This entry is in the series 20091015_Issue

செந்தில் கணேஷ் செண்பகமூர்த்தி


ஏதோ

யோசித்தபடியே

கசக்கிக் கொண்டிருந்த

கண்களின் இடுக்குகளில்

வந்து மறைந்து போனது

தன் பிஞ்சு கைகளை

அழகாய் அசைக்கும்

குழந்தை.

ரயில் திருப்ப இயலாமைகளிலும்

யாரோ ஒருவரின்

பதில் கையசைப்பின் அநேகத்துவத்திலும்

மீண்டும் விளையாட

திரும்பி இருக்கலாம் என்பதுமான

குழப்ப வெளியினூடே

மறைந்து போனது

என் பதில் கையசைப்பின்மையின்

உறுத்தல்கள்!

Series Navigation