புதுக்கவிதைகள்!
கரு.திருவரசு

மதுக்கலயங்கள் இதழ்களிலெல்லாம்
மறுபடி மறுபடி முத்தமிட்டேன்!
புதுச்சுவையங்கே எதுவுமில்லையே
புளித்துச் சலித்து விட்டுவிட்டேன்!
மதுக்கவிதைகள்! மயன்உலகங்கள்!
மறுபடி மறுபடி பிறந்துவரும்
புதுக்கவிதைகள் பாரதிகவிதைகள்!
படிக்கப் படிக்கப் புதுக்கவிதைகள்!
thiruv@pc.jaring.my