தேனீச்சை

This entry is part [part not set] of 44 in the series 20110109_Issue

ஹெச்.ஜி.ரசூல்முத்தமொன்றில் மிதந்து வந்தது
தேனீச்சையொன்று
இலைகளின் பச்சையை உடலெங்கும் பூசிய
நிர்வாணத்தின் முன்
அது மயங்கிக் கிடந்தது
விரக தாப வலி பொங்கி விம்ம
ஸபாமர்வா தொங்கோட்டம் ஓடி
களைத்துப் போன அதன் இருப்பு
மெல்லிதழ்களின் வருடலுக்காய் யாசித்து
தன் தவாபை தொடர்ந்தது.
மூச்சுக்கும் மூச்சுக்குமிடையே
பிறந்ததொரு அதிசயக் களிப்பில்
தேன்மணத்தை நாவால் தடவி
வனாந்திர வெளியில் நீந்திச் சென்று
சுவனத்தின் வாசலைத் தீண்டியது.
கூடடைய வழியுண்டா
முத்தமென்பதை
மரணமென்று புரிந்து கொள்ள
தேனீச்சைக்கு அனுபவம் போதவில்லை.

Series Navigation

ஹெச்.ஜி.ரசூல்

ஹெச்.ஜி.ரசூல்