புறநானூறும் தமிழர் வரலாறும்

This entry is part [part not set] of 37 in the series 20071025_Issue

முனைவர். துரை மணிகண்டன்


“முத்தையும் முத்தமிழையும் மிகுபழங்காலத்திலேயே உலகுக்கு வழங்கியவர்கள் தமிழர்” என்று முனைவர். ந. சஞ்சீவி அவர்கள் தமிழையும் தமிழர்களையும் வியந்து பாராட்டுகிறார். இலக்கியம் காலம் காட்டும் கண்ணாடி என்பர் திறனாய்வாளர்கள். அந்த வகையில் இலக்கியமும் தமிழர் வரலாறும் நீண்ட நெடியது. எனவே இத்தகைய வரலாற்றைப் புறநானூற்றிலிருந்து காண்பதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.

வரலாறு

பொதுவாக வரலாற்றை வரைவதற்கும் கற்பதற்கும் பல முறைகளை முற்கால வரலாற்று ஆசிரியர்கள் பின்பற்றியுள்ளனர். வரலாற்று நூல்களுக்கு இருபெரும் கிரேக்க பெருமக்கள் வரலாற்றுத் தந்தைகள் என அழைக்கப்படுகின்றனர். அவ்விருவருள் ஹெரோடோடஸ் ஜர்நறசழனழனரளஸ திய+சிடைடிஸ் (வுhரஉலனனைநளஸ என்ற பெரியோர் ஆவர். முன்னவர் எழுதிய முற்கால வரலாறு ஜழுடிதநஉஒவiஎநஅநவெஸ அல்லது வரலாற்று நிகழ்ச்சிகள், நடந்தபடியே உண்மைக்கு மாறுபடாமல் தகுந்த ஆதாரங்களுடனும் கால வரைமுறைப் பிறழாமலும் கூறுவதாகும். வரலாறு உண்மைச் செய்திகளை நிகழ்ச்சி நிரல்படக்கூறி மக்களுடைய மன இருளைப்போக்கும் கருவியாக இருத்தல் வேண்டும். ஆனால் ஹேரோடோடஸிற்குப் பிறகு கிரேக்க வரலாற்றை எழுதிய தியூசிடைடிஸ் என்பவர் ளுரடிதநஉவiஎந அநவாழன என்ற முறையில் pநடழிழnநௌழைரள றயச என்ற வரலாற்று நூலை அமைத்தார். அந்நூலில் கிரேக்க நாட்டில் ளியசவநச யுனெ யுவாநளெ என்ற இரு இராச்சியங்களிடையே நடந்த பெரும்போர் நிகழ்ச்சிகளைக் கூறி அப்போர் ஏன் முப்பதாண்டுகள் நடந்தது என்றும் கிரேக்க நாகரீகம் மறைவதற்கு அவை எவ்வாறு காரணமாயிற்று என்றும் காட்டி, வன்முறையை அடிப்படையாகக் கொண்டு நடைபெறும் எல்லா வரலாற்று நிகழ்ச்சிகளும் நாகரீக மக்களின் வாழ்க்கையைச் சீர்கேடு அடையச் செய்கின்றன என்னும் பேருண்மையையும் கற்போர் மனத்தில் பதியும்படி எழுதியுள்ளார். இவ்விருவகை முறைகளும், ஜழுடிதநஉவiஎந யனெ ளரடிதநஉவiஎநஸ இன்றும் வரலாற்றாசிரியர்களால் கையாளப்படுகின்றன.

இவ்விரு முறைகள் அன்றியும் பொருளாதாரத்தை அடிப்படையாகக் கொண்டு வரலாறு எழுதுவதை காரல் மார்க்ஸ் ஜமுயசடஅயசமஸ. தன்னுடைய மூலதனம் ஜஊயிவயடஸ என்ற நூலில் பொருளாதார-வரலாற்று முறையைப் பின்பற்றியுள்ளார். இந்த நூற்றாண்டில் வாழ்ந்து மறைந்த அர்னால்டு தாயன்பி ஜயுசழெடன வுழலnடிநநஸ “வரலாற்று நிகழ்ச்சிகள் உயர் சமயங்களாகிய சைவம், வைணவம், கிறித்துவம், இஸ்லாம் முதலிய சமயங்கள் தோன்றுவதற்குக் காரணமாக இருக்கின்றன என்று தன்னுடைய வரலாற்றுப்படி ஜளவரனல ழக ர்ளைவழசலஸ என்னும் நூலில் கூறியுள்ளார்.

தமிழர் வரலாற்றை எழுதுவதற்கும் அதை நன்கு உணர்வதற்கும் சங்ககால இலக்கியங்களும் முற்கூறப்பெற்ற முறைகளிலும் பின்பற்றி எழுதியுள்ளனர். தமிழ் நாட்டிற்கு வரலாறு இல்லையென்றும், வரலாற்றுனர்விற்கும், தமிழர்களுக்கும் வெகுதூரம் என்றும் மேலை நாட்டு ஆசிரியர்கள் கூறி வந்தனர். தமிழ்நாடு வரலாற்றைச் சங்ககால இலக்கியங்களின் துணைகொண்டு முதல் முதலில் எழுதிய பி.டி. சீனிவாச ஐயங்கார் அவர்ககள் ஐக ஊhசழழெடழபல ளை வாந நலந ழக hளைவழசல ளழரவா ஐனெயைn ர்ளைவழசல அரளவ டிந யவநசயெடடலடிடiனெ என்று கூறினார்.

இவரைத் தொடர்ந்து மனோன்மணீயம் என்ற சிறந்த நாடகத்தை எழுதிய பேராசிரியர் பி. சுந்தரம்பிள்ளை மட்டும் “உண்மையான இந்திய வரலாறு தென்னிந்தியாவில் (தமிழ்நாட்டில்) உள்ள தாமிரபரணி, காவிரி, வைகை, பாலாறு முதலிய ஆறுகள் பாய்ந்து வளம் படுத்திய படுகைகளில் தொடங்க வேண்டுமெனக் கூறியுள்ளார். இதன்மூலம் தமிழர் வரலாறு உலகத்திற்குத் தெரியவரும் என்ற உண்மையைத் தெளிவுப்படுத்தியுள்ளார்.

புறநானூறு

ஓர் இலக்கித்திற்குரிய பண்புகள் எவை என்றால் ‘ஒரு மொழியின் வாயிலாக வாழ்க்கை முறையினை எடுத்துக் காட்டுவது இலக்கியமாகும் என்பார் வறட்சன் ஜர்ரனளழஸெ. ஓர் இலக்கியத்தில் சிறந்த கருத்துக்கள் பொதிந்திருக்கக் காணலாம் என்பார் எமர்சன் ஜநுஅநசளழஸெ. சிறந்த இலக்கியத்தினால் மக்கள் அறிவு கூர்மையடைய அவர் ஞானத்தைப் பெறுவர் என்று ராவில்சன் ஜர்.பு.சுயறஉiளெழஸெ இலக்கியத்திற்கான விளக்கத்தினை விளக்கியுள்ளார். இலக்கியம் மக்களுக்கு நல்லொழுக்கம் புகட்டுவதில் சிறந்த கருவியாகத் திகழவேண்டும் என்று விஸ்கௌன்ட்; மோர்லி ஜஏளைஉழரவெ அழசடடலஸ குறிப்பிடுகிறார். இலக்கியத்தின் மற்றோர் சிறப்பு யாதெனில் அது மக்களுக்கு இயற்கையின் எழில் நலத்தை எடுத்துக்காட்டி அதைப் படைத்த இறைவனின் தன்மையினை நினைவூட்;;டி அவர்களை நல்லாற்றுப் படுத்தும் நெறியாக இருக்க வேண்டும் என்று தாமஸ் கிரே ஜவுhழஅயள ஊயசடலடநஸ என்ற அறிஞர் குறிப்பிடுகிறார்.

மேலே கூறப்பட்ட இலக்கியப் பண்புகள் அனைத்தும் நாம் புறநானூற்றில் காணமுடிகின்றது. புறநானூறு எட்டுத்தொகை நூல்களுள் ஒன்று; சிறப்பானது; சிந்தனைவளம்மிக்கது@ வரலாற்று பெட்டகமமானது. இது புறப்பொருள் பற்றிய 400 பாடல்களை உடையது. 160 புலவர்களால் பாடப்பெற்றது. இதில் பழந்தமிழகத்தை ஆண்ட 15-பாண்டியர்கள், 18 சோழர்கள், 18 சேரர்கள்களைப் பற்றி சிறப்பிக்கிறது. 52 மூவேந்தர்கள் 83 குறுநில மன்னர்களும் குறிக்கப்பெறுகின்றனர். பத்துவகை ஆடைகள், 28 வகை அணிகலன்கள், 30 வகை படைக்கருவிகள், 67வகை உணவு வகைகள் எடுத்தோதப்படுகின்றன. இந்நூல் தமிழர்களின் பண்பாடு, அரசியல் கலாச்சாரம் இவைகளை எடுத்து விளக்கும் நந்தா விளக்கமாகத் திழ்கிறது.

புறநானூற்றில் தமிழர் பண்பாட்டு வளர்ச்சி

சங்க கால நாகரிகம் ஐந்திணைப் பிரிவுகளை அடிப்படையாகக் கொண்டு அந்தந்தத் திணைப்பகுதிகளில் தோன்றிய எதிர்ப்புகளைச் சமாளித்ததனால் குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என்ற நிலப்பகுதிகளில் அந்தந்தப் பகுதிக்கேற்ற நாகரிகங்கள் தோன்றின. இவைகள் ஒன்றோடு ஒன்று இணைந்து தமிழ்ச் சமுதாயத்தை ஒன்றுபடுத்தின. ஒரு நாகரிகத்தின் வளர்ச்சிக் காலத்தில் ஒரு சமுதாயத்தில் அடங்கியுள்ள மக்கள் தொகையை இரு கூறாகப் பிரிப்பர்.

1. வழிகாட்டுவோர் 2. பின்பற்றுவோர்.

வழிகாட்டுவோiரைச் சமுதாயத்தின் தலைவர்கள் எனக் கூறலாம். அவர்களின் எண்ணிக்கையும் சிறியதேயாகும்.

புறநானூற்றில் முடியுடை வேந்தர்களுக்கும், சிற்றரசர்களுக்கும் வழிகாட்டிகளாகவும், அமைச்சர்களாகவும், தூதுவர்களாகவும், மெய்ப்பொருள் உணர்த்தும் தத்துவஞாணிகளாகவும் புலவர்கள் விளங்கியுள்ளனர். அவர்களிடம் பொருள்பெறுவது முக்கிய நோக்கமாயினும், உண்மையைக் கூறிக் கடைமைகளை உணர்த்தியவர்கள் சங்க காலப் புலவர்கள். இப்புலவர்களின் பாடல்களிலிருந்து தமிழ் மக்களின் பண்பாடுகளும் தெளிவுப்டுத்தப்படுகிறது.

அன்பும் நட்பும்,

உலகம் ஓங்கி வாழவேண்டுமானால் அனைவரும் அன்புடன், நட்புடன்;, இணக்கத்துடன் வாழவேண்டும். எங்கு அன்பும் நட்பும் இல்லையோ அங்கு கலகம் வெடிக்கும் இதைத் தமிழர் நன்கு உணர்ந்து இருந்துள்ளனர். எனவேதான் தமிழ் மக்கள் ஒருவருக்கொருவர் உயிரை விடுவதற்குரிய பண்புடையவர்களாக இருந்துள்ளனர். பிசிராந்தையார். பொத்தியார் என்ற இரு புலவர்கள் கோப்பெருஞ்சோழனுடன் மிகுந்த நட்புக்கொண்டு அவர் வடக்கிருந்து உயர்விடத் துணிந்தபோது தாங்களும் வடக்கிலிருந்து உயிர்விடத் துணிந்தோர். ஜபுறம் – 215,216,222ஸ.

இவ்விருவருள் பிசிராந்தையாரின் அன்புடைமைப்பற்றிக் கோப்பெருஞ்சோழன்,

தென்னம் பொருப்பன் நன்னாட் டுள்ளும்

பிசிரோன் என்பன் உயிரோம் புநனே

செல்வக் காலை நிற்பினும்

அல்லற் காலை நில்லான் மன்னே ஜபுறம் – 215ஸ

என்று கூறிய சொற்கள் மூலம் சங்ககால தமிழ்ச் சமுதாயம் அன்புடைமை என்னும அடிப்படையில் அமைந்திருந்ததை உணரமுடிகின்றது.

ஆதனுங்கன் என்ற குறுநில மன்னனிடம் கள்ளில் ஆத்திரையனார் என்ற புலவர் மிக்க அன்பு கொண்டிருந்தார். அவருடைய அன்பு எத்தகையது என்பதனை அப்புலவரே பின்வருமாறு வெளிப்படுத்துகிறார். இறைவா நீ எப்பொழுதும் என் நெஞ்சில் இடம் பெற்றுள்ளாய். என் நெஞ்சை யாராவது திறந்து பார்த்தால் அதனுள் உன்;னையே காண்பர். நான் உன்னை எப்பொழுதும் மறக்கமாட்டேன். என்னுயிர் என் உடம்பைவிட்டுப் பிரிந்துபோகும் காலத்தில் தான் உன்னை நான் மறந்துவிடமுடியும்”இ

“எந்தை வாழி யாத னுங்காவன்

நெஞ்சற் திறப்போர் நிற்காண் குவரே

நின்னியான் மறப்பின் மறக்குங் காலை

என்னுயிர் யாக்கையின் பிரியும் பொழுதும்

…………………………… புறம்’ 175

என்று புலவன் தான் எவ்வாறு மன்னன்மேல் அன்பு வைத்திருந்தான் என்பதையும் தமிழர் அன்புநெறி பேணுபவர் என்பதையும் இப்பாடல் மூலம் காணமுடிகிறது. இவைபோன்று புறநூனூற்றில் பாலப்பாடல்கள் அன்பும் நட்பும் குறித்து பேசுகிறது.

தமிழர் வாழ்வியல்

புறநானூற்றில் தமிழ் மக்கள், மன்னர்கள், புலவர்கள் எவ்வாறு வாழ்ந்துள்ளனர். ஒழுக்க நெறியோடும், உயர்வானவர்களாகவும் வாழ்ந்து சென்றுள்ளனர். ஒரு நாடு, அல்லது அம்மக்களைப் பற்றிய செய்திகளையோ அல்லது வரலாற்றையோ நாம் அறிந்து தெரிந்து கொள்ள வேண்டுமெனில் அவர்களின் வாழ்வியல் ஆதாரங்களைக் கொண்டு முடிவு செய்யலாம்;.

தன்னலம் கருதாது நாட்டு மக்களின் நலத்தைக் கருதுவதும் சங்ககாலப் புலவர்களின் நோக்கமாக இருந்துள்ளன. என்பதற்குப் புறநானூற்றில் பல சான்றுகள் உள்ளன. சங்ககால தமிழ் மக்களுக்கு நல்வழி காட்டுவோராக இருந்தும் திகழ்ந்துள்ளனர். அவர்களுள் பாண்டியன் கடலுள்மாய்ந்த இளம்பெருவழுதி.

உண்டால் அம்ம இவ்வுலகம், இந்திரர்

அமிழ்தம் இயைவ தாயினம் இனிதெனத்

தமியர் உண்டலும் இலரே, முனிவிலர்

…………….………………………….

பிறர்க்கென முயலுநர் உண்மை யானே (புறம் 182)

என்ற செய்யுள் உலகப் பேரறிஞர்களும் வழிகாட்டிகளும் சேர்ந்து எடுத்துக் கூறும் புகழத்தக்க ஒரு சொல்லோவியமாகும். கௌதமபுத்தர், இயேசுகிறிஸ்தும், காந்தியடிகள், ஆபிரகாம் இலிங்கன் முதலிய பெரியோர்களுக்கும் ஏற்றதொரு கவியாகும். சங்க காலத்தில் வாழ்ந்த புலவர்கள் இலாபத்தை எதிர்பார்க்காது சமூகத்திற்கு உதவ வேண்டும் எனக் கருதினர். இம்மையிலும் மறுமையிலும் கிடைக்கக்கூடிய பலன்களை எதிர்பார்த்து அறத்தை விலைப்பொருளாகக் கொள்ளக்கூடாது என்னும் கருத்தை உட்கொண்டு உறையூர் ஏணிச்சேரி முடமோசியார் என்பார்,

இம்மைச் செய்த மறுமைக்கு ஆம் எனும்

அறவிலை வணிகன் ஆயலன் பிறரும்

சான்றோர் சென்ற நெறியென

ஆங்குப் பட்டன்று அவன்னகவன் மையே (புறம் – 134)

என்று கூறுவார். இதனால் சங்க காலத்தில் வாழ்ந்தோர் தாம் ஒருவருக்கு ஓர் உதவி செய்யும்போது, மறுமைப்பயனை எதிர் பார்க்கவில்லை. அறத்தை விலைக் கொடுத்து வாங்கும் அறவிலை வணிகர் அல்லர் என்பது புலனாகும். எனவே பண்டையத் தமிழர்கள் வாழ்வியல் நெறிகளில் செம்மையாக பயனித்துள்ளனர்.

தமிழர்களின் அரசியல்

தமிழர்களின் வரலாற்றில் பண்பாடும், வாழ்வியலும் எவ்வளவு முக்கிமானவையோ அதனைப் போன்று அரசியலும் நிலைபெற்றிருந்துள்ளது.

இக்காலத்தில் உயர்ந்து விளங்கும் குடியாட்சியின் (னுநஅழநசயஉல) சிறப்புக்கூறுகள் பலகொண்டதாகப் பழந்தமிழகத்தில் விளங்கிய அரசின் நிலை காணப்படுகின்றன. பெண்கொலை புரிந்த நன்னன் போன்ற சில கரும்புள்ளிகள் காணப்பட்டாலும் “மன்னன் உயிர்த்தே மலர்தலை உலகம்” ஜபுறம் – 186-2ஸ என மதித்து மன்னைப் போற்றிய மக்களையும்,

“அறனிலை திரியா அன்பின் அவையத்துத்

திறனில் ஒருவனை நாட்டி முறைதிரிந்து

மெலிகோல் செய்தே னாகுக” (புறம் – 71)

என்றும்,

என்னிழல் வாழ்நர் சென்னிழல் காணாது

கொடியன் எம்இறையெனக் கண்ணீர் பரப்பிக்

குடிபழிதூற்றும் கோலோன் ஆகுக” (புறம் – 72)

என்ற வஞ்சினம் மொழியும் நெஞ்சுரம் சான்ற மன்னர்களையும் கொண்ட முடியாட்சியாக அன்றைய ஆட்சி விளங்கியது. மன்னன் ஆட்சியில் நோய்நொடி நீங்க வழிவைகை செய்துள்ளான். நாட்டு மக்கள் அனைவரும் கல்வி கற்க வேண்டும் என்ற உயர்ந்த எண்ணத்தையும்;

உற்றுழி உதவியு முருபொருள் கொடுத்தும்

பிற்றைநிலை முனியாது கற்றல் னன்றே (புறம் – 183)

என்று பாண்டியன் ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியன் மக்களை வழியுறுத்தியுள்ளான்.

இவ்வாறான அரசியல் வரலாறுகளும் புறநானூற்றின் வழி அறியலாகும் தமிழர்களின் வரலாறாகும்;. புறநானூறு இந்திய வரலாற்றோடு தொடர்புடைய சில கூறுகளையும் வெளிப்படுத்துகிறது. கி.மு. 1000தைச் சார்ந்த உதியன சேரலாதன் பாரதபோரில் உணவு கொடுத்ததை முரஞ்சியூர் முடிநாகனார் (புறம்-2) பாராட்டியுள்ளார். பாண்டவர்களுக்கும் தமிழராசர்க்கும் தொடர்பிருந்தது என்பதனைப் பாலைக் கௌதமனார் தருமபுத்திரருக்கு அறிவுறுத்தியச் செய்தி 366-ஆம் பாட்டில் இடம்பெற்றுள்ளது. வான்மீகியார் பாட்டு (358) ஒன்றும் உள்ளது. கி.மு. 4-ஆம் நூற்றாண்டைச் சார்ந்த அரசன் நெடியோன் கரிகாலன் (கி.பி.1) நெடுமுடிக்கிள்ளி (கி.பி.2) மாவளத்தான் போன்றவர்கள் பற்றிய அரிய பல வரலாற்றுச் செய்திகளையும் அள்ளித்தந்திருக்கின்றன.

வரலாறு ஒவ்வொரு சமயத்திற்கும், நாட்டிற்கும், மக்களுக்கும் தேவை. புறநானூற்றில் வழி தமிழர் வரலாறு என்னும் தலைப்பில் வரலாற்றின் தோற்றமும் வரலாற்றாசிரியர்களின் இயல்பும்; போக்கும் எடுத்து விளக்கப்பட்டுள்ளது. இலக்கியம் என்றால் என்ன? என்ற வினாவிற்கு பல அறிஞர் பெருமக்கள் கொடுத்த கருத்துக்களில் உட்பட்டு புறநானூறு அமைந்துள்ளது. புறநானூற்று வழி தமிழர்களில் பண்பாடு, நாகரீகம் வளர்ச்சியடைந்துள்ளன. இஃது அன்பும் நட்பும் என்ற தலைப்பில் விரித்துரைக்கப்பட்டுள்ளது. தமிழருடைய வாழ்வியல் அனுகுமுறைகளும், அவர்களின் அரசியல் செயல்பாடுகளையும் வைத்து தமிழர்களின் வரலாற்றை விளக்கிக்காட்டியுள்ளது. அமெரிக்க பல்கலைக்கழகத்தில் தமிழ் பேராசிரியராகப் பணியாற்றும் திரு. ஜார்ஜ் எல். ஹார்ட் (துயசஉh.டு.ர்யசவ) என்பவர் “உலக இலக்கியங்களில் எத்தனையோ வரலாற்று நூல்களைப் படித்துள்ளேன். ஆனால் புறநானூறு மட்டும்தான் பல வரலாற்றுக் கருத்துக்களை எடுத்தோதும் ஒரே நூல்” என்று தனது யு குழரச hரனெசநன யனெ ளழபெ யனெ றயச என்ற நூலில் குறிப்பிட்டுள்ளார். இஃது ஒன்றே புறநானூற்றின் வரலாற்றுக்கு நந்தா விளக்காக அமைந்திருக்கிறது என்பதில் நாமெல்லாம் பெருமைப்பட்டுக் கொள்ளவேண்டும்.

துணை நின்ற நூல்கள் :

1. ச. வையாபுரிப் பிள்ளை,

சங்க இலக்கியம் (பாட்டும் தொகையும்)

பாரிநிலையம் – சென்னை – 1967.

2. டாக்டர். ஊ.வே.சா.

புறநானூறு மூலமும் உரையும்

சென்னை லா.ஜர்னல் அச்சுக்கூடம்

சென்னை-1935.

3. பேராசிரியர் மது.ச. விமலானந்தம்

தமிழ் இலக்கிய வரலாற்றுக் களஞ்சியம்

ஐந்திணைப் பதிப்பகம் – சென்னை – 1987.

4. பூ. ஆலாலசுந்தநன் கட்டுரை விருந்து, சென்னை-1947.

5. முனைவர் கு. ராசரத்தினம் சங்க இலக்கியத்தில் பொது மக்கள் –

திருவாரூர், 2004

கட்டுரை நூல்கள்

1. சங்க இலக்கியக் கட்டுரைகள் தமிழ்ப் பல்கலைக்கழகம் தஞ்சாவூர்–1984.

ஆங்கில நூல்கள்

1. Dr. K.K. Pillai – A Social History of the Tamils.

2. Dr. K.A. Nilakanta Sastri – A History of south India – 1972.

3. Dr. N. Subramanian – History of Tamil Nadu, Madurai – 1972.

இணைய இதழ்

1. www.Thinnai.com.

2. www. Pathivukal.com


gunama73@yahoo.co.in

Series Navigation

முனைவர் துரை. மணிகண்டன்

முனைவர் துரை. மணிகண்டன்