பட்டாம்பூச்சி வாழ்க்கை

This entry is part [part not set] of 35 in the series 20100801_Issue

ஸ்ரீ================
விளையாட்டு பிள்ளைன்னு சொல்லி
விடியல்ல ஸ்கூலுக்குனுப்பி
எம்மகன் எஞ்சினியர்ன்னு
எங்கப்பா முடிவு செஞ்சி

கல்யாணம்
கட்டி முடிச்சி
மணவாழ்க்கையில
முங்கி குளிச்சி

பிள்ளைங்கள
படிக்க அனுப்பி
அவங்க
பெரிசானதும் பெருமபட்டு

மகள
மாமியார் வீட்டுக்கனுப்பி
என் மனைவிய
மாமியாராக்கி

இப்ப
திண்ணையில சேர் போட்டு
தூங்கலாம்னு நினைக்கையில
பேட் புடிச்சி விளையாட
என் பேரன் என்ன
கூப்பிடுதான் !!!

Series Navigation

ஸ்ரீ

ஸ்ரீ

பட்டாம்பூச்சி வாழ்க்கை

This entry is part [part not set] of 26 in the series 20011015_Issue

கோகுல கிருஷ்ணன்.


பட்டாம்பூச்சியாய் வாழ்வதில்
பயன் என்ன இருக்கிறது..
தலை சாய்த்துத் துயில்கொள்ள
தாயின் மடியுண்டா
தவழ்ந்து விளையாட
தந்தையின் மார்புண்டா
மதிப்பெண்ணால்
மதியளக்கும் கல்வியுண்டா
சிாித்துக் குலாவி
சிந்தை மகிழ நண்பர்களுண்டா
இதயம் வருடும்
இசை கேட்க வழியுண்டா
சினிமாச் சுகமுண்டா
சின்னத்திரைத் தொடர்களுண்டா
இன்பம் துய்த்திட
இலக்கியச் சாறுண்டா
விரல் நுனியில்
ஞாலம் வலம் வர
இணையம் உண்டா
நல்வழி காட்டிட
நாற்பது மதங்களுண்டா
கவலைகள் முறையிட
கடவுள்கள் உண்டா
ஏதுமற்ற வெற்று வாழ்வல்லவா..
என்றாலும் என்ன..
பட்டாம்பூச்சிக்குத்தானே வாய்த்திருக்கிறது
பூவிலமர்ந்து மதுவுண்ண.

Series Navigation

கோகுல கிருஷ்ணன்.

கோகுல கிருஷ்ணன்.