நாடுகளில் மக்கள்தொகைப் பெருக்கம் நிலப் பற்றாக்குறைக்கு இட்டுச்செல்கிறது

This entry is part [part not set] of 44 in the series 20030209_Issue

ஜேனட் லார்சன்

(மொழி பெயர்ப்பாளர் குறிப்பு : இந்தக் கட்டுரையில் நில உபயோக விகிதங்கள் தரப்பட்டுள்ளன. இந்த விகிதங்கள் நில உடைமை விகிதங்கள் அல்ல. நிலப் பயன்பாடு , மொத்த ஜனத்தொஇகைக்கு என்ன விகிதத்தில் உள்ளது என்பதே இந்த விகிதம். உதாரணமாக ஜனத்தொகை இருமடங்கானால், உபயோக நிலமும் இரு மடங்கானால் தான் இந்த உபயோக விகிதம் முன் போலவே இருக்கும். விவசாய நிலம் ஜனத்தொகை அளவுக்கு விரிவு பெறவில்லை என்றால், தனிநபருக்கான விவசாய நிலப் பயன்பாட்டு விகிதம் குறையும்.)

விவசாயம் என்பது தோன்றிய காலத்திலிருந்து இருபதாம் நூற்றாண்டுவரை, உலகத்தின் உணவு உற்பத்தி என்பது பெரும்பாலும் விவசாய நிலங்களை அதிகரிப்பதன் மூலமே வந்திருக்கிறது. 1950லிருந்து 1981 வரை, 587 மில்லியன் ஹெக்டேர்களிலிருந்து 732 மில்லியன் ஹெக்டேராக விவசாய நிலம் உயர்ந்தது. (ஒரு ஹெக்டேர் என்பது 2.47 ஏக்கர்கள்) 2000த்தில் இது 656 மில்லியன் ஹெக்டேராக குறைந்தது. ஆனால், உலக மக்கள்தொகை, 1950ஆம் வருடத்தில் 2.5 பில்லியனிலிருந்து, 2000த்தில் 6.1 பில்லியனாக அதிகரித்திருக்கிறது. இதனால் பயிர்நிலம் ஒரு மனிதனுக்கு 0.23 ஹெக்டேரிலிருந்து 0.11 ஹெக்டேராக குறைந்திருக்கிறது.

உலகத்தின் பயிர்கள் உற்பத்தி செய்யும் விவசாய நிலம் அதிகரிக்க வாய்ப்பில்லை. தான்யங்களின் மிகக்குறைந்த விலைகள் பல விவசாயிகளை தங்களுடைய விளிம்புநிலை விவசாய நிலங்களிலிருந்து வெளியேறவும், பலர் தரிசாகப் போன நிலங்களை விட்டு வெளியேறவும் காரணமாகியிருக்கிறது. கூடவே, பல மில்லியன் ஹெக்டேர்கள் விவசாய நிலங்களிலிருந்து புறநகர் குடியிருப்புப்பகுதிகளாக ஆகியிருக்கின்றன.

விவசாயத்திற்கு தகுதியுடைய நிலங்கள் ஒரு குறிப்பிட்ட அளவே இருக்கும் நாடுகளில், வேகமாக வளரும் மக்கள்தொகையினால் இந்த சராசரி தனி நபர் நிலவுடமையின் அளவு வெகுவிரைவாக குறைகிறது. உணவு பற்றாக்குறைக்கும் இந்த நில உபயோகச் சரிவுக்கு இட்டுச்சென்றுவிட்டது. உணவு தான்யங்களை இறக்குமதி செய்ய முடிகிற அளவுக்கு பணம் படைத்திருக்கிற நாட்டின் அரசாங்கங்கள், ஒரு மனிதனுக்கு தேவையான கலோரிகளில் பாதி அளவை இறக்குமதி மூலமே பெறுகின்றன. இறக்குமதி செய்ய இயலாத நாட்டு மக்கள் பசியோடு வாழ்கிறார்கள்.

விவசாய நிலம் பற்றாக்குறை காரணமாக பல ஆசிய நாடுகள் தங்களது தான்யத்தேவையை இறக்குமதி மூலம் சரிக்கட்டுகின்றன. மலேசிய விவசாயிகள் சராசரியாக , ஒரு மலேசியக் குடிமகனுக்கு 0.03 ஹெக்டேர் என்ற விகிதத்தில் தான் குறுகிய நிலப்பரப்பில் விவசாயம் செய்கிறார்கள். ஜப்பான், தெற்குக்கொரியா தாய்வான் போன்ற நாடுகள் ஒரு குடிமகனுக்கு சுமார் 0.02 ஹெக்டேர் அளவே விவசாயம் செய்கிறார்கள். உற்பத்தி பற்றாக்குறையை சரிக்கட்ட இவர்கள் அவர்களுக்குத் தேவையான தான்யங்களில் 70 சதவீதத்தை இறக்குமதி மூலமே சரிக்கட்டுகிறார்கள். இதனால், அவர்களுக்கு ஏற்றுமதி செய்யும் நாடுகளின் தயவிலேயே வாழவேண்டிய நிர்ப்பந்தம்.

எகிப்து இந்தப் பற்றாக்குறைக்கு மிக அருகில் வந்துவிட்டது. இது 0.04 ஹெக்டேர் சராசரி நிலப்பரப்பிலேயே, 70 மில்லியனாக இருக்கும் தன் குடிமக்கள் ஒவ்வொருவருக்கும் விவசாயம் செய்கிறது. தன்னுடைய தான்யத்தேவையில் சுமார் 40 சதவீதத்தை இறக்குமதி மூலம் பெறுகிறது. நைல் ஆற்றின் தண்ணீர் முழுவதும் உபயோகப்படுத்தப்படுவதாலும் அதன் மக்கள்தொகை வருஷத்துக்கு 1 மில்லியன் அதிகரிப்பதாலும், இதன் இறக்குமதி நிச்சயம் அதிகரிக்கவே செய்யும்.

உலகத்தின் வருடாந்தர மக்கள்தொகை அதிகரிப்பான 77 மில்லியனில் பாதி அளவு பெருக்கம் வெறும் ஆறு நாடுகளிலேயே நடக்கிறது. இந்தியா, சீனா, பாகிஸ்தான், நைஜீரியா, பங்களாதேஷ் , இந்தோனேஷியா தான் இந்த ஆறு நாடுகள். இவை ஒவ்வொன்றிலும், வேகமாகக் குறையும் விவசாய நிலங்களும், இறக்குமதியை நம்பியிருக்கும் நிலையும் தீவிரமாகி வருகிறது. இது இரண்டு கேள்விகளை முக்கியமாக்குகிறது. இஇந்த நாடுகளில், நிலப்பசி அதிகரிக்கும்போது, அதிக அளவு தான்ய இறக்குமதியை செய்யமுடியுமா ? தான்ய உற்பத்தியாளர்களால் இந்த அதிகப்படி தேவையை ஈடு கட்டமுடியுமா ?

இந்தியாவில் நான்கில் ஒருவர் வயிறு நிரம்ப சாப்பிடாதவராக இருக்கிறார். மேலும் 16 மில்லியன் மக்கள் ஒவ்வொருவருடமும் மக்கள்தொகையில் சேர்க்கப்பட்டுவருகிறார்கள். ஒருவருக்கு இருக்கும் விவசாய நிலம் தொடர்ந்து பல ஆண்டுகளாக குறைந்துவருகிறது. இது இன்று 0.10 ஹெக்டேராக குறைந்துவிட்டது. இது 1950ஆம் வருடத்து இருப்பில் பாதி. பல நில உடமைகள் ஒவ்வொரு சந்ததியிலும் பிரிந்து பிரிந்து, 1960இல் 48 மில்லியன் பண்ணைகள் சுமார் 2.7 ஹெக்டேர் நிலப்பரப்புடன் இருந்தது, 1990இல் 105 மில்லியன் பண்ணைகளாக பிரிந்து, அதன் அளவு சராசரி 1.6 ஹெக்டேராக குறைந்துவிட்டது. சராசரி இந்தியக்குடும்பத்தில் 3 குழந்தைகள் இருக்கிறார்கள். எதிர்காலத்தில் தோண்றும் மக்கள்தொகைப் பெருக்கத்துக்கு சரியான அளவு நிலப்பரப்பு உணவு கொடுக்கப்போதுமானதாக இல்லை.

பாகிஸ்தானில் ஒரு குடும்பத்துக்கு சுமார் 5 குழந்தைகள் இருக்கிறார்கள். இதன் மக்கள்தொகை இன்னும் அதிக வேகத்தில் வளர்கிறது. 1988இல் பாகிஸ்தானின் தேசிய விவசாய கமிஷன் வெளியிட்ட அறிக்கையில், நிலப்பிரிப்பு காரணமாகவும், விளிம்புநிலை விவசாய நிலங்களை நம்பியிருப்பதன் காரணமாகவும் விவசாய உற்பத்தி வெகு வேகமாகக் குறைந்துவருகிறது என்று கூறுகிறது. அப்போது 1988இல் 100 மில்லியனாக இருந்த மக்கள்தொகை இன்று 150மில்லியனாக உயர்ந்திருக்கிறது. இன்று ஒரு பாகிஸ்தானியருக்கு இருக்கும் சராசரி விவசாய நிலம் 0.09 ஹெக்டேர்களே.

சீனாவில் இன்னும் அதிகவேகமாக குறைந்து இந்த ஒருநபருக்கான விவசாய நிலம் 0.07 ஹெக்டேர்களைத் தொட்டுவிட்டது. இது 1950இல் 0.17 ஹெக்டேர்களாக இருந்தது. பணப்பயிர்களுக்கு (பழங்கள், காய்கறிகள்) விவசாயத்தைத் திருப்பியதன் காரணமாகவும், விவசாயப்பண்ணைகளை காடுகளாக ஆக்கியதன் மூலமாகவும், கட்டடங்கள் சாலைகள் போன்றவற்றுக்கு விவசாய நிலங்களை தந்ததன் காரணமாகவும் இந்த விவசாய நிலம் சுருங்கியது.

1850இல் உலக மக்கள்தொகை எவ்வளவு இருந்ததோ அதி இன்று சீனாவின் மக்கள்தொகையாய் இருக்கிறது. அதாவது 1.3 பில்லியன் மக்கள். இன்னும் 50 வருடங்களில் இன்னும் 187 மில்லியன் மக்களை தன் மக்கள்தொகையோடு இணைக்கும் என சீனா கணக்குப்போடுகிறது. சீனாவின் பொருளாதாரம் வலிமையாக இருப்பதால், நிறைய தான்யங்களை இறக்குமதி செய்யலாம் என்று சீனா கணக்குப்போடுகிறது. ஆனால், இவ்வளவு அதிகத்தேவையின் காரணமாக விலை அதிகரிக்கும் தான்யங்களை எப்படி வாங்க இயலும் எனத்தெரியவில்லை.

சஹாரா சார்ந்த ஆப்பிரிக்க நாடுகளில் ஏற்கெனவே விவசாய நிலங்கள் குறைவு. அதன் காரணமாக அந்த நாடுகளின் மக்கள்தொகைப் பெருக்கத்துக்கு எதிர்த்திசையில் விவசாய நிலம் குறைந்திருக்கிறது. உதாரணமாக, நைஜீரியாவில் 1950லிருந்து இதுவரை மக்கள்தொகை நான்கு மடங்கு அதிகரித்திருக்கிறது. அதன் விவசாய நிலம் இரண்டு மடங்காக அதிகரித்தது. இருப்பினும் மக்கள்தொகை பெருக்கம் காரணமாக ஒரு நபருக்கான விவசாய நிலம் பாதியாகக் குறைந்திருக்கிறது. வட நைஜீரியாவில் சஹாரா பாலைவனம் காடுகளையும் விவசாய நிலங்களையும் அபகரித்துவருவதால் (வருடத்துக்கு 350,000 ஹெக்டேர்கள் சஹாரா பாலைவனத்தால் விழுங்கப்படுகின்றன.) துரத்தப்படும் விவசாயிகளும் ஆடுமாடு மேய்ப்பவர்களும் தெற்கு நைஜீரியாவில் குழுமுகிறார்கள். இது இனக்கலவரங்களுக்கு காரணமாக ஆகிறது.

ர்வாண்டா நாட்டின் அனுபவம் நிலப்பற்றாக்குறையின் காரணமாக வரக்கூடிய தீவிரவிளைவுகளுக்கு கட்டியம் கட்டிச் சொல்கிறது. 1950லிருந்து 1990வரை ரவாண்டாவின் மக்கள்தொகை 2.1 மில்லியன் மக்களிலிருந்து 6.8 மில்லியன் மக்களாக உயர்ந்தது. ஒரு நபருக்கான விவசாய நிலம் 0.03ஆக குறைந்தது. ர்வாண்டாவின் விவசாய மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சராக இருந்த ஜேம்ஸ் காஸானா அவர்கள், வெகுவேகமான மக்கள்தொகைப் பெருக்கம் நில சிதறலுக்கும், நில வளமை குறைவதற்கும், காடுகள் அழிப்புக்கும், பஞ்சத்துக்கும் காரணமாக ஆகியிருக்கிறது என்று 1990-92இல் குறிப்பிட்டு உள்ளார். இந்த உணவு பற்றாக்குறை இனக்கலவரத்துக்கு இட்டுச்சென்று, உள்நாட்டுப்போராக வெடித்து 1990இல் கலவரமாகத்தோன்றி, 1994இல் மாபெரும் இனப்படுகொலைகளுக்கு வித்திட்டது. இதில் 800,000 மக்கள் கொல்லப்பட்டார்கள். காஸானா அவர்கள் இந்த இனப்படுகொலைகள் நடந்த இடத்தில் உணவும் மிகவும் குறைவாகவே இருந்தது என்று குறிப்பிட்டுக்காட்டுகிறார்.

பான் ஆஃப்ரிகன் நியூஸ் ஏஜென்ஸி, 2000த்தில் நடத்திய நில ஆராய்ச்சியை விவாதித்து, ‘ர்வாண்டா: நிலப்பற்றாக்குறை சமாதான பேச்சுக்களை நிறுத்தலாம் ‘ என்று தலைப்பு செய்தி கொடுத்தது. இந்த பகுதியின் மக்கள்தொகை இன்று 8.1 மில்லியனாக மீண்டும் அதிகரித்துவிட்டது. சராசரி குடும்பத்தில் 6 குழந்தைகள் இருக்கிறார்கள். நிலத்தின் மீது அழுத்தம் அதிகரித்துவிட்டது.

இன்னும் 50 வருடங்களில் உலகத்தின் மக்கள்தொகை 3 பில்லியன் அதிகரிக்கும். இந்த மக்கள்தொகை பெருக்கம் ஏற்கெனவே விவசாய நிலம் குறைவாக இருக்கும் பகுதிகளிலேயே அதிகம் இருக்கும். உலகத்தின் விவசாயநிலம் இதே அளவு இருக்கும் பட்சத்தில், 9 பில்லியன் மக்கள் 2050இல் ஒருவருக்கு சுமார் 0.07 ஹெக்டேரே கிடைக்கும். இது பங்களாதேஷ், பாகிஸ்தான், ஆஃப்கானிஸ்தான் போன்ற நாடுகளில் ஒருவருக்கு கிடைக்கும் நிலத்தைவிட குறைவான அளவு.

2050ல், இந்தியாவிலும் நைஜீரியாவிலும் 0.06 ஹெக்டேர் நிலமே ஒரு ஆளுக்கு இருக்கும். சீனா, பாகிஸ்தான் பங்களாதேஷ், எதியோப்பியா போன்ற நாடுகளில் இதற்கும் குறைவாகவே நிலம் அங்கங்கு இருக்கும். இது 0.04-0.05 ஹெக்டேர் ஒரு ஆளுக்காக குறையும். எகிப்தும் ஆஃப்கானிஸ்தானும் இன்னும் குறைவாக 0.02 ஹெக்டேராக இருக்கும். யேமன், காங்கோ, உகாண்டா ஆகியவைகளில் 0.01 ஹெக்டேர்களே இருக்கும். உணவு ஏற்றுமதி செய்யும் நாடுகளில் இருக்கும் நிலையை ஒப்பிட்டுப்பார்த்தால் இதன் நிலைமை புரியும். இந்த உணவு ஏற்றுமதி நாடுகளில் யேமன் நிலையைவிட 20 மடங்கு அதிகமாக ஒரு ஆளுக்கு விவசாய நிலம் இருக்கிறது.

ஏற்கெனவே விவசாயம் செய்யக்கூடிய நிலங்கள் விவசாய நிலங்களாக இருக்கும் இந்த நேரத்தில், இருக்கும் விவசாய நிலங்களும் புறநகர் குடியிருப்புகளாகவும், மற்ற காரியங்களுக்கும் பயன்படும் நிலங்களாக மாறிகொண்டிருக்கும் காலத்தில், உலகத்தின் தான்ய உற்பத்தி குறைந்து கொண்டே போகும் என்றே தோன்றுகிறது. அதே நேரத்தில் 1950இல் இருந்த விவசாய உற்பத்தி திறன் அதிகரிப்பு 2 சதவீதத்திலிருந்து, 1990இல் 1 சதவீதமாக குறைந்துவிட்டது. இது உலகத்தின் மக்கள்தொகை பெருக்கத்தின் வேகத்தை குறைக்க வேண்டிய அவசியத்தை வலியுறுத்துகிறது.

http://www.earth-policy.org/Updates/Update21.htm

Series Navigation