தொலைந்து போனவன்

This entry is part [part not set] of 42 in the series 20030615_Issue

மீ.வசந்த், சாத்தூர்.


எங்க ஊரு
செட்டியார் கட
இட்டிலி
கோவில்பட்டி வர
பசியாத்தும்.
ஆசையா போயி
உக்காந்து சாப்புட்டா
அஞ்சு பேரு
என்னையே பாக்காக!,
அங்குட்டு போயி
குசு குசுன்னு பேசுறாக.

பைக்கு பஞ்சராச்சேன்னு,
வாடக சைக்கிள்ள
ஊருக்குள்ள போய்ட்டேங்க,
எதுக்க வர்ரவகெல்லாம்
வித்யாசமா மொரெக்காக!
ஏன் தம்பி
நீங்க போயி
சைக்கிள்ளனு கேக்காக.

அன்னிக்கு
ஒரு நாளு
அவசரமா கிளம்பறப்போ,
அசிங்கமான சட்டயொன்னு
போட்டுட்டு போய்டேங்க.
பாக்குர பயலெல்லாம்
ஒன்னா சேந்து…,
அவனுகளுக்குள்ள
சொல்லிக்கிட்டாங்க
‘அமெரிக்கா சட்ட
அமெரிக்கா சட்ட தான்லே!! ?
எவனுக்கும்
தெரிய மாட்டேங்குது,
அது நம்மூரு முக்குராந்தல்ல
வாங்குனதுன்னு!!!.

சாமி கும்பிட்டா
நல்லதுன்னு
கோவிலுக்கு போனா,
பூசாரி
முன்ன வந்து
என்ன கும்புடராரு.
கெளம்புரப்போ…
மெதுவா வந்து
ஒரு
அம்பது ரூபா
கேக்காரு! ?

பொண்ணுங்க யாராவது
போன் செஞ்சாக்க…
அம்மா எதயும்
சொல்லுறது இல்லீங்க! ?
எவளயாவது
இழுத்துட்டு போய்டுவேன்னு
சந்தேகம் போல.

ஏலக்கா
டாக்கட போயி…,
டாயொன்னு சொன்னாக்க,
எனக்கு மட்டுந் தர்ராக
புதுசா வாங்குன
எவர்சில்வரு தம்ளருள.

சந்தைக்கு பக்கத்துல
குட்டியூண்டு வண்டியில,
காச்சிக் கொடுக்குற
கம்மங்கூழு,
நல்லாத்தாங்க இருந்துச்சு.
வீட்டுக்கு வந்தாக்க
அண்ணங் கத்துரான்,
‘உனக்கு காச்சல் வந்துரும்னு ‘

ஊர்த்திருவிழா
பாக்கப் போனா,
வெச்சுருக்குற…
கேமராவ சுத்தி
பத்துப்பேரு நிக்காக.
புலி வேஸம்
போட்டாடுற சிலம்பாட்டத்த..,
குதுச்சு குதுச்சு
பாத்தேங்க
குதுரையாட்டம்!

பாத்து நாளாச்சேன்னு
பரமசிவத்த
பாக்கப் போனா,
‘வாங்க,போங்கன்னு ‘
மருவாதயா கூப்புடறான்! ?
ஏன்டான்னு கேட்டாக்க
நீங்க படிச்சவுகன்னு
பிரிச்சு பேசுறான்.

புதுப்படம் பாத்து
நாளாச்சேன்னு,
திருட்டு சி.டி
எடுக்கப் போனா…,
இங்கிலீசு படமா தர்ரான்!,
நான் ஏதோ
இங்கிலாந்துல பொறந்தாப்புல!! ?

இந்தியால
தொலஞ்சு போன
நானும்,
என்னோட பேரும்,
எங்கே ?,என்னன்னு ?
எனக்கே தெரியலீங்க!!!
எழுதிக்கோங்க
N.R.I ,சாத்தூர்னு ? ?!

meenatchivasanth@rediffmail.com

Series Navigation

மீ.வசந்த்,சாத்தூர்.

மீ.வசந்த்,சாத்தூர்.