செம்மொழி மாநாட்டு – உலகளாவிய கவிதைப் போட்டி கவிஞர் ஹெச்.ஜி.ரசூலுக்கு பரிசு

This entry is part [part not set] of 35 in the series 20100905_Issueகோவையில் கடந்த ஜூன் மாதம் நடத்தப்பட்ட உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டையொட்டி, “சங்கத் தமிழ் அனைத்தும் தா’ என்ற தலைப்பில் உலகளாவிய கவிதைப் போட்டி நடத்தப்பட்டது. இதில் வெற்றி பெற்ற 8 பேருக்கு 17/8/2010 அன்று முதல்வர் கருணாநிதி பரிசுகளை வழங்கினார். போட்டியில் முதல் பரிசு பெற்ற புதுவை பல்கலையின் பாரதியார் தமிழியற்புல உதவிப் பேராசிரியர் ரவிக்குமாருக்கு முதல்
பரிசாக ஒரு லட்சம் ரூபாய் பரிசுடன் தங்கப்பதக்கம் வழங்கப்பட்டது. இரண்டாம் பரிசு, திருச்சி அண்ணா பல்கலையின் ஆங்கில விரிவுரையாளர் கண்மணிக்கு 75 ஆயிரம் ரொக்கப்பரிசுடன் தங்கப்பதக்கமும், மூன்றாம் பரிசாக, குமரி மாவட்டம் தக்கலை ரசூலுக்கு 50 ஆயிரம் ரூபாய் பரிசுடன் தங்கப்பதக்கமும் வழங்கப்பட்டது. இதுதவிர, ஆறுதல் பரிசுகளாக திண்டுக்கல் புலவர் துரை.முருகு, சென்னை
பூந்தமல்லி கவிஞர் குடந்தையான், சென்னை அடையாறு பாரதிபங்கன் என்ற பாலகிருட்டினன், மலேசியாவைச் சேர்ந்த தமிழ்மணி எல்லோன் என்ற கதிரேசன், பெரம்பலூர் அகரம் அமுதா என்ற சுதாகர் ஆகியோருக்கு தலா 10 ஆயிரம் வீதம் 50 ஆயிரம் ரூபாய் ரொக்கப் பரிசையும் முதல்வர் கருணாநிதி, தலைமைச் செயலகத்தில் வழங்கினார்.

கவிஞர் ஹெச்.ஜி.ரசூல் கன்னியாகுமரிமாவட்டம் தக்கலையைச் சேர்ந்தவர்.ஜனகணமன ,என் சிறகுகள்வான்வெளியில்,பூட்டிய அறை,மைலாஞ்சி உள்ளிட்ட கவிதைநூல்கள் வெளிவந்துள்ளன.புதுக்கவிதையில் நவீனபோக்குகள்,இஸ்லாமியப் பெண்ணியம்,அரபுமார்க்ஸியம்,குரானிய மொழியாடல்கள் மீள்வாசிப்பின் தருணம்,பின்நவீனத்துவ வாசிப்பில் இஸ்லாம்பிரதிகள்,கெண்டைமீன்குஞ்சும்குரான் தேவதையும்
உள்ளிட்ட திறனாய்வு நூல்களும் வெளிவந்துள்ளன்.ஏறத்தாழ 25 ஆண்டுகளுக்கும் மேலாக இலக்கியத்துறையில் செயல்பட்டு வருபவர்.திண்ணை இணைய இதழ்ல் தொடர்ந்து எழுதி வருபவர்.

கவிஞரின் முகவரி:ஹெச்.ஜி.ரசூல், 21/105 ஞானியார்வீதி,தக்கலை- 629175 குமரிமாவட்டம் அலைபேசி 9443172681 mylanchirazool@yahoo.co.in

Series Navigation

அறிவிப்பு

அறிவிப்பு