நிசத்திற்கும் நடைமுறைக்கும் இடையே
ராமலிங்கம் சந்திரமௌலி
தேங்கிக் கிடக்கும்
மழை நீரில்
காகிதக் கப்பல் விட்டு
கரை சேர ஆசை
நிலா முற்றம் மட்டுமே
உலா வரும் பெண்ணை
கை கோர்த்து
நீண்ட கடற்கரை வெளியில்
நடத்திச் செல்ல ஆசை
கனக ராயன் குளத்தில்
தாய் தந்தை பார்க்கும்
பெண்ணையும் மணம் முடிக்க ஆசை
ரஜினியுடன் கைகோர்த்து
இமாலயம் செல்ல ஆசை
கமலுடன் அமர்ந்து
நாத்திகம் பேசவும் ஆசை
லயமின்றி ஊர் சுற்ற ஆசை
பயம் கொண்டு
கோவில் சுற்றவும் ஆசை
நிசம் மறந்து
இசம் பேச ஆசை
புழல் நினைத்து
உள்ளடங்கும் ஓசை
நிசத்திற்கும் நடைமுறைக்கும் இடையேயான
முரண்பாடுதான் வாழ்க்கை என்ற
சிந்தனையில் பிறந்தது
இந்த வார்த்தை