சித்தும் சித்தமும்!

This entry is part [part not set] of 42 in the series 20030615_Issue

வ.ந.கிரிதரன் –


‘இருப்புப் ‘ பாதையில்
விரைந்திடும்
காலவண்டித்
தொடரென
‘இடவெளி ‘க் குறுக்கு
வெட்டுகள்.
‘ஒளிக் கூம்புகளுக்குள் ‘
குடங்கிக் கிடத்தல்
வியப்பிற்குரியதல்ல
கிணறு
தாண்டாத் தவளையென.
‘இருப்புப் ‘ பாதை
இருக்கும்
புதிர்கள் நிறைந்ததொரு
இருப்பென. வியப்பென்னே!
இருப்புப் பாதையின்
அதிர்வுகள் நெஞ்சில்
ஏற்படுத்தும் கோடி அதிர்வலைகளை.
‘இருப் ‘பென்பதனாலா ?
யாத்திரையோ
‘அதிர்வுகளின் ‘
சித்து விளையாட்டா ? இல்லை
சித்த விளையாட்டா ?

ngiri2704@rogers.com

Series Navigation

வ.ந.கிரிதரன்

வ.ந.கிரிதரன்