குறிப்புகள்

This entry is part [part not set] of 47 in the series 20110430_Issue

ரவிசந்திரன்



1. வலி

பிரசவத்தில் ஏற்பட்ட வடு வலித்தது
முப்பது வருஷத்திற்கு பின் மகனின் சொல்

2. சாதனை

கருப்புக் கோட்டு அணிந்திருக்கும் மகளை பார்த்து
கங்கையென கண்ணீர் வந்து வேதனையை அலம்பியது

3. ஆனந்தம்

அமெரிக்காவிலும் தன் சாதியிலேயே
மருமகன் அமைந்தது.

4. மகிழ்ச்சி

தன் சொல்லிக் கேட்காத
சிக்கனத்தை தன் பேத்தி மகனிடம் சொன்னதை கேட்டு

5. துக்கம்

மாலையோடு தன்னுடன் வந்தவள் ,
மாலையோடு தான் இல்லாமல் போக பார்க்கும் போது

6. துயரம் (அரசியல் ஒட்டு வேட்டை)

சுனாமி நிவாரண பணியில் சுண்டு விரல் கூட அசைக்காதவர்கள் எல்லாம்
இப்பொழுது தேனியாய் இருப்பதை கண்டு

Series Navigation