கேள்விகள்

This entry is part [part not set] of 44 in the series 20110109_Issue

சு. கிரிஜா


============================================
முன்பு தாய், தந்தை உடன் இருக்கிறாய்
என்ற கேள்வி.
இப்போது கணவன் உடன் வரவில்லையா
என்ற கேள்வி.
எப்போதும் கேள்வி கேட்பதே
வழக்கம் போலும்.
வீட்டிலிருந்து பேருந்து நிறுத்தம் போகிற வரைக்கும்
பலரின் பார்வைகள், கேள்விகள்.
“ தனியா போறே.. பாவா எங்கே.. பாவா எங்கே”
முன்பெல்லாம் அது போன்று
“ தனியா போறே . அப்பா எங்கே, அம்மா எங்கே “
பாதுகாவலர் மாறியிருப்பது சந்தோசம்
பலரின் பார்வையும், கேள்வியும்
பரிமாறலும் சந்தோசமே..
பொது வழியென்றாலும் பதுகாப்பு வளையமே..

=

Suba089@yahoo.co.in

Series Navigation