திகட்டும் இசை
ராம்ப்ரசாத்

கீச்சுக்குரலில் பாடிக்கொண்டிருந்தது
அடுப்பு…
ஊதுகுழல் அதன் பாடலுக்கு
காதோரமாய் என்ன சொல்லிற்றோ…
வெட்கத்தில் சிவந்தது அடுப்பு…
தலைக்குமேல் உயர்த்திப் பிடித்திருந்த
பாத்திர இசைக் கருவியில்
கன நேரமும் தாளங்கள்…
இசை திகட்டும் வரை
கேட்கலாமென அமர்ந்திருக்கிறாள்
பெண்ணொருத்தி….
– ராம்ப்ரசாத் சென்னை (ramprasath.ram@googlemail.com)