சாகித்திய அகாதமி: நாகர்கோவில் நிகழ்ச்சி

This entry is part [part not set] of 36 in the series 20090904_Issue

சுப்ரபாரதி மணியன்


சதாவதானி செய்குத‌ம்பி பாவ‌ல‌ர் ப‌ற்றிய‌ க‌ருத்த‌ர‌ங்க‌ம் நாக‌ர்கோவில் இந்து கல்லூரியில்நடைபெற்றது. நெசவாளர்குடும்பத்தில் பிறந்தவர். சதாவதானியாக மிளிர்ந்து சைவ இலக்கியத்திலும் அக்கறை கொண்டிருந்தவர். உருவ வழிபாடா, சரஸ்வதி துதி பாடலா,முழு உருவ படமா என்று சர்ச்சையில் இருந்தவர். அவரின் படைப்புகள் பல் வேறு கோணங்களில் அமைந்திருந்தன.அவரின் குடும்பத்தைச் சார்ந்தவரிகள் பல‌ர் கலந்து கொண்டார்கள்.பொன்னீலன், தோப்பில் முகமது மீரான்,சிரிகுமார் ஆகியோரின் பேச்சுகள் கவனத்திற்குரியவை.சா அ. தென்னிந்திய செயலாளர் இளங்கோவனின் பேச்சு விரிவாக இருந்தது. பலரின் பேச்சு தயாரிப்பை வீணாக்கி விட்டது என்று சில கவலை கொண்டனர். என் பேச்சு பாவலரின் புலமையும், வறுமையும் என்பதாகும். சதாவதானத்தில் ஒரு அங்கமான சீட்டாட்டத்தில் அவரின் புலமை வறுமையோடு விளையாடியது என்பது என் மையமாக இருந்தது. சிற்பி பாலசுப்ரமணியன் பங்கு பெறவில்லை.

==

சிற்பி ரஸ்ய பயணம்
====================

சாகித்திய அகாதமியின் தமிழ் மாநில ஒருங்கிணைப்பாளர் சிற்பி பால சுப்ரமணியன் ரஸ்யப் பயணம் மேற்கொண்டிருக்கிறார். அங்கு நடைபெறும் உலக புத்தகக் கண்காட்சியில் பேசுகிறார்.பயணத்தில் பங்கு பெற்றிருக்கும் இன்னொரு தமிழ் எழுத்தாளர் பாமா ஆவார்.

=========================================================== ====================

எனது நூல்கள் மொழிபெயர்ப்பில்:
=============================
1. என் சாயத்திரை நாவலின் மலையாள மொழிபெயர்ப்பு ” சாயம் புரண்ட திர” திருவனந்தபுரம் “சிந்தா ” பதிப்பகம் வெளியிட்டுள்ளது. ரூ 85
. மொழிபெயர்த்த‌வர்: கோவையைச் சார்ந்த ஸ்டான்லி அவர்கள்.சாயத்திரையின் இந்தி, ஆங்கில மொழிபெயர்ப்புகள் முன்பு வெளியாகி இருக்கின்றன.

2. என‌து நாவ‌ல் ” பிண‌ங்க‌ளின் முக‌ங்க‌ள் ” ஆங்கில‌ மொழிபெய‌ர்ப்பில் ” The faces of the dead ” என்ற பெயரில் வெளிவந்திருக்கிறது. 220 பக்கங்கள். மொழிபெயர்த்தவர்: ஆர் பால கிருஸ்ணன், கோவை

Series Navigation

சுப்ரபாரதிமணியன்

சுப்ரபாரதிமணியன்