சோகங்களின் விரல்கள்

This entry is part [part not set] of 33 in the series 20080710_Issue

கே.பாலமுருகன்



ஒவ்வொரு விரல்களும்
சுரண்டும் பாணியே
தனித்துவம்!

இரண்டாம் விரல்
உச்சந்தலையில் கிடக்க
மூன்றாம் விரல்
வாய்க்குள் நுழைந்து
உயிரை அசைக்கிறது!

உடல் முழுவதும்
பரவிய விரல்கள்
உயிரை அறுத்து
துண்டாக்கியது!

நான்காம் விரலின்
அபூர்வம்
இருதயத்தைப் பிளிந்து
குருதியை உறிவது!

ஐந்தாவது விரல்
பிறப்புருப்பில் ஊடுருவி
ஆண்மையைச் சேகரித்து
அடிவயிற்றைத் துழாவுகிறது!

நிமிர்த்த முடியாத
தேகத்தை
சோகத்தின் விரல்களிடம்
பறிக்கொடுத்துவிட்டு
மனம் பிதுங்கி
எரியும் உடலுடன்
மடிகிறேன்!

சோகப் பொழுதுகளில்
வெறொன்றும்
தெரிவதில்லை!

ஆக்கம்: கே.பாலமுருகன்
மலேசியா

bala_barathi@hotmail.com

Series Navigation

கே.பாலமுருகன்

கே.பாலமுருகன்