் கொள்கையும் ஒருநபர் சார்ந்து வளர்த்தெடுத்தல், தனிநபர் துதி, கட்சியில் அறிவியக்கத்தையும், மாற்றுக்கருத்துக்களையும் தந்திரமாக காயடித்தல் போன்ற ரெகுலரான திராவிட ஜனநாயகமரபின் நீட்சியாகவே மருத்துவர் வளர்ந்திருக்கிறார். [ திராவிட ஜனநாயகம் என்பதை படிப்பதற்கு உறுத்தலாகயிருந்தால் காங்கரஸ் ஜனநாயகம் என்றும் சேர்த்து படித்துக்கொள்ளுங்கள் ]
ஒருவேளை தமிழகத்தில் அப்படியிருந்தால்தான் அரசியல் பண்ணமுடியுமே என்னவோ.. எந்த கருத்துமையம் அரசியல் மையங்கள் மேல் ஆட்சி செலுத்ததாவரை இந்த நிலை நீடிக்கசெய்யும். கொள்கைதாண்டி தனிநபரின் ஆளுமை வளரச்செய்வது அபாயகரமானது. கலைஞர், எம்.ஜீ.ஆர், ஜெயலலிதா, மோடி, ஜோதிபாசு, போன்றோர்களின் ஆளுமையும் அதன் வளர்ச்சியும், வீழ்ச்சியும் நமக்கு தெரிந்ததுதான். அதனால்தான் இடதும், வலதும் தாங்கள் ஆளும் கட்சியின்/மாநிலத்தின்/தலைவர்கள் மீது எப்போதும் ஒரு பிடிப்பை, சுயவிமர்சனத்தை நீண்டகால பயன்கருதி கொண்டுள்ளன. இது கட்சிக்கும், நாட்டுக்கும் பயன் தரவல்லதே. ஒன்மேன் ஹ¤ரோ.. முதல்வன்.. சினிமாவில் மட்டுமே சாத்தியமாகவேண்டும்.
மக்கள் தொலைக்காட்சி நல்ல தொடக்கம். ஆனால் எதைநோக்கி பயணிக்கவேண்டுமோ அதை நோக்கியே பயணிக்கிறது. மறுபடியும் மக்கள் நலனுக்காக, தமிழ் கலாச்சார மீட்டெடுப்பிற்காக, உண்மையான திறந்த மனது விவாதத்திற்காக. அரசியல் சாராத தொலைக்காட்சியாக மிளிரும் என்று மறுபடியும் நம்பிக்கைவைத்து அதையிழக்க மனமில்லை. அப்படிவந்தால் மனம் மகிழ்வேன். மருத்துவரின் மிகப்பெரிய சாதனையாக, கொடையாக தமிழகம் அதற்கு தலைவணங்கும். 99% சதவீதம் அப்படிப்பட்ட அறிவற்ற காரியத்தை மருத்துவர், பழுத்த அரசியல்வாதி செய்யமாட்டார் என்பது என் கருத்து. கருத்து தோற்கடிக்கப்பட்டால் என் மீசையில் மண் ஒட்டினால் அதீத ஆனந்தமடைவேன்.
மறுபடியும் இது வெறும் மருத்துவரின் தவறல்ல. புரையோடிப்போயிருக்கிற திராவிட அரசியலின் ஊற்றுக்கண். இடதிலிருந்தும், வலதிருந்தும் கற்றுக்கொள்ளவேண்டியவை அதிகம்.
==============================================================
http://www.thinnai.com/?module=displaystory&story_id=20708091&format=html
“திரு.விஜயகாந்த் ரமணா படத்தில் செய்ததைவிட சிறந்த ஜனநாயகமுறையில் திரு.ராமதாஸ் செய்து வருகிறார். இதுபோல் இன்னும் நிறைய விஷயங்களில் அவரின் பொதுமக்கள் சேவை தொடர வேண்டும் ”
mani@techopt.com
- கால நதிக்கரையில்……(நாவல்)-19
- நாங்கோரி என்ற உறுப்பினர்
- பகவத் கீதை – ஓர் எளிய மொழியாக்கம் – 3
- கவிதைகள்
- பூரண சுதந்திரம் ?
- காதல் நாற்பது – 34 உன்னை நாடும் என்னிதயம் !
- Letter sent to The Indian Embassy Bangkok Thailand
- தியேட்டர் லாப் – சங்கீதப் பைத்தியம் – பம்மல் சம்பந்த முதலியார் மேடையேற்றம்
- பிழைதிருத்தம் 12. – நகர்புறம் – நகர்ப்புறம்
- சிங்கையில் இந்தியச் சுதந்திர தினவிழா
- அமரர் பண்டிதர் சு.வேலுப்பிள்ளை (சு.வே) அவர்களின் நினைவுப் பகிர்வு நிகழ்வு
- எனி இந்தியன் பதிப்பகம் நடத்தும் கருத்தரங்கு
- சுவாரஸியம் என்பது என்ன ? அ.முத்துலிங்கத்தின் எழுத்துக்கள்
- புரட்சியும், சிதைவும்
- தமிழ்த்தேசியப் பாவலர் பெருஞ்சித்திரனார் (10.03.1933 – 11.06.1995)
- மருத்துவர் ராமதாஸ் அவர்களின் முயற்சிகள் – பொய்க்கப்போகிற நம்பிக்கை எரிநட்சத்திரங்கள்
- புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி வட்டம்,நெம்மக்கோட்டையில் நல் இனிய இயக்கம் எனும் அமைப்பு.
- இலை போட்டாச்சு – 33 அக்காரவடிசில்
- அதனால் என்ன…
- ஜப்பான் நிலநடுக்கமும், அணுக்கழிவு நீர் வெளியேற்றமும் ! (ஜூலை 17, 2007)
- சுதந்திர தின நாள்
- மண்ணின் பாட்டு
- முந்திரி @ கொல்லாமரம்
- சக்தி சுரபி : உயிரி – சமையல் எரிவாயு கலன் அறிமுகம் – சமையலறைக் கழிவிலிருந்தே சமையல் எரிவாயு
- பத்வா என்றோரு நவீன அரக்கம்
- இந்தியாவின் மணியாண்டுச் சுதந்திர நாள்
- எதிர் எதிர் அணிகள் இணையும் புள்ளிகள்
- பள்ளிகளில் இலக்கியக் கல்வி: வீழ்ந்துவரும் விழுமியங்கள்
- அன்றைய யாழ்ப்பாணச் சமூகத்தில் பெண்கல்வி
- மாத்தா-ஹரி – அத்தியாயம் 23
- முடிவு
- தொடர்நாவல்: அமெரிக்கா! – அத்தியாயம் இருபத்திமூன்று: சட்டத்தரணி அனிஸ்மனின் அலுவலக்த்தை நோக்கி!
- மரணயோகம்
- (பேரங்க நாடகம்) அங்கம்: 8 காட்சி: 11 பாகம் -4 ஆண்டனி & கிளியோபாத்ரா முடிவுக் காட்சி