This entry is in the series 20101227_Issue

சிறி.ப.வில்லியம்ஸ்



ஒரு சில புனைவுகளுடன்
உனக்கான பதிலை
எப்போதும்
தயாராகவே வைத்திருக்கிறேன்
எதிர்பார்க்கையில்
மௌனமாயிருப்பதும்
என்றைக்காவது திடுமென
முற்றுகையிடுவதும்
உன் போர்த்தந்திரமென
புரிந்தே வைத்திருக்கிறேன்
ஒன்றுவிடாமல்
சோதனையிட்டும்
ஒரு தடயத்தைக்கூட
கண்டுபிடிக்கமுடியாத
உன்னிலை பரிதாபகரமானது
பரவாயில்லை
தொடர்ந்து முயற்சி செய்
உனக்கு எதுவும் கிடைக்காதவரை
மறைத்துக்கொண்டேதான் இருப்பேன் நானும்.
சிறி.ப.வில்லியம்ஸ்
kallakurichi

Series Navigation